இம்ரான் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இம்ரான் கான்
Imran Khan
Imran Khan - portrait (cropped).jpg
19வது பாக்கித்தான் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
18 ஆகத்து 2018
குடியரசுத் தலைவர் மம்நூன் ஹுசைன்
முன்னவர் நசிருல் முல்க் (Caretaker)
பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
25 ஏப்ரல் 1996
துணை சா மெகுமுது குரேசி
முன்னவர் புதிய பதவி
தேசியப் பேரவை உறுப்பினர்
பதவியில்
11 மே 2013 – 31 மே 2018
முன்னவர் அனீப் அப்பாசி
தொகுதி என்ஏ-56 (ராவல்பிண்டி-VII)
பெரும்பான்மை 13,268 (8.28%)
பதவியில்
10 அக்டோபர் 2002 – 3 நவம்பர் 2007
முன்னவர் தொகுதி உருவாக்கம்
பின்வந்தவர் நவாப்சாதா மாலிக் அமாத் கான்
தொகுதி என்ஏ-71 (மியான்வாலி-I)
பெரும்பான்மை 6,204 (4.49%)
பிராட்ஃபோர்டு பல்கலைக்கழக வேந்தர்
பதவியில்
7 டிசம்பர் 2005 – 2014
முன்னவர் பெட்டி லொக்வுட்
பின்வந்தவர் கேட் சுவான்
தனிநபர் தகவல்
பிறப்பு இம்ரான் அகமது கான் நியாசி
5 அக்டோபர் 1952 (1952-10-05) (அகவை 67)[1]
லாகூர், பஞ்சாப், பாக்கித்தான்
தேசியம் பாக்கித்தானியர்
அரசியல் கட்சி பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப்
வாழ்க்கை துணைவர்(கள்) ஜெமினா கோல்ட்சிமித் (தி. 1995–2004) «start: (1995)–end+1: (2005)»"Marriage: ஜெமினா கோல்ட்சிமித் to இம்ரான் கான்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D)

ரேகம் கான் (தி. 2014–2015) «start: (2014)–end+1: (2016)»"Marriage: ரேகம் கான் to இம்ரான் கான்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D)
புஸ்ரா மனிக்கா (தி. 2018–தற்காலம்) «start: (2018)»"Marriage: புஸ்ரா மனிக்கா to இம்ரான் கான்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D)

துணைவர் சீதா வைட்[2]
பிள்ளைகள் 3[3]
இருப்பிடம் பானி காலா, இசுலாமாபாத்
படித்த கல்வி நிறுவனங்கள் கெபில் கல்லூரி, ஆக்சுபோர்டு
பணி
 • துடுப்பாட்ட வீரர்
 • அரசியல்வாதி
 • நூலாசிரியர்author
விருதுகள் இலால்-எ-இம்தியாசு (1992)
Pride of Performance (1983)
பட்டப்பெயர்(கள்) கப்தான்/காப்டன், ஐகே


இம்ரான்கானின் துடுப்பாட்ட வரலாறு
பாக்கித்தான் பாக்கித்தான்
இவரைப் பற்றி
வகை பல்துறை
துடுப்பாட்ட நடை வலக்கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலக்கை விரைவு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 88) 3 சூன், 1971: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு 2 சனவரி, 1992: எ இலங்கை
முதல் ஒருநாள் போட்டி (cap 175) 31 ஆகத்து, 1974: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி 25 மார்ச், 1992:  எ இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேஒநாபமுதபஅ
ஆட்டங்கள் 88 175 382 425
ஓட்டங்கள் 3807 3709 17771 10100
துடுப்பாட்ட சராசரி 37.69 33.41 36.79 33.22
100கள்/50கள் 6/18 1/19 30/93 5/66
அதிக ஓட்டங்கள் 136 102* 170 114*
பந்து வீச்சுகள் 19458 7461 65224 19122
இலக்குகள் 362 182 1287 507
பந்துவீச்சு சராசரி 22.81 26.61 22.32 22.31
சுற்றில் 5 இலக்குகள் 23 1 70 6
ஆட்டத்தில் 10 இலக்குகள் 6 0 13 0
சிறந்த பந்துவீச்சு 8/58 6/14 8/34 6/14
பிடிகள்/ஸ்டம்புகள் 28/0 36/0 117/0 84/0

5 நவம்பர், 2014 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

இம்ரான் கான் நியாசி (Imran Khan Niazi, உருது: عمران احمد خان نیازی, பிறப்பு: அக்டோபர் 5 , 1952) பாக்கித்தானின் 19வது பிரதமர்[4] , 22ஆவது தலைமை அமைச்சர் மற்றும் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் எனும் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். மேலும் பாக்கித்தான் அமைச்சரவையில் இருந்துள்ளார்.இவர் அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்பு 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுமார் இருபது ஆண்டுகாலம் இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.[5][6] 1971 முதல் 1992 வரை பாகிஸ்தான் அணி சார்பாக ஆடிய இம்ரான் கான் ஒரு சிறந்த சகலதுறை ஆட்டக்காரர். துடுப்பாட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் லாகூரில் ஒரு புற்றுநோய் வைத்தியசாலை அமைத்துள்ளார்.

