குமார் சங்கக்கார

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குமார் சங்கக்கார
Kumar Sangakkara.jpg
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் குமார் சொக்சானந்த சங்கக்கார
பட்டப்பெயர் சங்கா
பிறப்பு 27 அக்டோபர் 1977 (1977-10-27) (அகவை 41)
மாத்தளை, இலங்கை
வகை குச்சக் காப்பாளர், மட்டையாளர்
துடுப்பாட்ட நடை இடது கை
பந்துவீச்சு நடை வலது கை
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 84) சூலை 20, 2000: எ தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு சூலை 12, 2012: எ பாக்கித்தான்
முதல் ஒருநாள் போட்டி (cap 93) சூலை 5, 2000: எ பாக்கித்தான்
கடைசி ஒருநாள் போட்டி மார்ச் 18, 2015:  எ தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1997–இன்று நான்டெஸ்கிரிப்ட்ஸ்
2008–2010 கிங்ஸ் லெவன் பஞ்சாப்
2007 வார்விக்ஷையர் மாகாண துடுப்பாட்ட சங்கம்
2011–இன்று டெக்கான் சார்ஜர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேஒ.நாமு.தப.அ
ஆட்டங்கள் 130 404 223 504
ஓட்டங்கள் 12,203 14,234 17,314 18,141
துடுப்பாட்ட சராசரி 58.66 41.98 51.37 42.68
100கள்/50கள் 38/51 23/93 50/75 32/114
அதிகூடிய ஓட்டங்கள் 319 169 319 169
பந்து வீச்சுகள் 84 246
வீழ்த்தல்கள் 0 1
பந்துவீச்சு சராசரி 150.00
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0
சிறந்த பந்துவீச்சு 1/13
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 178/20 400/98 344/33 504/123

மார்ச் 18, 2015 தரவுப்படி மூலம்: கிரிக்கின்ஃபோ

குமார் சொக்சானந்த சங்கக்கார (Kumar Chokshanada Sangakkara (Sinhalese: කුමාර සංගක්කාර;பிறப்பு: 27 அக்டோபர் 1977, மாத்தளை) அல்லது சுருக்கமக குமார் சங்கக்கார என்பவர் முன்னாள் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மட்டையாளரும் ,தலைவர் (துடுப்பாட்டம்) மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மட்டையாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[1][2] மேலும் இவரின் காலத்தில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய மட்டையாளர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். இவருடைய நண்பர் மற்றும் சகவீரரான மகேல ஜயவர்தனவுடன் இணைந்து அனைத்து வடிவத் துடுப்பாட்டங்களிலும் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.[1][3][4][5][6][7] இவர் சுமார் 15 ஆண்டுகாலம் துடுப்பாட்டம் விளையாடி வந்தார்.[8] இவர் விளையாடிய அனைத்து சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 28,016 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். இவர் இங்கிலாந்தின் வோக்விசயர் மாகாண அணிக்கும் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான நொன்டிஸ்கிரிப்ட் துடுப்பாட்ட கழகத்துக்கும் விளையாடி வருகின்றார்.

இடது கை துடுப்பாட்ட வீரரான இவர் குச்சக் காப்பாளராகவும் இருந்துள்ளார். குச்சக் காப்பாளராக பல சாதனைகளைப் புரிந்துள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் ஏழாவது இடத்திலும் உள்ளார்.[9][10]

சங்கக்கரா, துடுப்பாட்ட வரலாற்றில் அதிக திறமைகள் , நிதானம் உள்ள சில மட்டையாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[11][12] 2005 முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மட்டையாளர் தரவரிசையில் அதிக முறை முதலிடத்தில் இருந்தார்.

2014 ஐசிசி உலக இருபது20 தொடரில் இலங்கைத் துடுப்பாட்ட அணி கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமான நபர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மேலும் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2012 ஐசிசி உலக இருபது20 ஆகிய தொடர்களில் இறுதிப் போட்டிக்குச் சென்ற இலங்கை அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். 2014 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்று அணி முதன்முறையாக கோப்பை வெல்வதற்கு உதவினார்.

தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதி விரைவாக 8,000, 9,000, 11,000 மற்றும்12,000 ஓட்டங்களை எடுத்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் 10,000 ஓட்டஙகளை விரைவாக எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.[13] பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை 2012 ஆம் ஆண்டிலும் , சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான விருதை அதே ஆண்டிலும் பெற்றார். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிக்கான சிறந்த வீரர் விருதினை 2011 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளார்.[14] எல் ஜி மக்கள் விருதினை 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளார். தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களுக்கான உலக லெவன் அணிகளில் ஆறு முறையும் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உலக லெவன் அணிகளில் மூன்று முறையும் இவர் இடம்பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டின் முன்னணித் துடுப்பாட்டக் காரராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு இவரை அறிவித்தது.

தற்போது இங்கிலாந்தின் கவுண்டி அணியான சர்ரே அணிக்காக விளையாடி வருகின்றார்.

பிக்பாஸ் T20 போட்டியில் ஹார்பர்ட் ஹரிக்கான்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்

வீரர் புள்ளிவிபரங்கள்[தொகு]

துடுப்பாட்ட சாதனைகள்[தொகு]

■ப்ராட்மானுக்கு அடுத்ததாக அதிக இரட்டை சதங்கள் அடித்த வீரர்

■உலககிண்ண போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்த வீரர்

சச்சின் டெண்டுல்கர் இற்கு அடுத்ததாக அதிக மொத்த ஓட்டங்கள் பெற்றவர்

தேர்வுத் துடுப்பாட்ட சதங்கள்[தொகு]

பின்வரும் அட்டவணை, குமார் சங்கக்காரவின் தேர்வுத் துடுப்பாட்ட சதங்களின் சுருக்க வடிமாகும்

 • ஓட்டங்கள்" நிடலில் * என்பது ஆட்டமிழக்காமல் என்பதைக் குறிக்கிறது.
தே.து. குமார் சங்கக்காரவின் சதங்கள்
ஓட்டங்கள் ஆட்டங்கள் எதிர் நகரம்/நாடு இடம் ஆண்டு
[1] 105* 10 இந்தியா காலி, இலங்கை காலி அரங்கம் 2001
[2] 140 14 மேற்கிந்தியத்தீவுகள் காலி, இலங்கை காலி அரங்கம் 2001
[3] 128 17 சிம்பாப்வே கொழும்பு, இலங்கை சிங்கள் விளையாட்டுக் கழக அரங்கம் 2002
[4] 230 20 பாகிஸ்தான் லாகூர்,பாகிஸ்தான் கடாபி அரங்கம் 2002
[5] 270 38 சிம்பாப்வே புலவாயோ, சிம்பாப்வே குயிண்ஸ் விளையட்டுக் கழகம் 2004
[6] 232 42 தென்னாபிரிக்கா கொழும்பு, இலங்கை சிங்கள் விளையாட்டுக் கழக அரங்கம் 2004
[7] 138 44 பாகிஸ்தான் கராச்சி, பாகிஸ்தான் தேசிய அரங்கம் 2004
[8] 157 48 மேற்கிந்தியத்தீவுகள் கண்டி, இலங்கை அஸ்கிரிய அரங்கம் 2005
[9] 185 56 பாகிஸ்தான் கொழும்பு, இலங்கை சிங்கள் விளையாட்டுக் கழக அரங்கம் 2006
[10] 287 61 தென்னாபிரிக்கா கொழும்பு, இலங்கை சிங்கள் விளையாட்டுக் கழக அரங்கம் 2006
[11] 100* 63 நியூசிலாந்து கிறைஸ்ட்சார்ச், நியூசிலாந்து ஜேட் அரங்கம் 2006
[12] 156* 64 நியூசிலாந்து வெலிங்டன், நியூசிலாந்து பேசின் ரிசேவ் 2006

ஒருநாள் துடுப்பாட்ட சதங்கள்[தொகு]

ஒ.ப.து. குமார் சங்கக்காரவின் சதங்கள்
ஓட்டங்கள் ஆட்டங்கள் எதிர் நகரம்/நாடு இடம் ஆண்டு
[1] 100* 86 பாகிஸ்தான் சார்ஜா, UAE சார்ஜா அரங்கம் 2003
[2] 103* 87 கென்யா சார்ஜா, UAE சார்ஜா அரங்கம் 2003
[3] 101 100 அவுஸ்திரேலியா கொழும்பு, இலங்கை ஆர். பிரேமதாசா அரங்கம் 2004
[4] 138* 141 இந்தியா ஜைபூர், இந்தியா சுவாய் மன்சிங் அரங்கம் 2005
[5] 109 163 வங்காளதேசம் சிட்டோங் வங்காளதேசம் சிட்டோங் பிராந்திய அரங்கம் 2006
[6] 110 183 இந்தியா ராஜ்கோட், இந்தியா மதாவ்ராவோ சிந்தியா துடுப்பாட்ட அரங்கம் 2007

