பைசர் முஸ்தபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைசர் முஸ்தபா
Faiszer Musthapha

நா.உ.
விமான சேவைகள் இராசாங்க அமைச்சர்
பதவியில்
சனவரி 12 2015 – பெப்ரவரி 9 2015
முதலீட்டு ஊக்குவிப்பு துணை அமைச்சர்
பதவியில்
2012–2014
தொழிநுட்ப, ஆய்வுகள் துணை அமைச்சர்
பதவியில்
2010–2012
சுற்றுச்சூழல் துணை அமைச்சர்
பதவியில்
2010–2012
சுற்றுலாத்துறை துணை அமைச்சர்
பதவியில்
2007–2010
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2004
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 2, 1969 (1969-07-02) (அகவை 53)
தேசியம் இலங்கை இலங்கைn
அரசியல் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
பிற அரசியல்
சார்புகள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
படித்த கல்வி நிறுவனங்கள் கொழும்பு றோயல் கல்லூரி
தொழில் வழக்கறிஞர்

முகம்மது பைசர் முஸ்தபா (Mohamed Faiszer Musthapha, பிறப்பு: 2 சூலை 1969) இலங்கை வழக்கறிஞரும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

பாயிசு முஸ்தபா என்பவரின் மகனான பைசர் முஸ்தபா, கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்று பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞரானார். பத்தரமுல்லை, ராஜமல்வத்தையில் வசித்து வருகிறார்.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வேட்பாளராக கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார். பின்னர் 2010 தேர்தலிலும் ஐமசுமு வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுஅம்ன்றம் சென்றார்.

2012 இல் இவர் சனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார். இவர் தொழினுட்ப ஆய்வுகள் துணை அமைச்சராகவும், பின்னர் முதலீட்டு ஊக்குவிப்பு துணை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2015 அரசுத்தலைவர் தேர்தலின் போது இவர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து 2014 டிசம்பரில் எதிர்க்கட்சிக்கு ஆதரவளித்தார்.[1] முஸ்தபா துணை அமைச்சர் பதவி ஏற்று ஒரு மாதத்திற்குள் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியைத் துறந்தார். ஆனாலும், சிறிசேனவிற்கும், ரணில் விக்கிரமசிங்க அரசுக்கும் தனது ஆதரவைத் தொடர்வதாக அறிவித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Father and son both President's counsel". 2015-04-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-08-23 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசர்_முஸ்தபா&oldid=3565430" இருந்து மீள்விக்கப்பட்டது