சோபர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்பீல்டு சோபர்ஸ்
Sir Garry Sobers 2012.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கார்பீல்ட் சேன். ஆப்ரன் சாபர்ஸ்
பட்டப்பெயர்Gary (or Garry)
உயரம்5 ft 11 in (1.80 m)
மட்டையாட்ட நடைஇடது-கை மட்டையாளர்
பந்துவீச்சு நடைஇடது-கை மித வேகம்
இடது-கை சுழல்
இடது-கை சைனாமேன் சுழல்
பங்குஆல்-ரவுண்டர் (பல்படி வீரர்)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 84)30 மார்ச் 1954 எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு5 ஏப்ரல் 1974 எ இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 11)5 செப்டம்பர் 1973 எ இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1952 – 1974பார்பேடோஸ்
1961 – 1964தெற்கு ஆஸ்திரேலியா
1968 – 1974நாட்டிங்காம்ஷையர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை டெஸ்ட் கிரிக்கெட் ஒரு நாள் கிரிக்கெட் முதல்-தர கிரிக்கெட் {{{column4}}}
ஆட்டங்கள் 93 1 383 {{{matches4}}}
ஓட்டங்கள் 8032 0 28314 {{{runs4}}}
மட்டையாட்ட சராசரி 57.78 0.00 54.87 {{{bat avg4}}}
100கள்/50கள் 26/30 0/0 86/121 {{{100s/50s4}}}
அதியுயர் ஓட்டம் 365* 0 365* {{{top score4}}}
வீசிய பந்துகள் 21599 63 70789 {{{deliveries4}}}
வீழ்த்தல்கள் 235 1 1043 {{{wickets4}}}
பந்துவீச்சு சராசரி 34.03 31.00 27.74 {{{bowl avg4}}}
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
6 36 {{{fivefor4}}}
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 1 {{{tenfor4}}}
சிறந்த பந்துவீச்சு 6/73 1/31 9/49 {{{best bowling4}}}
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
109/– 1/– 407/– {{{catches/stumpings4}}}
மூலம்: கிரிக்இன்ஃபோ, 13 செப்டம்பர் 2007

சர் கார்பீல்டு ஆபர்ன் சோபர்ஸ் (Sir Garfield St Aubrun Sobers, ) பிறப்பு: சூலை 28, 1936) என்பவர் 1954 முதல் 1974 ஆம் ஆண்டு வரை மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்காக விளையாடிய சகலத் துறையர் ஆவார். இவர் காரி எனவும் காரி சோபர்ஸ் எனவும் அழைக்கப்படுகிறார்.

அனைத்துக் காலத்திற்குமான துடுப்பாட்ட வரலாற்றின் மிகச் சிறந்த சகலத்துறையராக அறியப்படுகிறார்.[1]

சோபர்ஸ் பிரிஜ்டவுண், பார்படோசுவில் பிறந்தார். 1953 ஆம் ஆண்டில் தனது 16 ஆவது வயதில் பார்படோசு துடுப்பாட்ட அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகம் ஆனார். 1954 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகம் ஆனார். பந்து வீச்சாளராக அறிமுகம் ஆனார். பின் மட்டையாளராகவும் செயல்பட்டார்.1958 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான அறிமுகப் போட்டியில் 365 ஓட்டங்கள் எடுத்து வீழாமல் இருந்ததன முலம் தனி ஒருவரின் அதிகபட்ச ஓட்டங்கள் எனும் சாதனையைப் படைத்தார். 1994 ஆம் ஆண்டில் இவரின் அணியைச் சேர்ந்த பிறயன் லாறா இந்தச் சாதனையை முறியடித்தார். 1965 முதல் 1972 ஆண்டு வரை அணித் தலைவராக இருந்தார்.

இவர் மொத்தம் 93 தேர்வுத் துடுப்பாட்டங்கள் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்காக விளையாடி மொத்தம் 8032 ஓட்டங்கள்எடுத்துள்ளார். இவரின் சராசரி 57.78 ஆகும். பந்துவீச்சில் 235 இலக்குகளை 34.03 எனும் பொருளாதார சிக்கனத்தில் எடுத்தார். 5000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ள வீரர்களின் வரிசையில் சராசரி அடிப்படையில் நான்காவது இடத்தில் உள்ளார்.[2] மொத்தமாக 383 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 28,000 ஓட்டங்கள் மற்றும் 1,000 இலக்குகள் எடுத்துள்ளார்.துடுப்பாட்டத்தில் இவரின் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக இரண்டாம் எலிசபெத் இவருக்கு நைட் எனும் பட்டத்தை அளித்தார்.[3] ஆத்திரேலியப் பெண்ணை திருமணம் செய்ததினால், இவர் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளார். இவர் 1980 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார்.[4] 1998 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியதன் மூலம் பார்படோசின் தேசிய நாயகர்களுள் ஒருவராக சோபர்ஸ் போற்றப்படுகிறார்.[5][6]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

