உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2019

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2019 இலங்கை அரசுத்தலைவர் தேர்தல்

← 2015 நவம்பர் 16, 2019 2022 →
பதிவு செய்தோர்15,992,096
வாக்களித்தோர்13,387,951 (83.72%)
  Gotabaya Rajapaksa Sajith Premadasa Anura Kumara Dissanayaka
வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச சஜித் பிரேமதாச அனுர குமார திசாநாயக்க
கட்சி இலங்கை பொதுசன முன்னணி ஐக்கிய தேசியக் கட்சி மக்கள் விடுதலை முன்னணி
கூட்டணி - புதிய சனநாயக முன்னணி தேசிய மக்கள் சக்தி
வென்ற மாநிலங்கள் 16 6 0
மொத்த வாக்குகள் 6,924,255 5,564,239 418,553
விழுக்காடு 52.25% 41.99% 3.16%

வென்ற தேர்தல் தொகுதிகள்

– கோட்டாபய ராஜபக்ச

– சஜித் பிரேமதாச

முந்தைய அரசுத்தலைவர்

மைத்திரிபால சிறிசேன
இலங்கை சுதந்திரக் கட்சி

அரசுத்தலைவர் -தெரிவு

கோட்டாபய ராஜபக்ச
இலங்கை பொதுசன முன்னணி

2019 இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் (2019 Sri Lankan presidential election) இலங்கையின் 7-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்க 2019 நவம்பர் 16 இல் நடைபெற்ற தேர்தல் ஆகும்.[1][2] நடப்பு அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 2020 சனவரி 9 இல் முடிவடைய இருந்த நிலையில், தேர்தல் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.[2] இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக நடப்பு அரசுத்தலைவர் ஒருவரோ, பிரதமர் ஒருவரோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரோ அரசுத்தலைவராகப் போட்டியிடுவதைத் தவிர்த்தனர்.[3]

2019 நவம்பர் 17 இல் அதிகாரபூர்வமான இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, இலங்கை பொதுசன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச 52.25% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 41.99% வாக்குகளைப் பெற்றார்.[4] கோட்டாபய ராசபக்ச இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஐந்து மாவட்டங்கள், மலையகத்தின் நுவரெலியா மாவட்டம் ஆகியவை தவிர்ந்த ஏனைய 16 மாவட்டங்களிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கோட்டாபய ராசபக்ச 2019 நவம்பர் 18 அன்று அதிகாரபூர்வமாக இலங்கையின் 7-வது அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.

