காம்ரான் அக்மல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காமரான் அக்மல்
کامران اکمل
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் காம்ரான் அக்மல்
பட்டப்பெயர் கமீ பாய்
வகை மட்டையாளர், குச்சக் காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலது கை
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 172) 9 நவம்பர், 2002: எ சிம்பாப்வே
கடைசித் தேர்வு 26 ஆகஸ்டு, 2010: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 143) 23 நவம்பர், 2002: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி 11 ஏப்ரல், 2017:  எ மேற்கிந்தியத் தீவுகள்
சட்டை இல. 23
முதல் இ20ப போட்டி (cap 3) 28 ஆகஸ்டு, 2006: எ இங்கிலாந்து
கடைசி இ20ப போட்டி 2 ஏப்ரல், 2017:  எ மேற்கிந்தியத் தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2005–2012 லாகூர் லயன்ஸ்
2012–2014 லாகூர் ஈகிள்ஸ்
2008 ராஜஸ்தான் ராயல்ஸ்
2015 முல்தான் டைகர்ஸ்
2017–தற்போது வரை செயின்ட் லூசியா ஸ்டார்ஸ்
தரவுகள்
தே துஒ. நாப 20மு த
ஆட்டங்கள் 53 157 58 221
ஓட்டங்கள் 2,648 3,236 987 11,647
துடுப்பாட்ட சராசரி 30.79 26.09 21.00 37.69
100கள்/50கள் 6/12 5/10 0/5 29/52
அதிகூடிய ஓட்டங்கள் 158* 124 73 594
பந்துவீச்சுகள் - - - -
வீழ்த்தல்கள் - - - -
பந்துவீச்சு சராசரி - - - -
5 வீழ்./ஆட்டம் - - - -
10 வீழ்./ஆட்டம் - - - -
சிறந்த பந்துவீச்சு - - - -
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 184/22 157/31 28/32 780/61

1 செப்டம்பர், 2017 தரவுப்படி மூலம்: ESPNricinfo

காம்ரான் அக்மல் (Kamran Akmal, உருது: کامران اکمل, பிறப்பு: டிசம்பர் 12, 1984) பாக்கிஸ்தான் லாகூர், இல் பிறந்த இவர் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணியின் மட்டையாளர் மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார் இவர் பாக்கித்தான் தேசிய அணி, ஆசிய லெவன் அணி, லாகூர்துடுப்பாட்ட அணி, தேசிய வங்கி அணி, பஞ்சாப் அணி, இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக உள்ளூர்ப்போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார்.2002 ஆம் ஆண்டில் ஹராரே துடுப்பாட்ட சங்க அரங்கத்தில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இவர் 53 தேர்வுப் போட்டிகளில் 2648 ஓட்டங்களை எடுத்துள்ளார்.[1] இதில் 6 நூறுகளும் அடங்கும். 137 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 2924 ஓட்டங்களை எடுத்துள்ளார். இந்தில் ஐந்து நூறுகளும் அடங்கும். பன்னாட்டு இருபது20 போட்டிகளில் 704 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்[2]. குச்சக் காப்பாளாராக தேர்வு போட்டிகளில் 206 இலக்குகள், ஒருநாள் போட்டிகளில் 169 , இருபது20 போட்டிகளில் 52 இலக்குகளையும் ஆட்டமிழக்கச் செய்தார்.[2]

இவரின் சகோதரர்களான அட்னான் அக்மல் மற்றும் உமர் அக்மல் ஆகியோரும் பாக்கித்தான் தேசியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளனர். 2006 ஆம் ஆண்டில் அய்ஷா என்பவரை இவர் திருமணம் செய்தார். இவர்களுக்கு லைபா எனும் மகளும், அய்யன் எனும் மகனும் உள்ளனர்.[3] இவர் லாகூரில் உள்ள பீகான் ஹவுஸ் ஸ்கூல் சிஸ்டம் என்பதில் இவர் பட்டம் பெற்றார்.[2][4]

சர்வதேச போட்டிகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

2002 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவம்பர் 9 இல் ஹராரேவில் நடைபெற்ற வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[5] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 10  பந்துகளில் ஒட்டங்கள் எதுவும் எடுக்காமல் பிரைசின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 49 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 8 நான்குகளும் அடங்கும். இந்தப் போட்டியில் நான்கு வீரர்களை கேட்ச்  பிடித்து வீழ்த்தினார்.[6]

2010 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில்  சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. ஆகஸ்டு 26  இல் இலண்டனில்  நடைபெற்ற இங்கிலாந்துத்  துடுப்பாட்ட அணிக்கு எதிரான நான்காவது  தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 21  பந்துகளில் 13 ஓட்டங்கள் எடுத்து பின்னின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 4 பந்துகளில் 1 ஓட்டங்கள் எடுத்து ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் .இந்தப் போட்டியில் நான்கு வீரர்களை கேட்ச்  பிடித்து வீழ்த்தினார்.[7]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

நவம்பர் 23, 2002  இல் வெலிங்டனில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.இந்தப் போட்டியில் இவருக்கு துடுப்பாட களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தபோட்திலும் குச்சக் காப்பாளராக 2 இலக்குகளை வீழ்த்த உதவினார்.[8]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்ரான்_அக்மல்&oldid=2714338" இருந்து மீள்விக்கப்பட்டது