இளமைக் காலம்[தொகு]

இம்ரான் கான் பஷ்தூன் மரபைச் சேர்ந்தவர் ஆவார். இவர் அக்டோபர் 5 , 1952 இல் லாகூர், பஞ்சாபில் பிறந்தார். இவர் வோர்செஸ்டர் மற்றும் ஆக்சுபோர்டில் உள்ள கெப்ளி கல்லூரியிலும் பயின்றார். தனது 13 ஆம் வயது முதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். முதலில் தனது கல்லூரி அணிக்காக விளையாடி இவர் பின் வோர்செஸ்டர்ஷயர் துடுப்பாட்ட சங்கத்திற்காக விளையாடினார். 1971 ஆம் ஆண்டில் பிர்மின்ஹாமில் நடைபெற்ற போட்டியில் தனது 18 ஆம் வயதில் பாக்கித்தான் அணிக்காக விளையாடினார். ஆக்சுபோர்டுவில் பயின்றபிறகு இவர் 1976 ஆம் ஆண்டில் பாக்கித்தான் தேசிய அணியில் இடம்பிடித்தார்.இவர் 1982 முதல் 1992 ஆம் ஆண்டு வரையில் தலைவராக இருந்துள்ளார்.[7] 1992 இல் பாகிஸ்தான் உலகக் கிண்ணம் வென்றபோது அணித் தலைவராக இருந்தார்.[8]

இவர் 1992 ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். 362 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையடி இவர் 3,807 ஓட்டங்கள் எடுத்தார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த சகலத்துறையர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[9] 2010 ஆம் ஆண்டின் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் ஹால் ஆஃப் ஃபேமாக தெரிந்தெடுக்கப்பட்டார். 1991 ஆம் ஆண்டில் லாகூரில் 25 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் தனது தாயின் நினைவாக புற்றுநோயியல் மருத்துவமனை ஒன்றைத் துவங்கினார். பின் பெசாவரில் இரண்டாவது மருத்துவமனை ஒன்றைத் துவங்கினார்[10]. தனது ஓய்விற்குப் பிறகு பிராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக வேந்தராகவும் , வள்ளலாகவும், துடுப்பாட்ட வர்ணனையாளராகவும் இருந்தார்.[11][12]

சர்வதேச போட்டிகள்[தொகு]

1971 ஆம் ஆண்டில் எட்ஜ்பஸ்டனில் நடைபெற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். பின் புரூடென்சியல் கோப்பைத் தொடரில் இதே அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார். ஆக்சுபோர்டுவில் பயின்றபிறகு இவர் 1976 ஆம் ஆண்டில் பாக்கித்தான் தேசிய அணியில் நிலையான இடம்பிடித்தார். 1976-1977 ஆம் ஆண்டுகளில் இவர் நியூசிலாந்து துடுப்பாட்ட அணி மற்றும் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.[13]

விளையாட்டில் சாதனைகள்[தொகு]

அனைத்துக் காலத்திற்குமான சிறந்த விரைவு வீச்சாளர்களில் ஒருவராக இம்ரான் கான் திகழ்கிறார் என பிபிசி தெரிவித்தது.[14] ஈஎஸ்பிஎன் நிறுவனத்தின் தரவரிசையில் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த சகலத்துறையர்களின் வரிசையில் சோபர்ஸ்க்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[15][16][17]

திருமண வாழ்க்கை[தொகு]

இங்கிலாந்தைச் சேர்ந்த யூதரான ஜெமீமா கோல்டுஸ்மித் என்பவரை மதம் மாற்றி, 1995இல் திருமணம் செய்து கொண்டார் இம்ரான் கான். இந்த அணையருக்கு சுலைமான், காசிம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் ஒன்பது வருட மணவாழ்வு மணமிறிவில் முடிந்தது. இதன்பிறகு பி.பி.சி.யில் பணியாற்றிய பிரித்தானிய – பாகிஸ்தானிய வம்சாவளியில் பிறந்த ரேஹம் கான் என்பவரை இரகசிய திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமனம் ஒரு ஆண்டுக்குள்ளேயே மணமுறிவில் முடிந்தது. பின்னர் 2008 பெப்பரவரியில் தனது ஆன்மிக குரு என்று அதுவரை கூறிக் கொண்டிருந்த புஷ்ரா மணிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[18]