காலக்கோடு

[தொகு]
2018
2019
 • 9 சனவரி - மைத்திரிபால சிறிசேன அரசுத்தலைவர் தேர்தலை எந்நேரமும் அறிவிக்க அரசியலமைப்புப்படி அதிகாரம் பெற்றார்.[2]
 • 31 சனவரி - இலங்கை சுதந்திரக் கட்சியின் அனுராதபுரம் மாநாட்டில் கட்சியின் அடுத்த அரசுத்தலைவர் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன றிவிக்கப்பட்டார்.[5][6]
 • 6 மார்ச் - கோத்தாபய ராஜபக்ச தனது ஐக்கிய அமெரிக்க குடியுரிமையை நீக்கக் கோரி அமெரிக்கத் தூதரகத்தில் மனு சமர்ப்பித்தார்.[7]
 • 7 ஏப்ரல் - அமெரிக்காவில் கோத்தாபய ராசபக்ச தங்கியிருந்த போது, அவருக்கு எதிராக ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாகவும், இலங்கையில் சித்திரவதைக்குள்ளான ரோய் சமாதானம் என்ற இலங்கைத் தமிழர் சார்பாகவும் இரண்டு பதிவு செய்யப்பட்டன.[8][9]
 • 21 ஏப்ரல் - 2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்
 • 27 ஏப்ரல் - கோத்தாபய ராசபக்ச தான் அடுத்த அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.[10]
 • 11 ஆகத்து - மகிந்த ராசபக்சவின் இலங்கை பொதுசன முன்னணி கட்சி கோத்தாபய ராசபக்சவை கட்சியின் வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவித்தது.[11]
 • 12 ஆகத்து - ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் இணைந்து பதுளையில் சஜித் பிரேமதாசவை ஐதேகவின் வேட்பாளராக அறிவிக்கக்கோரி பெரும் கூட்டம் ஒன்றை நடத்தினர்.[12]
 • 18 ஆகத்து - மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க "தேசிய மக்கள் சக்தி" என்ற புதிய கூட்டணியின் சார்பாக காலிமுகத் திடலில் இடம்பெற்ற கூட்டத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.[13]
 • 23 ஆகத்து - மாத்தறையில் மங்கள சமரவீரவின் ஏற்பாட்டில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக மாபெரும் கூட்டம் நடைபெற்றது.
 • 05 செப்டம்பர் - குருணாகலையில் சஜித்திற்கு ஆதரவாக பெரும் கூட்டம் நடைபெற்றது.
 • 18 செப்டம்பர் - நவம்பர் 16 இல் அரசுத்தலைவர் தேர்தல் நடைபெறும் எனவும், அக்டோபர் 7 இல் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையம் அறிவித்தது.
 • 24 செப்டம்பர் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்ப்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை நியமிக்க ஒப்புக் கொண்டார்.[14]
 • 26 செப்டம்பர் - ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கட்சி அலுவலகமான சிறீகொத்தாவில் கூடி சஜித் பிரேமதாசாவை வேட்பாளராக ஏகமனதாகத் தேர்ந்தெடுத்தது.[15]
 • 29 செப்டம்பர் - இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி மகேசு சேனநாயக்கா தேசிய மக்கள் இயக்கம் என்ற அரசியல்-சாரா இயக்கம் சார்பாக போட்டியிடவிருப்பதாக அறிவித்தார்.[16]
 • 3 அக்டோபர் - ஐக்கிய தேசியக் கட்சி தனது தேசிய மாநாட்டை நடத்தி சஜித் பிரேமதாசவை வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவித்தது.[17]
 • 4 அக்டோபர் - கோத்தாபய இராசபக்சவின் இலங்கைக் குடியுரிமை தொடர்பாக மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் காமினி பியாங்கொடை, பேரா. சந்திரகுப்தா தேனுவர ஆகியோரால் தொடரப்பட்ட வழக்கை மூவரடங்கிய நீதிபதிகள் குழு தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கி, அவரை தேர்தலில் போட்டியிட அனுமதித்தது.[18][19]
 • 5 அக்டோபர் - அரசுத்தலைவர் வேட்பாளர்கள் கலந்து கொண்ட வரலாற்றில் முதலாவது விவாதம் நடைபெற்ரது.[20] கோத்தாபய இராசபக்ச தவிர்ந்த ஏனைய அனைவரும் இவ்விவாதத்தில் கலந்து கொண்டனர்.[21]
 • 6 அக்டோபர் - வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் மதியம் 12:00 மணியுடன் நிறைவடைந்தது. 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்.
 • 7அக்டோபர் - வேட்புமனுக்கள் காலை 9:00 முதல் 11:00 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன. 35 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.[22]
 • 9 அக்டோபர் - இலங்கை சுதந்திரக் கட்சி பொதுசன முன்னணி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது.[23]
 • 15 அக்டோபர் - சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க முடிவு செய்தது.[24]
 • 18 அக்டோபர் - இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுசன முன்னணி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது.[25]
 • 18 அக்டோபர் - ஜாதிக எல உறுமய தனது தேசிய மாநாட்டில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவை அறிவித்தது.[26]
 • 4 நவம்பர் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.[27]
 • 5 நவம்பர் - இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அரசுத்தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார்.[28][29]
 • 16 நவம்பர் - அரசுத்தலைவர் தேர்தல் வாக்களிப்பு காலை 7.00 முதல் மாலை 5.00 வரை இடம்பெற்றது.[30]
 • 17 நவம்பர் - மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது ஆட்சிக்காலம் அதிகாரபூர்வமாக நிறைவு பெற்றது.[2]
 • 18 நவம்பர் - புதிய அரசுத்தலைவராக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றார்.

வாக்கெடுப்பு முறை

[தொகு]

இலங்கை அரசுத்தலைவர் (ஜனாதிபதி) விருப்பு வாக்கு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். வாக்காளர்கள் அதிக பட்சம் மூவருக்குத் தமது விருப்பு வாக்குகளை இடலாம். குறைந்தது 50% இற்கும் அதிகமான வாக்குகள் பெற்றவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். முதற்கட்ட வாக்கெடுப்பில் எவரும் 50% இற்கும் அதிகமான வாக்குகள் பெறத் தவறினால், அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்குத் தெரிவு செய்யப்படுவர். இரண்டாம் கட்டப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளில் இருந்து 2-ஆம், 3-ஆம் விருப்பத் தெரிவாக இரண்டாம் கட்டப் போட்டியில் நிற்கும் இரண்டு வேட்பாளர்களுக்குமுரிய வாக்குகள் எண்ணப்பட்டு அவர்களின் முதலாம் கட்ட எண்ணிக்கையுடன் கூட்டப்பட்டு, அதிக வாக்குகள் பெறுபவர் வெற்றியாளராகத் தீர்மானிக்கப்படுவார்.

