இலங்கை சனாதிபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
{{{body}}} இலங்கை சனாதிபதி
President of Sri Lanka
ශ්‍රී ලංකා ජනාධිපති
Emblem of Sri Lanka.svg
இலங்கையின் சின்னம்
Flag of Sri Lanka.svg
Nandasena Gotabaya Rajapaksa.jpg
தற்போது
கோட்டாபய ராஜபக்ச

18 நவம்பர் 2019 முதல்
உறுப்பினர்அமைச்சரவை
தேசிய பாதுகாப்புப் பேரவை
வாழுமிடம்சனாதிபதி மாளிகை
Seatகொழும்பு
நியமிப்பவர்நேரடித் தேர்தல்
பதவிக் காலம்ஐந்து ஆன்டுகள், ஒரு தடவை புதுப்பிக்கத்தக்கது
Constituting instrumentஇலங்கையின் அரசியலமைப்புச் சட்டம்
முதலாவதாக பதவியேற்றவர்வில்லியம் கோப்பல்லாவ
1972 அரசியலமைப்பின் படி
முதலாவது சனாதிபதி

ஜே. ஆர். ஜெயவர்தனா
1978 அரசியலமைப்பின் படி
முதலாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவர்
உருவாக்கம்22 மே 1972; 50 ஆண்டுகள் முன்னர் (1972-05-22)
4 பெப்ரவரி 1978; 44 ஆண்டுகள் முன்னர் (1978-02-04)
ஊதியம்இல.ரூ 1,170,000 ஆண்டுக்கு (2016) (≈ $7,640)[1]
இணையதளம்சனாதிபதி
சனாதிபதி செயலகம்

இலங்கை மக்களாட்சி சோசியலிசக் குடியரசின் அரசுத்தலைவர் (President of Democratic Socialist Republic of Sri Lanka) அல்லது இலங்கை சனாதிபதி இலங்கை அரசின் தலைவரும் முக்கிய அரசியல் தலைவருமாவார். இப்பதவி 1978 இல் உருவாக்கப்பட்டது. அது முதல் இப்பதவிக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசுத்தலைவர் பதவி நிறைவேற்றதிகாரம் கொண்ட பதவியாக காணப்படுவதனால் அதன் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகின்றது. தற்போதய இலங்கை அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஆவார்.

இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை[தொகு]

இலங்கை சுதந்திரம் அடைந்தபோது சனாதிபதியொருவர் காணப்படவில்லை. நிறைவேற்றதிகாரம் பிரதமரிடமும் titular அதிகாரம் ஆளுனரிடமும் காணப்பட்டது. 1972 அரசியலமைப்பு சட்டம் ஆளுனரை சனாதிபதி பதவிக்கு மாற்றியது எனினும் சனாதிபதி பதவி அதிகாரங்கள் அற்ற பதவியாகவே காணப்பட்டது. 1978 அரசியலமைச் சட்டத்தில் வெஸ்மினிஸ்டர் முறை பிரெஞ்சு முறையால் மாற்றீடு செய்யப்பட்டது. தனி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும், பாராளுமன்றத்தைச் சாராத நீண்ட ஆட்சிக்காலத்தைக் கொண்ட, அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை உருவாகப்பட்டது. சனாதிபதி முப்படைகளினதும் கட்டளைத்தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரமும், பாராளுமன்றத்தை களைக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது.

இலங்கையின் சனாதிபதி முறைமை பிரான்சின் சனாதிபதி முறைமையைவிட அதிகாரம் கூடியதாக காண்ப்படுகிறது. இலங்கையின் சனாதிபதி இலங்கை அரசின் எல்லா நடைமுறைகளிலும் ஈடுபடக்கூடியதாக உள்ளது. அமைச்சரவை அதிகாரங்களை சனாதிபதி செயளாலருக்கு வழங்குவதன் மூலம் கடந்துச் செல்ல முடியும்.

சனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரமுடியாது. ஆனால் பாராளுமன்றத்தின் மூன்றில்-இரண்டு பெரும்பான்மையினரின் அதிகாரத்தால் பதவி விழக்க முடியும். நாட்டில் அவசரகாலசட்டத்தை பிரப்பிக்க முடியும் இதன் பொது சனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. 1994 சனாதிபதி தேர்தலின் போது சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதவியை நீக்குவதாக வாக்களித்தார், எனினும் இது நடைமுறை படுத்தவில்லை. இலங்கையில் சனாத்பதிமுறைமை நீக்கபட வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகின்றது. 2015.01.08 ஆம் திகதி நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் இலங்கையின் 7ஆவது சனாதிபதியாக 51.28% வாக்குகளைப் பெற்று மைத்திரிபால சிரிசேன சனாதிபதியாக 2015.01.09 இல் தெரிவுசெய்யப்பட்டார்.