புதிய தரவுகள் செப்டெம்பர் 18, 2012 உள்ளபடி[தொகு]

இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 30

 • விளையாடிய இனிங்ஸ்: 28
 • ஆட்டமிழக்காமை: 6
 • ஓட்டங்கள்: 991
 • கூடிய ஓட்டம்: 111
 • சராசரி: 45.04
 • 100கள்: 1
 • 50கள் :7,

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 333

 • விளையாடிய இனிங்ஸ்: 312
 • ஆட்டமிழக்காமை: 32
 • ஓட்டங்கள் :10842
 • கூடிய ஓட்டம் 138(ஆட்டமிழக்காமல்)
 • சராசரி: 38.72,
 • 100 கள்: 14
 • 50கள்: 73

*இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 429,

 • விளையாடிய இனிங்ஸ்: 404
 • ஆட்டமிழக்காமை: 42
 • ஓட்டங்கள்: 14603
 • கூடிய ஓட்டம்: 156 (ஆட்டமிழக்காமல்)
 • சராசரி: 40.33,
 • 100கள்: 22,
 • 50கள்: 94.

2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் செயல்திறன்[தொகு]

ஏழு ஆட்டங்களில் 541 ஓட்டங்கள் எடுத்தார். தனது அணி தோல்வியற்ற காலிறுதி ஆட்டத்தின் முடிவில், இந்த உலகக்கிண்ணத்தில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த மட்டையாளராக இருந்தார்.

வெளியிணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 "Kumar Sangakkara deserves to stand with modern cricket's four great peaks". The Guardian. பார்த்த நாள் 26 August 2015.
 2. "Bangladesh v SL, 2nd Test, Chittagong, 2nd day February 5, 2014 The case for Sangakkara's all-time greatness". ESPNcricinfo. பார்த்த நாள் 26 August 2015.
 3. "The case for Kumar Sangakkara's all-time greatness - Cricket - ESPN Cricinfo". Cricinfo.
 4. "De Villiers v Sangakkara; the two best batsman in the World?". icc-cricket.com. மூல முகவரியிலிருந்து 16 April 2015 அன்று பரணிடப்பட்டது.
 5. "Kumar Sangakkara is a modern Test great who never gets his due". dna (4 January 2015).
 6. Theviyanthan Krishnamohan (17 September 2014). "Why Kumar Sangakkara is one of the greatest Test batsmen of all time". sportskeeda.com.
 7. "The best batsman since Bradman". cricket.com.au.
 8. "Records | Combined Test, ODI and T20I records | Batting records | Most runs in career | ESPN Cricinfo". Stats.espncricinfo.com (2015-12-29). பார்த்த நாள் 2016-01-02.
 9. "Batting records - One-Day Internationals - Cricinfo Statsguru - ESPN Cricinfo". Cricinfo.
 10. "Batting records - Test matches - Cricinfo Statsguru - ESPN Cricinfo". Cricinfo. மூல முகவரியிலிருந்து 28 February 2014 அன்று பரணிடப்பட்டது.
 11. Brettig, Daniel (15 September 2011). "Kumar Sangakkara: 'There's nothing that comes close to Test cricket'". ESPNcricinfo. பார்த்த நாள் 11 June 2012.
 12. Roebuck, Peter (16 September 2011). "The all-round art of Sangakkara". ESPNcricinfo. பார்த்த நாள் 11 June 2012.
 13. "Sri Lanka in Australia 2012–13 – 1st Test", ESPNcricinfo, http://www.espncricinfo.com/australia-v-sri-lanka-2012/engine/match/573012.html?innings=1;view=commentary, பார்த்த நாள்: 22 February 2013 
 14. The Guardian (13 December 2013). "Ashes captains Clarke and Cook both hit a ton and pick up an annual award". https://www.theguardian.com/sport/2013/dec/13/ashes-captains-michael-clarke-alastair-cook. பார்த்த நாள்: 13 December 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமார்_சங்கக்கார&oldid=2719481" இருந்து மீள்விக்கப்பட்டது