தேர்தலுக்கு முன்னரான நிலைமை

[தொகு]
அண்மைக்கால இலங்கைத் தேர்தல் முடிவுகள்
தேர்தல் நாட்கள் ஐக்கிய தேசியக் கட்சி
(ஐதேமு)
இலங்கை சுதந்திரக் கட்சி
(ஐமசுகூ)
இலங்கை பொதுசன முன்னணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் விடுதலை முன்னணி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு சுயேட்சைகள்
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
2015 அரசுத்தலைவர் தேர்தல் 6,217,162 51.28% [கு 1] 5,768,090 47.58%
2015 நாடாளுமன்றத் தேர்தல் 5,098,916 45.66% [கு 2] 4,732,664 42.38% 515,963 4.62% 543,944 4.87% 44,193 0.40% 42,828 0.38%
2018 உள்ளூராட்சி தேர்தல்கள் 3,640,620 29.42% 1,497,234 12.10% 5,006,837 40.47% 337,877 2.73% 710,932 5.75% 92,897 [கு 3] 0.75% 374,132 3.02%
தேர்தலுக்கு முந்தைய அரசியல் நிலவரம்
அரசுத்தலைவர் தேர்தல், 2015 நாடாளுமன்றத் தேர்தல், 2015
மவட்டங்கள் அல்லது மாநகர வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அதிக வாக்குகள் பெற்றவர்கள்.

வேட்பாளர்கள்

[தொகு]

35 வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை 2019 அக்டோபர் 7 இல் தேர்தல்கள் ஆணையகத்தில் பதிந்தனர்.[31]

வேட்பாளர் கட்சி ஆதரவுக் கட்சிகள் குறிப்புகள்
1 சஜித் பிரேமதாச புதிய சனநாயக முன்னணி ஐக்கிய தேசியக் கட்சி
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு
அகில இலங்கை மக்கள் காங்கிரசு
ஜாதிக எல உறுமய
தமிழ் முற்போக்குக் கூட்டணி
முன்னாள் இலங்கை சனாதிபதி, ரணசிங்க பிரேமதாசாவின் மகன்
ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் (2014-இன்று)
வீடமைப்பு நிர்மாணத்துறை, கலாசார அலுவல்கள் அமைச்சர் (2015-இன்று)
சுகாதாரத்துறை பிரதி அமைச்சர் (2001-2004)
2 கோத்தாபய ராஜபக்ச இலங்கை பொதுசன முன்னணி இலங்கை பொதுசன முன்னணி
இலங்கை சுதந்திரக் கட்சி
மகாஜன எக்சத் பெரமுன
தேசிய சுதந்திர முன்னணி
பிவிதுரு எல உருமய
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
சனநாயக இடது முன்னணி
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்[32]
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்[32]
முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் சகோதரர்
பாதுகாப்பு, நகர அபிவிருத்தி செயலாளர் (2005-2015)
3 அனுர குமார திசாநாயக்க தேசிய மக்கள் சக்தி மக்கள் விடுதலை முன்னணி
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
மக்கள் விடுதலை முன்னணி தலைவர் (2014-இன்று)
4 ம. க. சிவாஜிலிங்கம் சுயேச்சை யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (2001–2010)

டெலோ உறுப்பினர்

5 எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா சுயேச்சை கிழக்கு மாகாண ஆளுநர் (3 சனவரி - 3 சூன் 2019)
6 சுப்பிரமணியம் குணரத்தினம் நமது தேசிய முன்னணி
7 மகேசு சேனநாயக்கா தேசிய மக்கள் கட்சி தேசிய மக்களுக்கான இயக்கம் முன்னாள் இராணுவத் தளபதி (2017-2019)
8 அஜந்தா பெரேரா இலங்கை சோசலிசக் கட்சி நிறுவனர், திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்தலுக்கான தேசியத் திட்டம்[33][34]
9 உரொகான் பல்லேவத்த தேசிய அபிவிருத்தி முன்னணி அபிமான் லங்கா[35] இலங்கை ஆர்னசு கம்பனியின் நிருவாக இயக்குநர்
10 துமிந்த நாகமுவ முன்னிலை சோசலிசக் கட்சி முன்னிலை சோசலிசக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்

2015 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 9,941 வாக்குகள் பெற்றார்..

