தலதா அத்துகோரல
தலதா அத்துகோரல | |
---|---|
இரத்தினபுரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2010 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | மே 30, 1963 இலங்கை |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
பணி | அரசியல்வாதி |
தொழில் | சட்டத்தரணி |
சமயம் | பௌத்தம் |
தலதா அத்துகோரல (Thalatha Atukorale, பிறப்பு: மே 30, 1963), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். ஒரு சட்டத்தரணியும் கூட. விடுதலை பெற்ற இலங்கையின் 13வது நாடாளுமன்ற (2004) பிரதிநிதியாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.இவர் 2015 செப்டம்பர் 4 அன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2][3]
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
231/1 ஸ்டான்லி திலகரத்ன மாவத்தை, நுகேகொடையில் வசிக்கும் இவர், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. 4 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2003-12-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-04 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-09-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-04 அன்று பார்க்கப்பட்டது.