ஈஎஸ்பிஎன்
ஈஎஸ்பிஎன் | |
---|---|
![]() | |
இஎஸ்பிஎன் சின்னம் 1985 முதல் | |
ஒளிபரப்பு தொடக்கம் | செப்டம்பர் 7, 1979 |
வலையமைப்பு | ஈஎஸ்பிஎன் குழுமம் |
உரிமையாளர் | ஈஎஸ்பிஎன் நிறுவனம் (வால்ட் டிஸ்னி நிறுவனம்–80% ஹியர்ஸ்ட் கார்ப்பரேஷன்–20%) |
மொழி | ஆங்கிலம் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | உலகளவில் |
தலைமையகம் | பிரிஸ்டல் |
முன்பாக இருந்தப்பெயர் | ESP |
வலைத்தளம் | ESPN |
கிடைக்ககூடிய தன்மை | |
மின் இணைப்பான் | |
பெரும்பாலான கேபிள் முறைமைகளில் கிடைக்கும் |
ஈஎஸ்பிஎன் (ESPN) நாள் முழுவதிலும் விளையாட்டுக்களை ஒளிபரப்பும் ஓர் அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமாகும். 1979இல் செப்டம்பர் 7ஆம் தேதி முதலாக ஒளிபரப்பு செய்தது. கனெடிகட் மாநிலத்தின் பிரிஸ்டல் நகரில் ஈஎஸ்பிஎன் தலைமை பணியிடங்கள் உள்ளன. "ஸ்போர்ட்ஸ்சென்டர்" (SportsCenter) என்னும் ஒரு மணி நேர விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சி ஈஎஸ்பிஎன்னின் மிகப் பரவலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும். இது தவிர பல்வேறு விளையாட்டு போட்டிகளும் விளையாட்டு பற்றிய நிகழ்ச்சிகளும் ஈஎஸ்பிஎன் ஒளிபரப்புகிறது. வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் ஒரு பிரிவே ஈஎஸ்பிஎன்.
ஈஎஸ்பிஎன்னின் அனைத்துலகப் பிரிவு ஈஎஸ்பிஎன் இண்டர்நேஷனல் சார்பாக ஈஎஸ்பிஎன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் என்னும் அலைவரிசை தெற்காசியாவில் ஒளிபரப்புகிறது.