மட்டையாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்வதேச துடுப்பாட்டத்தில் 30,000 ஓட்டங்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர் இந்திய துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார் . [1] அவர் பந்தை எதிர்நோக்கி இருக்கும் காட்சி.

துடுப்பாட்டத்தில் மட்டையாட்டம் என்பது மட்டையினைக் கொண்டு பந்தினை அடித்த பின்பு ஓட்டங்களை எடுப்பது அல்லது ஆட்டமிழக்காமல் இருப்பதற்காக பந்தினை மட்டையினைக் கொண்டு தடுக்கும் திறன் ஆகும். இவர்கள் மட்டையாளர் என அறியப்படுகின்றனர்.வெவ்வேறு துடுப்பாட்ட ஆடுகளங்களில், குறிப்பாக வெவ்வேறு நாடுகளில் விளையாடும்போது மட்டையாடும் வீரர்கள் பல்வேறு நிலைமைகளுக்கு ஏற்றவாறு விளையாடும் திறன்களைப் பெற்றிருத்தல் அவசியமாகிறது. சிறப்பான மட்டையாளர்களாக அறியப்படும் வீரர்கள் சிறந்த முடிவெடுக்கும் திறன் மற்றும் நல்ல உத்திகளைக் கையாளும் திறன்களைக் கொண்டவர்களாக இருப்பர்.[2]

குறிப்புகள்[தொகு]

  1. "Records / Combined Test, ODI and T20I records / Batting records; Most runs in career". ESPNcricinfo. 17 November 2013. 17 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "batting - Definition of batting in English by Oxford Dictionaries". Oxford Dictionaries - English. 26 ஏப்ரல் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மட்டையாட்டம்&oldid=3530214" இருந்து மீள்விக்கப்பட்டது