11 ஜயந்த கேட்டகொட சுயேச்சை
12 சிறிபால அமரசிங்க[36] சுயேச்சை
13 அப்பரெக்கே புன்னானந்த தேரோ சுயேச்சை
14 சமன் பெரேரா மக்களின் நமது சக்தி கட்சி
15 ஆரியவன்ச திசாநாயக்க சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
16 சிறிதுங்க ஜயசூரிய ஐக்கிய சோசலிசக் கட்சி
17 மில்ரோய் பெர்னாண்டோ சுயேச்சை
18 பெத்தே கமகே நந்திமித்ரா நவ சமசமாஜக் கட்சி
19 வஜிராபணி விஜேசிறிவர்தன சோசலிச சமத்துவக் கட்சி
20 சரத் மனமேந்திரா நவ சிகல உறுமய
21 ஏ. எசு. பி. லியனகே இலங்கை தொழிற் கட்சி
22 சமன்சிறி ஏரத் சுயேச்சை
23 சரர்த் கீர்த்திரத்தினா சுயேச்சை
24 அனுருத்த பொல்கம்பொல சுயேச்சை
25 சமரவீர வீரவன்னி சுயேச்சை
26 அசோகா வதிகமன்காவ சுயேச்சை
27 பத்தரமுல்லே சீலாரத்தன தேரோ சன செத்த பெரமுன
28 இலியாசு இந்த்ரூசு முகமது சுயேச்சை
29 பியசிறி விஜேநாயக்க சுயேச்சை
30 ரஜீவ விஜயசிங்க சுயேச்சை
31 அருண டி சொய்சா சனநாயக தேசிய இயக்கம்
32 அஜன்ந்தா டி சொய்சா ருகுனு மக்கள் முன்னணி
33 நாமல் ராஜபக்ச[கு 4] தேசிய ஐக்கிய அமைப்பு
34 பிரியந்த எதிரிசின்க ஒக்கொம வேசியோ ஒக்கம ரஜவரு சன்விதானய
35 அசன் முகம்மது அலவி சுயேச்சை

முடிவுகள்

[தொகு]

