முன்னிலை சோசலிசக் கட்சி
| முன்னிலை சோசலிசக் கட்சி | |
|---|---|
| Frontline Socialist Party පෙරටුගාමී සමාජවාදී පක්ෂය | |
| சுருக்கக்குறி | FSP |
| செயலாளர் நாயகம் | குமார் குணரத்தினம் |
| தொடக்கம் | 9 ஏப்ரல் 2012 |
| பிரிவு | மக்கள் விடுதலை முன்னணி |
| தலைமையகம் | மெல்டர் இடம், நுகேகொடை, இலங்கை[1] |
| செய்தி ஏடு | வம (பொருள்: "இடது"[2] |
| மாணவர் அமைப்பு | புரட்சிகர மாணவர் ஒன்றியம்[3] |
| இளைஞர் அமைப்பு | மாற்றத்திற்கான இளையோர்[4] |
| கொள்கை |
|
| அரசியல் நிலைப்பாடு | தீவிர இடதுசார்பு அரசியல் |
| தேசியக் கூட்டணி | மக்கள் போராட்டக் கூட்டணி |
| நிறங்கள் | சிவப்பு மஞ்சள் |
| தேர்தல் சின்னம் | |
சுத்தியல்![]() | |
| இணையதளம் | |
| www | |
| இலங்கை அரசியல் | |
முன்னிலை சோசலிசக் கட்சி (Frontline Socialist Party, சுருக்கம். FSP) என்பது இலங்கையில் இயங்கும் ஒரு பொதுவுடைமைக் கட்சியாகும்.[6] இது மக்கள் விடுதலை முன்னணியின் அதிருப்தி உறுப்பினர்களால் 2012 ஏப்ரல் 9 அன்று தொடங்கப்பட்டது.[7][8][9] கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரத்தினம் ஆவார்.
சம உரிமை இயக்கம் என்கின்ற ஒரு முன்னணி அமைப்பினூடாக, இலங்கையில் இன ஒடுக்குமுறைக்கும், இனவாதத்திற்கும் எதிராக போராடுவது, இனங்களுக்கிடையில் ஓர் ஐக்கியத்தை உருவாக்குவதுடன், சமத்துவமின்மையை உருவாக்கிய சமூக அமைப்பு முறையை தூக்கி எறிந்து புதிய சமூக அமைப்பு முறையை உருவாக்குவதன் மூலம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகளை வென்றெடுப்பது என்னும் செயல் திட்டத்தினை முன்னிலை சோசலிச கட்சி முன்வைத்துள்ளது.[10]
சம உரிமைக்கான இயக்கத்தின் இரு உறுப்பினர்கள் லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 9 இல் யாழ்ப்பாணத்தில் வைத்துக் காணாமல் போனார்கள். இவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை அறியப்படவில்லை.[11] இவர்கள் இலங்கையில் காணாமல் போனதற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சியினர் போராட்டங்கள் பல நடத்தி வருகிறார்கள்.
வரலாறு
[தொகு]குமார் குணரத்தினம் திருகோணமலையில் தேசபிரேமி ஜனதா வியாபரய என்ற அமைப்பின் தலைவராகவும், மகக்ள் விடுதலை முன்னணியின் இரண்டாம் நிலை புரட்சிகரத் தலைவராகவும் பணியாற்றினார். 1989-இல் விஜயவீரவின் மரணத்திற்குப் பிறகு கட்சியில் புரட்சிகர நோக்கம் இல்லாததால் அவர் கட்சியுடன் முரண்பட்டார்.
