குச்சக் காப்பாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பந்து வீச்சினை எதிர்கொள்ளுமாறு வழமையாக அமர்ந்துள்ள ஓர் குச்சக் காப்பாளர். மந்தவேகப் பந்து வீச்சாளர் அல்லது சுழற்பந்து வீச்சாளருக்கு காப்பாளர் குச்சங்களுக்கு "அருகாமையில்" நிற்பது வழக்கம்.
குச்சக் காப்பாளர் அணியும் கையுறைகள்.

குச்சக் காப்பாளர் (wicket-keeper அல்லது wicketkeeper அல்லது பெரும்பாலும் keeper) துடுப்பாட்ட விளையாட்டில் குச்சங்களுக்கு மற்றும் நிகழ் மட்டையாளரின் பின்னால் நின்று களத்தடுப்பு செய்யும் துடுப்பாட்டக்காரராகும். களத்தடுப்பு அணியில் இவருக்கு மட்டுமே கையுறைகள் அணியவும் கால்களின் வெளியே தடுப்புமட்டை அணியவும் அனுமதிக்கப்பட்ட ஆட்டக்காரர் ஆவார்.[1]

இது ஓர் சிறப்பு களத்தடுப்புப் பணியாகும். சிலநேரங்களில் இவர் பந்து வீசும்போது மற்றொரு ஆட்டக்காரர் இவரது இடத்தில் தற்காலிகமாக களத்தடுப்பு செய்வார். இவரது செயலாக்கம் துடுப்பாட்ட விதிகளின் 40வது சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகிறது.[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Law 40 The Wicket Keeper". Lords Home of Cricket. http://www.lords.org/laws-and-spirit/laws-of-cricket/laws/law-40-the-wicket-keeper,66,AR.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குச்சக்_காப்பாளர்&oldid=2223255" இருந்து மீள்விக்கப்பட்டது