தேசிய வாரியாக முடிவுகள்

[தொகு]
[உரை] – [தொகு]
26 நவம்பர் 2019 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள்[37]
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
கோட்டாபய ராஜபக்ச   இலங்கை பொதுசன முன்னணி 6,924,255 52.25%
சஜித் பிரேமதாச   புதிய சனநாயக முன்னணி 5,564,239 41.99%
அனுர குமார திசாநாயக்க   மக்கள் சக்திக்கான தேசிய இயக்கம் 418,553 3.16%
மகேசு சேனநாயக்க தேசிய மக்கள் கட்சி 49,655 0.37%
எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா   சுயேச்சை 38,814 0.29%
ஆரியவன்ச திசாநாயக்க சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி 34,537 0.26%
அஜந்தா பெரேரா இலங்கை சோசலிசக் கட்சி 27,572 0.21%
ரொகான் பல்லேவத்த தேசிய அபிவிருத்தி முன்னணி 25,173 0.19%
சிறிபால அமரசிங்க   சுயேச்சை 15,285 0.12%
மில்ரோய் பெர்னாண்டோ   சுயேச்சை 13,641 0.10%
ம. க. சிவாஜிலிங்கம்   சுயேச்சை 12,256 0.09%
பத்தரமுல்ல சீலாரத்தன சன செத்த பெரமுன 11,879 0.09%
அஜந்தா டி சொய்சா ருகுணு மக்கள் முன்னணி 11,705 0.09%
அநுருத்த பொல்கம்பொல   சுயேச்சை 10,219 0.08%
நாமல் ராசபக்ச   தேசிய ஐக்கிய கூட்டணி 9,497 0.07%
ஜெயந்தா கெட்டகொட   சுயேச்சை 9,467 0.07%
துமிந்த நாகமுவ   முன்னிலை சோசலிசக் கட்சி 8,219 0.06%
அபரெக்கே புன்னானந்த   சுயேச்சை 7,611 0.06%
சுப்பிரமணியம் குணரத்தினம் நமது தேசிய முன்னணி 7,333 0.06%
ஏ. எசு. பி. லியனகே இலங்கை தொழில் கட்சி 6,447 0.05%
பியசிறி விஜேநாயக்க   சுயேச்சை 4,636 0.04%
அருணா டி சொய்சா சனநாயக தேசிய இயக்கம் 4,218 0.03%
ரஜீவ விஜேசிங்க   சுயேச்சை 4,146 0.03%
இல்லியாசு இத்ரூசு முகமது   சுயேச்சை 3,987 0.03%
சிறிதுங்க ஜயசூரிய   ஐக்கிய சோசலிசக் கட்சி 3,944 0.03%
சரத் கீர்த்திரத்தின   சுயேச்சை 3,599 0.03%
சரத் மனமேந்திரா புதிய சிங்கள மரபு 3,380 0.03%
பானி விஜேசிறிவர்தன   சோசலிச சமத்துவக் கட்சி 3,014 0.02%
அசோகா வதிகமன்கவ   சுயேச்சை 2,924 0.02%
ஏ. எச். எம். அலவி   சுயேச்சை 2,903 0.02%
சமன் பெரேரா மக்கள் கட்சியின் நமது சக்தி 2,368 0.02%
பிரியந்த எதிரிசிங்க ஒக்கம வேசியோ ஒக்கம ரஜவரு சன்விதானய 2,139 0.02%
சமரவீர வீரவன்னி   சுயேச்சை 2,067 0.02%
பெத்தே கமகே நந்திமித்திரா   நவ சமசமாஜக் கட்சி 1,841 0.01%
சமன்சிறி ஹேரத்   சுயேச்சை 976 0.01%
செல்லுபடியான வாக்குகள் 13,252,499 100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 135,452 1.01%
மொத்த வாக்குகள் 13,387,951 83.72%
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 15,992,096


மாவட்ட வாரியாக முடிவுகள்

[தொகு]
கோட்டாபய ராஜபக்ச வென்ற மாவட்டங்கள்
சஜித் பிரேமதாச வென்ற மாவட்டங்கள்
மாவட்டங்கள் வாரியாக 2019 இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் முடிவுகள்[38]
தேர்தல்
மாவட்டம்
மாகாணம் ராஜபக்ச பிரேமதாச ஏனையோர் செல்லுபடி
யானவை
நிராகரிக்
கப்பட்டவை
மொத்த
வாக்குகள்
பதிவான
வாக்காளர்கள்
வாக்குவீதம்
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
பதுளை ஊவா 276,211 49.29% 251,706 44.92% 32,428 5.79% 560,345 6,978 567,323 657,766 86.25%
மொனராகலை ஊவா 208,814 65.34% 92,539 28.95% 18,251 5.71% 319,604 3,000 322,604 366,524 88.02%
அம்பாறை கிழக்கு 135,058 32.82% 259,673 63.09% 16,839 4.09% 411,570 3,158 414,728 503,790 82.32%
திருகோணமலை கிழக்கு 54,135 23.39% 166,841 72.10% 10,434 4.51% 231,410 1,832 233,242 281,114 82.97%
மட்டக்களப்பு கிழக்கு 38,460 12.68% 238,649 78.70% 26,112 8.61% 303,221 4,258 307,479 398,301 77.20%
இரத்தினபுரி சப்ரகமுவா 448,044 59.93% 264,503 35.38% 35,124 4.70% 747,671 5,853 753,524 864,978 87.11%
கேகாலை சப்ரகமுவா 320,484 55.66% 228,032 39.60% 27,315 4.74% 575,831 5,152 580,983 676,440 85.89%
அம்பாந்தோட்டை தெற்கு 278,804 66.17% 108,906 25.85% 33,664 7.99% 421,374 3,179 424,553 485,786 87.40%
காலி தெற்கு 466,148 64.26% 217,401 29.97% 41,809 5.76% 725,358 5,878 731,236 858,749 85.15%
மாத்தறை தெற்கு 374,481 67.25% 149,026 26.76% 33,361 5.99% 556,868 3,782 560,650 652,417 85.93%
கண்டி மத்தி 471,502 50.43% 417,355 44.64% 46,018 4.92% 934,875 9,020 943,895 1,111,860 84.89%
மாத்தளை மத்தி 187,821 55.37% 134,291 39.59% 17,109 5.04% 339,221 3,252 342,473 401,496 85.30%
நுவரெலியா மத்தி 175,823 36.87% 277,913 58.28% 23,128 4.85% 476,864 7,155 484,019 569,028 85.06%
கம்பகா மேற்கு 855,870 59.28% 494,671 34.26% 93,259 6.46% 1,443,800 15,751 1,459,551 1,751,892 83.31%
களுத்துறை மேற்கு 482,920 59.49% 284,213 35.01% 44,630 5.50% 811,763 6,847 818,610 955,079 85.71%
கொழும்பு மேற்கு 727,713 53.19% 559,921 40.92% 80,543 5.89% 1,368,177 15,333 1,383,510 1,670,403 82.82%
யாழ்ப்பாணம் வடக்கு 23,261 6.24% 312,722 83.86% 36,930 9.90% 372,913 11,251 384,164 564,714 68.03%
வன்னி வடக்கு 26,105 12.27% 174,739 82.12% 11,934 5.61% 212,778 3,294 216,072 282,119 76.59%
அனுராதபுரம் வடமத்தி 342,223 58.97% 202,348 34.87% 35,775 6.16% 580,346 4,916 585,262 682,450 85.76%
பொலன்னறுவை வடமத்தி 147,340 53.01% 112,473 40.47% 18,111 6.52% 277,924 2,563 280,487 326,443 85.92%
புத்தளம் வடமேல் 230,760 50.83% 199,356 43.91% 23,860 5.26% 453,976 4,478 458,454 599,042 76.53%
குருணாகல் வடமேல் 652,278 57.90% 416,961 37.01% 57,371 5.09% 1,126,610 8,522 1,135,132 1,331,705 85.24%
மொத்தம் 6,924,255 52.25% 5,564,239 41.99% 764,005 5.76% 13,252,499 135,452 13,387,951 15,992,096 83.72%

