ஓட்ட வீழ்த்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓட்ட வீழ்த்தல் (run out) என்பது துடுப்பாட்ட ஆட்டமிழப்பு முறைகளில் ஒன்றாகும். இது துடுப்பாட்ட விதி 38இல் வரையறுக்கப்பட்டுள்ளது. [1]

விதிமுறை[தொகு]

வீசுகளத்தில் ஒரு மட்டையாளர் தனது மட்டையை வரைகோட்டில் வைக்கும் முன்பு அதற்கு அருகிலுள்ள இழப்பை களத்தடுப்பு வீரர்களில் ஒருவர் தாக்குவது ஓட்ட வீழ்த்தல் என்று அழைக்கப்படுகிறது. ஒருவேளை வீசப்பட்ட பந்து பிழை வீச்சாக இருந்தாலும் இந்த ஆட்டமிழப்பு பொருந்தும்.

ஒருவேளை மட்டையாடுபவர் அடித்த பந்து எந்தவொரு களத்தடுப்பு வீரரின் உடலிலும் படாமல் சென்று காத்திருப்பவருக்கு அருகில் உள்ள இழப்பைத் தாக்கினால் அது ஆட்டமிழப்பாகக் கருதப்படாது.

மன்கட்[தொகு]

ஒரு பந்துவீச்சாளர் பந்தை வீசும் முன்பு காத்திருக்கும் மட்டையாளர் தனது எல்லைக்கோட்டை விட்டு நகர்ந்தால், அதன் அருகிலுள்ள இழப்பைத் தாக்குவதன் மூலம் அவரை பந்துவீச்சாளர் ஆட்டமிழக்கச் செய்யலாம். இது மன்கட் என்று அழைக்கப்படுகிறது. 1947ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு தேர்வுப் போட்டியில் இந்திய வீரர் வினோ மன்கட், ஆத்திரேலிய வீரர் பில் பிரவுணை முதன்முறையாக இந்த முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். எனவே இது அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓட்ட_வீழ்த்தல்&oldid=2870507" இருந்து மீள்விக்கப்பட்டது