உள்ளடக்கத்துக்குச் செல்

விரைவு வீச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விரைவு வீச்சு (Fast bowling) அல்லது வேகப் பந்து வீச்சு (pace bowling) என்பது துடுப்பாட்ட விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்து வீச்சு வகைகளில் ஒன்றாகும். பந்துவீச்சின் முதன்மையான இருபிரிவுகளில் சுழற்பந்து வீச்சினைத் தவிர்த்த மற்றொரு வகையாகும். இவ்வகை பந்து வீச்சாளர்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் , விரைவுக்காரர்கள் என அழைக்கப்படுகின்றனர். விரைவுப் பந்து வீச்சின் வீசுநுட்பத்தை ஒட்டி அலைவுறு வீச்சாளர் என்றும் தையற்தட வீச்சாளர் என்றும் வகைப்படுத்துவதுண்டு.

விரைவு வீச்சின் நோக்கம் பந்தை வெகுவேகமாக துடுப்பாட்டக் களத்தில் எறிந்து அது எழும்புகின்ற விதத்தை கணிக்க முடியாதவாறும் அல்லது காற்றில் நேர்கோட்டிலிருந்து ஏதாவதொருபுறம் விலகுமாறும் செய்து மட்டையாளர் அடிக்கவியலாதபடி திண்டாட வைப்பதாகும்.

விரைவு வீச்சு பகுப்புகள்

[தொகு]
பிரெட் லீ 2005ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவிற்கு எதிராக மேற்கு ஆத்திரேலிய அரங்கில் பந்துவீசல்.

இளவயதில் விரைவாகப் பந்து வீசுவதிலேயே கவனம் செலுத்தும் வேகப்பந்து வீச்சாளர்கள் முதிர்ந்த நிலையில் பல வீசுநுட்பங்களில் தேர்ந்து அலைவுறு பந்துவீச்சிலோ தையற்தட பந்துவீச்சிலோ சிறந்து விளங்குகின்றனர். இதனைப் பொறுத்து அவர்கள் தாக்கு, அலைவுறு, தையற்தட பந்துவீச்சாளர் என வகைப்படுத்தப்படுகின்றனர். ஓர் வேகப்பந்து வீச்சாளர் மூன்றுவகை நுட்பங்களையும் தமது ஆட்டத்தில் நிலைமைக்குத் தக்கவாறு கலந்து வீசுவார் என்பதால் இவை சரியான வகைப்படுத்தல் அல்ல. பந்துவீச்சாளரின் சராசரி பந்து வீச்சு வேகங்களைக் கொண்டு வகைப்படுத்துவது பொதுவான செயலாக உள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்களின் வகைப்படுத்தல்
வகை மணிக்கு மைல்கள் மணிக்கு கி.மீ
விரைவு 86 + 138 +
விரைவு-மிதம் 80 to 85 130 to 137
மிதவிரைவு 75 to 80 121 to 130
மிதவேகம் 70 to 75 114 to 121

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரைவு_வீச்சு&oldid=3956196" இலிருந்து மீள்விக்கப்பட்டது