வரைபடங்கள்

[தொகு]

தரவுகள்

[தொகு]
 • வரலாற்றில் முதல் முறையாக அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிட்ட அரசுத்தலைவர் தேர்தல் இதுவாகும். மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சி சார்பாகத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ரூ.50,000 உம் சுயேட்சையாகப் போட்டியிடுபவர்கள் ரூ.75,000 உம் கட்டுப்பணங்களாக செலுத்த வேண்டும். கட்டுப்பணங்களைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் ஆகக்குறைந்தது 5% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். போட்டியிட்டவர்களில் கோத்தாபய ராசபக்ச, சஜித் பிரேமதாச தவிர்ந்த ஏனைய 33 பேரும் தமது கட்டுப்பணங்களை இழந்தனர்.[39]

பின்விளைவு

[தொகு]

பதவி விலகல்கள்

[தொகு]

நிதி அமைச்சர் மங்கள சமரவீர தான் உடனடியாக அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் மூலம் அறிவித்தார். இதுவரை காலமும் நிகழ்ந்த தேர்தல்களில் மினவும் அமைதியான முறையில் தேர்தல்கள் நடைபெற்றதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டார்.[40]

விளையாட்டு, மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர் செய்தியில், தனது அமைச்சுப் பதவியில் இருந்தும், ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.[40]

எண்ணிம உட்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஜித் பெரேரா தனது டுவிட்டர் செய்தியில், மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து தமது அமைச்சரவை அந்தஸ்தற்ர அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இம்முறை தேர்தலில் சஜித் பிரேமதாசவினால் கடுமையான போட்டித் தன்மை உருவாகக்ப்பட்ட அதே வேளையில், தற்போதைய நெருக்கடியான சூழலில் நாட்டிற்கு பிரேமதாசவின் தலைமைத்துவம் அவசியமாகும் எனத் தெரிவித்தார்.[40]

பாதுகாப்பு இராசாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தனது செய்தியில், கோத்தபாயவிற்கு வாழ்த்துத் தெரிவித்த அதே வேளையில், தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.[40]

அமைச்சர் கபீர் ஹாசிம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும், நெடுஞ்சாலைகள், சாலை அபிவிருத்தி அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.[40]

அமைச்சர் மாலிக் சமரவிக்கிரம தனது அபிவிருத்தி வியூக, பன்னாட்டு வணிக அமைச்சுப் பதவியில் இருந்தும்,[41] சம்பிக்க ரணவக்க தனது பெருநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தனர்.[42]