அரசியல் கட்சி வெற்றிகள்[தொகு]

பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (நீதிக்கான பாகிஸ்தானிய இயக்கம்) என்ற அமைப்பை இம்ரான் கான் 1996இல் தொடங்கினார். இது முதலில் ஒரு சமூக அரசியல் இயக்கமாக உருவெடுத்தது. 1999இல் இது அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டது. 2002 தேர்தலில் மியான்வாலி தொகுதிக்கு இம்ரான் கான் நாடாளுமன்ற உறுப்பினரானார். 2002 பொதுத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தைப் பிடித்த இம்ரானின் கட்சி 2008 தேர்தலை புறக்கணித்தது. 2013இல் நடந்த தேர்தலில் 75 லட்சம் வாக்குகளைப் பெற்றது.

2018 ஆண்டு நடந்த பாக்கித்தான் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய கட்சியாக இவரது கட்சி உருவெடுத்தது. இதையடுத்து சிறிய கட்சிகளின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் மொத்தம் 176 வாக்குகளை இம்ரான் கான் பெற்று, பாக்கித்தான் பிரதமராக பொறுப்பேற்றார்.[19]

சான்றுகள்[தொகு]

 1. "#HappyBirthdayIK: PTI Chairman Imran Khan turns 62". DAWN.COM (Dawn). 5 October 2014. Archived from the original on 7 April 2017. http://www.dawn.com/news/1136414/happybirthdayik-pti-chairman-imran-khan-turns-62. பார்த்த நாள்: 22 October 2016. 
 2. "Imran Khan may take custody of daughter".
 3. "The tragedy of Sita, heiress entangled in a murky business".
 4. "பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றார் இம்ரான் கான்...". பாலிமர் (18 ஆகத்து, 2018)
 5. Khan, Imran (2012). "Khan". in Ayesha Jalal (in en-PK). The Oxford Companion to Pakistani History. Karachi: Ameena Saiyid, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 282. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780195475784. https://books.google.com/?id=-b0nLgEACAAJ&dq=isbn:9780195475784. 
 6. Thomas Fletcher (6 April 2012). "Imran Khan". Sports Around the World: History, Culture, and Practice. ABC-CLIO. பக். 231. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1598843002. Archived from the original on 12 September 2017. https://web.archive.org/web/20170912104531/https://books.google.com/books?id=IkLYDgTnMxEC&pg=PA231. பார்த்த நாள்: 30 August 2013. 
 7. Pakistan Test Captaincy record Archived 1 March 2017 at the வந்தவழி இயந்திரம்.. இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. Retrieved 18 December 2012.
 8. "Imran Khan". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. மூல முகவரியிலிருந்து 7 February 2014 அன்று பரணிடப்பட்டது.
 9. "Profile of Imran Khan". Overseas Foundation Pakistan (4 October 2007). மூல முகவரியிலிருந்து 4 October 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 October 2016.
 10. Kervin, Alison (6 August 2006). "Imran Khan: 'What I do now fulfils me like never before'". The Sunday Times (UK). Archived from the original on 23 October 2016. http://www.thesundaytimes.co.uk/sto/sport/article159055.ece. பார்த்த நாள்: 5 November 2007. 
 11. Dawn.com (2012-01-13). "Imran Khan". மூல முகவரியிலிருந்து 23 September 2016 அன்று பரணிடப்பட்டது.
 12. "Imran Khan awarded honorary fellowship by Royal College of Physicians – The Express Tribune" (en-US) (2012-07-28). மூல முகவரியிலிருந்து 23 September 2016 அன்று பரணிடப்பட்டது.
 13. "Imran Khan". Cricket Archive. மூல முகவரியிலிருந்து 15 January 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 November 2007.
 14. "Millennium, Imran Khan." BBC. Accessed 25 April 2012
 15. "Fast bowlers, strike fear with three, Imran Khan" ESPNcricinfo. Accessed 25 April 2012.
 16. Gupta A. S. "Fast bowlers, who's the fastest?" The Hindu 18 July 2002. Accessed 25 April 2012.
 17. "Imran Khan" ESPNcricinfo Accessed 26 April 2012.
 18. ஜி.எஸ்.எஸ் (2018 சூலை 27). "ஆழமான புற்றுநோயை நீக்குவாரா ஆல் ரவுண்டர்?". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 17 திசம்பர் 2018.
 19. "பாகிஸ்தான் பிரதமராக முறைப்படி இம்ரான் கான் தேர்வு". செய்தி. bbc.com/tamil (2018 ஆகத்து 17). பார்த்த நாள் 17 திசம்பர் 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்ரான்_கான்&oldid=2810964" இருந்து மீள்விக்கப்பட்டது