அதிகாரங்களும் விதிமுறைகளும்[தொகு]

சனாதிபதிகளின் பட்டியல்[தொகு]

இலங்கையின் சனாதிபதிகளின் பட்டியல்.

கடைசித் தேர்தல்[தொகு]

[உரை] – [தொகு]
26 நவம்பர் 2019 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள்[2]
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
கோட்டாபய ராஜபக்ச   இலங்கை பொதுசன முன்னணி 6,924,255 52.25%
சஜித் பிரேமதாச   புதிய சனநாயக முன்னணி 5,564,239 41.99%
அனுர குமார திசாநாயக்க   மக்கள் சக்திக்கான தேசிய இயக்கம் 418,553 3.16%
மகேசு சேனநாயக்க தேசிய மக்கள் கட்சி 49,655 0.37%
எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா   சுயேச்சை 38,814 0.29%
ஆரியவன்ச திசாநாயக்க சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி 34,537 0.26%
அஜந்தா பெரேரா இலங்கை சோசலிசக் கட்சி 27,572 0.21%
ரொகான் பல்லேவத்த தேசிய அபிவிருத்தி முன்னணி 25,173 0.19%
சிறிபால அமரசிங்க   சுயேச்சை 15,285 0.12%
மில்ரோய் பெர்னாண்டோ   சுயேச்சை 13,641 0.10%
ம. க. சிவாஜிலிங்கம்   சுயேச்சை 12,256 0.09%
பத்தரமுல்ல சீலாரத்தன சன செத்த பெரமுன 11,879 0.09%
அஜந்தா டி சொய்சா ருகுணு மக்கள் முன்னணி 11,705 0.09%
அநுருத்த பொல்கம்பொல   சுயேச்சை 10,219 0.08%
நாமல் ராசபக்ச   தேசிய ஐக்கிய கூட்டணி 9,497 0.07%
ஜெயந்தா கெட்டகொட   சுயேச்சை 9,467 0.07%
துமிந்த நாகமுவ   முன்னிலை சோசலிசக் கட்சி 8,219 0.06%
அபரெக்கே புன்னானந்த   சுயேச்சை 7,611 0.06%
சுப்பிரமணியம் குணரத்தினம் நமது தேசிய முன்னணி 7,333 0.06%
ஏ. எசு. பி. லியனகே இலங்கை தொழில் கட்சி 6,447 0.05%
பியசிறி விஜேநாயக்க   சுயேச்சை 4,636 0.04%
அருணா டி சொய்சா சனநாயக தேசிய இயக்கம் 4,218 0.03%
ரஜீவ விஜேசிங்க   சுயேச்சை 4,146 0.03%
இல்லியாசு இத்ரூசு முகமது   சுயேச்சை 3,987 0.03%
சிறிதுங்க ஜயசூரிய   ஐக்கிய சோசலிசக் கட்சி 3,944 0.03%
சரத் கீர்த்திரத்தின   சுயேச்சை 3,599 0.03%
சரத் மனமேந்திரா புதிய சிங்கள மரபு 3,380 0.03%
பானி விஜேசிறிவர்தன   சோசலிச சமத்துவக் கட்சி 3,014 0.02%
அசோகா வதிகமன்கவ   சுயேச்சை 2,924 0.02%
ஏ. எச். எம். அலவி   சுயேச்சை 2,903 0.02%
சமன் பெரேரா மக்கள் கட்சியின் நமது சக்தி 2,368 0.02%
பிரியந்த எதிரிசிங்க ஒக்கம வேசியோ ஒக்கம ரஜவரு சன்விதானய 2,139 0.02%
சமரவீர வீரவன்னி   சுயேச்சை 2,067 0.02%
பெத்தே கமகே நந்திமித்திரா   நவ சமசமாஜக் கட்சி 1,841 0.01%
சமன்சிறி ஹேரத்   சுயேச்சை 976 0.01%
செல்லுபடியான வாக்குகள் 13,252,499 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 135,452 1.01%
மொத்த வாக்குகள் 13,387,951 83.72%
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 15,992,096


உசாத்துணை[தொகு]

  1. Thomas, Kris (21 November 2016). "Of Ministers' Salaries And Parliamentary Perks". Roar.lk. 30 August 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Presidential Election - 2019: Final Result - All Island". news.lk (Colombo, Sri Lanka: Department of Government Information). https://elections.news.lk/. பார்த்த நாள்: 17 November 2019. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_சனாதிபதி&oldid=2899326" இருந்து மீள்விக்கப்பட்டது