பன்னாட்டுத் தாக்கங்கள்

[தொகு]
நாடுகள்
 •  India – இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனது துவிட்டர் செய்தியில், புதிய அரசுத்தலைவர் ராஜபக்சவிற்கு வாழ்த்துத் தெரிவித்தார். புதிய தலைவருடன் இணைந்து இலங்கை இந்திய நல்லுறவை மேலும் வலுப்படுத்தவும் இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களில் இலங்கையுடன் இணைந்து செயலாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.[43]
 •  Maldives – மாலைதீவுகள் அரசுத்தலைவர் இப்ராகிம் முகமது சாலி கோத்தாபய ராஜபக்சவின் "பெரும் வெற்றிக்கு" வாழ்த்துத் தெரிவித்தார்.[43]
 •  Pakistan – பாக்கித்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இரண்டு நாடுகளுக்குமிடையிலுள்ள வலுவான உறவை மேலும் பலபடுத்தும் வகையில் இலங்கையின் புதிய அரசுத்தலைவருடன் தொடர்ந்தும் வெற்றிகரமான உறவுகள் முன்னெடுத்துச் செல்லப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.[44]

குறிப்புகள்

[தொகு]
 1. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் புதிய சனநாயக முன்னணி வேட்பாளர்.
 2. ஐக்கிய தேசிய முன்னணி தரவுகள்
 3. இமுகா தனித்து 46 சபைகளிலும், ஐதேமு உடன் ஏனைய சபைகளிலும் போட்டியிட்டது.
 4. இவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராசபக்ச அல்ல.

