றசல் பிரேமகுமாரன் ஆர்னோல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரசல் ஆர்னோல்ட்
Cricket no pic.png
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 44 180
ஓட்டங்கள் 1821 3950
துடுப்பாட்ட சராசரி 28.01 35.26
100கள்/50கள் 3/10 1/28
அதியுயர் புள்ளி 123 103
பந்துவீச்சுகள் 1334 2157
விக்கெட்டுகள் 11 40
பந்துவீச்சு சராசரி 54.36 43.47
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 3/76 3/47
பிடிகள்/ஸ்டம்புகள் 51/- 48/-

மே May, 2007 தரவுப்படி மூலம்: [1]

றசல் பிரேமகுமாரன் ஆர்னோல்ட் (Russel Arnold, பிறப்பு: அக்டோபர் 25, 1973, கொழும்பு) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் 44 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 180 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

விளையாட்டு வரலாறு[தொகு]

1997ல் முதன்முதலாக டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாட ஆரம்பித்த இவர், அதே வருடத்தில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார். தொடக்கத்தில் ஆரம்ப துடுப்பாட்டக்காரராக சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஆர்னோல்ட் பின்னர் 5ம், 6ம் துடுப்பாட்டக்காரராக விளையாடி வருகிறார். ஆட்டத்தின் மிகச்சிக்கலான நேரத்திலும் கலங்காமல் விளையாடக்கூடியவர் என்ற பெயரைக் கொண்டவர். ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணியை பலமுறை தனது அமைதியான ஆட்டத்தினால் காப்பாற்றியிருக்கிறார். சிறந்த களத்தடுப்பாட்டக்காரரும், அவசியமான நேரங்களில் திறமையாக பந்து வீசக்கூடியவருமாவார். மெதடிஸ்த கிறிஸ்தவரான இவரும் முத்தையா முரளிதரனும் இலங்கை அணியில் தற்போதுள்ள இரண்டு தமிழ் வீரர்களாகும்.

புள்ளி விபரம்[தொகு]

  • டெஸ்ட் ஆட்டத்தில் இவர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை - 123 ( 1999ல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக லாகூரில் நடந்த ஆட்டத்தில்)
  • இதுவரை டெஸ்ட் ஆட்டங்களில் 11 விக்கற்றுகளையும், ஒருநாள் ஆட்டங்களில் 38 விக்கற்றுகளையும் தனது பந்துவீச்சினால் கைப்பற்றியிருக்கிறார்.

2007 உலகக்கிண்ணத் தொடரில்[தொகு]

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் முன்னணி வீரர்கள் எல்லோரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து போய்விட, இவரும் திலகரட்ண டில்சானும் இணந்து 97 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணியின் ஓட்டத்தொகையை ஓரளவு உயர்த்தினார்கள்.

வெளியிணைப்புக்கள்[தொகு]