ஹரின் பெர்னாண்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹரின் பெர்னாண்டோ
Harin Fernando
ஊவா மாகாண முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சனவரி 14, 2015
ஆளுநர் நந்தா மெத்தியூ
முன்னவர் சசீந்திரா ராசபக்ச
ஊவா மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
செப்டம்பர் 2010 – 14 சனவரி 2015
ஆளுநர் நந்தா மெத்தியூ
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2010–2014
தனிநபர் தகவல்
பிறப்பு 28 அக்டோபர் 1978 (1978-10-28) (அகவை 39)
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
சமயம் தேரவாத பௌத்தம்

ஹரின் பெர்னான்டோ (Harin Fernando , பிறப்பு: அக்டோபர் 28, 1978), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் பதுளை மாவட்டத்திலிருந்து மக்களால் முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர். 2014 ஆம் ஆண்டில் ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்றப் பதவியைத் துறந்தார். மாகாணசபைத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகள் பெற்று ஊவா மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரானார். 2015 சனவரி 14 ஆம் நாள் ஊவா மாகாணசபையில் ஐக்கிய தேசியக் கட்சி தனது பெரும்பான்மையை நிரூபித்ததை அடுத்து இவர் ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக ஆளுநர் நந்தா மெத்தியூவினால் நியமிக்கப்பட்டார்.[1][2][3] இவர் 2015 செப்டம்பர் 4 அன்று தொலைத்தொடர்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4][5] [6]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரின்_பெர்னாண்டோ&oldid=2238947" இருந்து மீள்விக்கப்பட்டது