மேற்கோள்கள்

[தொகு]
 1. "Presidential poll between Nov. 9 and Dec. 9: EC". www.dailymirror.lk (in English). Daily Mirror. பார்க்கப்பட்ட நாள் 13 August 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 2. 2.0 2.1 2.2 2.3 "Possibility of a snap presidential election anytime after 9 January 2019 ::. Latest Sri Lanka News". ONLANKA News :. Latest Sri Lanka Breaking News Updates | Sri Lanka News. 28 May 2018. பார்க்கப்பட்ட நாள் 8 January 2019.
 3. "November Lanka polls to test India's presence in southern Indian Ocean region". Dipanjan Roy Chaudhury. தி எகனாமிக் டைம்ஸ். 21 October 2019. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019.
 4. "Gotabaya Rajapaksa wins the election as Premadasa concedes defeat to the former". அல் ஜசீரா. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2019.
 5. "Sri Lanka Freedom Party regional convention backs Sirisena for presidential poll". www.economynext.com (in ஆங்கிலம்). Archived from the original on 2 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 6. "Sri Lanka Freedom Party regional convention backs Sirisena for presidential poll". www.economynext.com (in ஆங்கிலம்). Archived from the original on 2019-02-02. பார்க்கப்பட்ட நாள் 2019-08-20.
 7. "Gota wins presidential nomination from SLPP and its allies". The Sunday Times Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
 8. "A decade after his killing, Lasantha's daughter seeks justice in the US". www.ft.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 9. "Two lawsuits against Gota in US". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 10. Miglani, Sanjeev; Aneez, Shihar (26 April 2019). "Exclusive: Sri Lankan ex-defense chief Gotabaya says he will run..." Reuters (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
 11. "Gotabaya Rajapaksa launches Sri Lanka presidential bid". www.aljazeera.com. Aljazeera. பார்க்கப்பட்ட நாள் 13 August 2019.
 12. "Sajith Premadasa stakes claim for Sri Lanka UNP candidacy". www.economynext.com (in ஆங்கிலம்). Archived from the original on 2019-08-19. பார்க்கப்பட்ட நாள் 2019-08-15.
 13. "Anura Kumara named Presidential candidate of National Peoples Power - Sri Lanka Latest News". Sri Lanka News - Newsfirst. 18 August 2019. பார்க்கப்பட்ட நாள் 7 October 2019.
 14. http://www.adaderana.lk/news/57949/ranil-agrees-to-give-sajith-candidacy
 15. UNF Prez candidate Premadasa tasked to continue govt. policies[தொடர்பிழந்த இணைப்பு] தி ஐலண்டு, செப்டம்பர் 27, 2019
 16. Srinivasan, Meera (29 September 2019). "Lanka's ex-Army chief Mahesh Senanayake to run for President". பார்க்கப்பட்ட நாள் 7 October 2019 – via www.thehindu.com.
 17. "UNP convention on the 3rd of October : Akila Viraj Kariyawasam - Sri Lanka Latest News". Sri Lanka News - Newsfirst. 26 September 2019. பார்க்கப்பட்ட நாள் 7 October 2019.
 18. "Court rejects challenge to Gotabhaya Rajapaksa's citizenship". Al Jazeera. பார்க்கப்பட்ட நாள் 6 October 2019.
 19. "Gotabhaya's citizenship petition dismissed". Newsfirst. பார்க்கப்பட்ட நாள் 6 October 2019.
 20. "Sri Lanka holds first ever Presidential debate among candidates". Colombo Page. பார்க்கப்பட்ட நாள் 6 October 2019.
 21. "Gotabaya fails to attend multi party debate". Colombo Page. பார்க்கப்பட்ட நாள் 6 October 2019.
 22. "Presidential poll on Nov. 16". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-09-19.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 23. "SLFP to support Rajapaksa". newsfirst.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 October 2019.
 24. https://www.onlanka.com/news/slmc-support-for-sajith-hakeem.html
 25. "Thondaman's CWC to sign MoU with SLPP tomorrow". sundaytimes.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 October 2019.
 26. http://www.dailymirror.lk/print/news/JHU-hold-convention-in-support-of-Sajith/239-176379
 27. https://colombogazette.com/2019/11/04/tna-extends-support-to-sajith/
 28. https://www.republicnext.com/prespoll2020/chandrika-joins-alliance-backing-sajith/[தொடர்பிழந்த இணைப்பு]
 29. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-11-06. பார்க்கப்பட்ட நாள் 2019-11-15.
 30. "Sri Lanka to hold presidential election on November 16". www.aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 2019-09-19.
 31. "Sunday Times - Final list of Presidential candidates released ; 35 candidates to contest poll, 2 objections rejected". www.sundaytimes.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-07.
 32. 32.0 32.1 CWC, TMVP to support Gotabaya, டெய்லி நியூசு, அக்டோபர் 14, 2019
 33. "ජනාධිපතිවරණයට ඉදිරිපත්වන කාන්තාව" (in en-GB). 2019-08-28. https://www.bbc.com/sinhala/sri-lanka-49496767. 
 34. "Ajantha Perera". Ashoka | Everyone a Changemaker (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-29.
 35. "Pallewatta breaks trend in presidential candidacy". Sunday Observer (in ஆங்கிலம்). 2019-09-28. பார்க்கப்பட்ட நாள் 2019-10-06.
 36. "Past Members members-of-parliament".
 37. "Presidential Election - 2019: Final Result - All Island". news.lk (Colombo, Sri Lanka: Department of Government Information). https://elections.news.lk/. பார்த்த நாள்: 17 November 2019. 
 38. "Presidential Election - 2019: Final Result - All Island". news.lk (Colombo, Sri Lanka: Department of Government Information) இம் மூலத்தில் இருந்து 17 நவம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191117131017/https://elections.news.lk/. பார்த்த நாள்: 17 November 2019. 
 39. 33 candidates lose election deposits பரணிடப்பட்டது 2020-08-14 at the வந்தவழி இயந்திரம், News Radio, நவம்பர் 19, 2019
 40. 40.0 40.1 40.2 40.3 40.4 "Several cabinet ministers step down from their portofolios". News 1st. 17 November 2019. https://www.newsfirst.lk/2019/11/17/several-cabinet-ministers-step-down-from-their-portofolios/. 
 41. "Minister Malik Samarawickrama steps down from his ministerial portfolio". News 1st. 18 November 2019. https://www.newsfirst.lk/2019/11/18/minister-malik-samarawickrama-steps-down-from-his-ministerial-portfolio/. 
 42. "Patali Champika Ranawaka steps down". News 1st. 18 November 2019. https://www.newsfirst.lk/2019/11/18/patali-champika-ranawaka-steps-down/. 
 43. 43.0 43.1 "Indian, Maldivian leaders congratulate Sri Lanka President elect Gotabhaya on his victory". ColomboPage. 17 November 2019 இம் மூலத்தில் இருந்து 18 நவம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191118015340/http://www.colombopage.com/archive_19B/Nov17_1573979133CH.php. 
 44. "Pakistan welcomes Gotabaya’s victory". டெய்லி நியூசு. 17 November 2019. http://www.dailynews.lk/2019/11/18/local/203111/pakistan-welcomes-gotabaya’s-victory. 

வெளி இணைப்புகள்

[தொகு]