ஏப்ரல் 2012 இல், கடும்போக்கு சோசலிசவாதியான குணரத்தினத்திற்கும், கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்கவிற்கும் இடையே கட்சிக்குள் உட்கட்சி நெருக்கடி தீவிரமடைந்தது. இதன் விளைவாக, பெரும்பாலான உறுப்பினர்கள் குணரத்தினத்திற்கு தங்கள் ஆதரவை நீட்டித்தவுடன் கட்சியின் ஊடகப் பிரிவு மூடப்பட்டது. மகளிர் பிரிவு,[12] மாணவர் பிரிவு, இளைஞர் பிரிவுகளின் பெரும்பான்மையானவர்கள் குணரத்தினத்திற்கு தங்கள் ஆதரவைத் தந்தனர்.[13]
2020 எதிர்ப்புப் போராட்டங்கள்
[தொகு]2020-இல், கட்சியின் உறுப்பினர்கள் வேறு சில இடதுசாரிக் கட்சிகளுடன் சேர்ந்து இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன் போராட்டங்களை நடத்தினர், ஆனால் பின்னர் அவர்கள் கோவிட்-19 "சுகாதார விதிமுறைகளை" மீறியதாகக் கூறி காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டனர்.[14] சியார்ச்சு பிளாய்டின் கொலைக்கு எதிராக, இந்தப் போராட்டம் ஒரு அமைதியான போராட்டம் என்று கட்சி உறுப்பினர்கள் கூறினர். காவல்துறையினரின் தாக்குதலில் பலர் காயமடைந்தனர். [15] தாக்குதலுக்குப் பிறகு முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் குமார் குணரத்தினம், பிற முக்கிய உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கைதுக்கான காரணம் குறித்து காவல்துறையிடம் கேள்வி எழுப்பிய இரண்டு வழக்கறிஞர்களும் காவலில் எடுக்கப்பட்டனர்.[16][15]
கட்சியின் தேர்தல் வரலாறு
[தொகு]| தேர்தல் ஆண்டு | வேட்பாளர் | வாக்குகள் | வாக்கு % | முடிவு |
|---|---|---|---|---|
| 2015 | துமிந்த நாகமுவ | 9,941 | 0.08% | தோல்வி |
| 2019 | துமிந்த நாகமுவ | 8,219 | 0.06% | தோல்வி |
| 2024 | நுவான் போப்பகே | 11,191 | 0.08% | தோல்வி |
| தேர்தல் ஆண்டு | வாக்குகள் | வாக்கு % | வென்ற இடங்கள் | +/– |
|---|---|---|---|---|
| 2015 | 7,349 | 0.07% | 0 / 225
|
|
| 2020 | 14,522 | 0.13% | 0 / 225
|
|
| 2024 | 29,611 | 0.27% | 0 / 225
|
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Address". Archived from the original on 2020-02-01. Retrieved 2020-02-01.
- ↑ "News Paper". Archived from the original on 2021-02-27. Retrieved 2020-02-01.
- ↑ "Student Wing". Archived from the original on 2021-03-07. Retrieved 2020-02-01.
- ↑ "Youth Wing". Archived from the original on 2021-03-02. Retrieved 2020-02-01.
- ↑ "Women's wing". Archived from the original on 2021-03-07. Retrieved 2020-02-01.
- ↑ "List of recognized political parties" (PDF). Department of Elections, Sri Lanka. 6 July 2015. Archived from the original (PDF) on 12 July 2015.
- ↑ Hughes, Dhana (2013). Violence, Torture and Memory in Sri Lanka: Life After Terror. Routledge. p. 14. ISBN 978-1135038151.
- ↑ "Frontline socialist party launched without Gunaratnam". Sri Lanka Guardian. 9 April 2012 இம் மூலத்தில் இருந்து 9 September 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190909215709/http://www.srilankaguardian.org/2012/04/frontline-socialist-party-launched.html.
- ↑ முன்னிலை சோசலிசக் கட்சியும் புதிய திசைகளும்: புதிய திசைகள்
- ↑ "Disappeared Kugan And Lalith Still Missing Civil Administration Or Military Rule?". Archived from the original on 2012-01-20. Retrieved 2013-02-02.
- ↑ "Women's wing". Archived from the original on 2020-02-01. Retrieved 2020-02-01.
- ↑ "Newly formed Front-line Party". Archived from the original on 2019-09-17. Retrieved 2020-09-18.
- ↑ Protests 2020, 9 June 2020
- ↑ 15.0 15.1 "Anti-racism". Archived from the original on 2020-08-12. Retrieved 2020-09-15.
- ↑ "2020 results". Archived from the original on 2024-05-29. Retrieved 2024-12-23.