சர் கார்பீல்டு ஆபர்ன் சோபர்ஸ் சூலை 28, 1936 இல் பிரிஜ்டவுண், பார்படோசுவில் பிறந்தார்.[7][8][9] இவரின் பெற்றோர் ஷாமோந்த்- தெல்மா சோபர்ஸ். இவர் பிறக்கும் போது இரு கைகளிலும் ஆறு விரல்களோடு பிறந்தார். இவரின் பள்ளிக்க்காலத்தில் கூரிய கத்தி கொண்டு அவரே அதனை நீக்கியுள்ளார்[10][11] இவரின் பெற்றோருக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். சோபர்ஸ் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார்[12]. இவருக்கு ஐந்து வயதாக இருக்கும் போது இவரின் தந்தை இறந்து விட்டார்.[7]

சோபர்ஸின் ஆரம்பகாலத்தில் தான் விளையாடிய அனைத்து விளையாட்டுக்களிலும் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.[12] குறிப்பாக துடுப்பாட்டம், காற்பந்து, கூடைப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுகளில் சிறப்பாக விளையாடினார். இவரும் , இவரின் சகோதரர் ஜெரால்டும் இணைந்து பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுக்களில் இவர்களின் பள்ளி அணியை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வெற்றிபெறச் செய்தனர்.[12]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

மேற்கிந்தியத் தீவுகளின் 1966-67 இந்தியச் சுற்றுப்பயணத்தின் போது இவருக்கும் இந்திய நடிகை அஞ்சு மகேந்திருவுக்கும் திருமண உறுதி நடந்தது[13]. பின் செப்டம்பர் ,1969 இல் ஆத்திரேலியாவைச் சேர்ந்த ப்ரூ கிர்பி என்பவரைத் திருமணம் செய்தார்[14]. மேத்யூ மற்றும் டேனியல் என இரு குழந்தையும் ஜெனீவீவ் எனும் தத்தெடுக்கப்பட்ட மகளும் உள்ளனர்.[15]

மேற்கோள்கள்[தொகு]

 1. "They broke the mould after Sir Garry". espncricinfo.com. 19 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Statistics / Statsguru / Test matches / Batting records Test Batting average with minimum qualification of 5000 runs in Test cricket". 12 அக்டோபர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது.
 3. "Reuters:Cricket, Australia honours Steve Waugh in Queen's Birthday list". In.rediff.com. 9 June 2003. 15 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Sobers bat that hit six sixes is up for sale". Telegraph.co.uk. 26 September 2000. https://www.telegraph.co.uk/news/worldnews/europe/1356900/Sobers-bat-that-hit-six-sixes-is-up-for-sale.html. பார்த்த நாள்: 15 August 2014. 
 5. Bynoe, Kenmore (3 May 2011). "Sir Garry: What about Wes?". Nation Newspaper. Archived from the original on 8 May 2011. https://web.archive.org/web/20110508145409/http://www.nationnews.com/articles/view/sir-garry-what-about-wes/. பார்த்த நாள்: 28 June 2011. "Just a couple of days after Barbados celebrated its heroes, the sole living National Hero, The Right Excellent Sir Garfield Sobers, has expressed amazement that one of his closest comrades on the cricket field, Wesley Hall, has not been given a knighthood by his country." 
 6. Parliament of Barbados (2009). "Parliament's History". Barbadosparliament.com. 23 May 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 November 2011 அன்று பார்க்கப்பட்டது.
 7. 7.0 7.1 Sobers, p. 7.
 8. "Wisden Cricketer of the Year 1964". Cricinfo.com. 15 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
 9. "CricketArchive – confirmation of name". Cricketarchive.com. 28 July 1936. 15 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
 10. Sobers, p. 6.
 11. "Boy born with 24 fingers and toes". BBC News. 5 February 2009. http://news.bbc.co.uk/2/hi/health/7870769.stm. பார்த்த நாள்: 5 February 2009. 
 12. 12.0 12.1 12.2 Barbados Government Information Service பரணிடப்பட்டது 24 நவம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்
 13. Sobers, pp. 168–69.
 14. Sobers, p. 244.
 15. Sobers, p. 241.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபர்ஸ்&oldid=3587077" இருந்து மீள்விக்கப்பட்டது