ஓட்டம் (துடுப்பாட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓட்டம் (Runs) என்பது துடுப்பாட்டத்தில் மட்டைவீசும் அணிக்கு வழங்கப்படும் புள்ளிகளைக் குறிக்கிறது. பொதுவாக ஒரு போட்டியில் எதிரணியை விட அதிக ஓட்டங்கள் எடுத்த அணி வெற்றி பெறும்.

ஓட்டம் கிடைக்கும் முறைகள்[தொகு]

ஓர் அணிக்கு மூன்று வகையான முறைகள் மூலம் ஓட்டங்கள் கிடைக்கின்றன.

  • இழப்புகளுக்கு இடையே ஓடுதல்
  • அடித்த பந்து எல்லை தாண்டுதல்
  • இலவசமாக கிடைத்தல்

ஒரு மட்டையாளர் பந்தை அடித்தவுடன் களத்தின் இரு முனைகளில் உள்ள இழப்புகளுக்கு இடையே எத்தனை முறை ஓடிச்சென்று தன் மட்டையால் வரைகோட்டைத் தொடுகிறாரோ அத்தனை ஓட்டங்கள் பெறுவார். அப்போது அவருக்கு எதிர்திசையில் காத்திருப்பவரும் ஓடிச்சென்று வரைகோடுகளைத் தொட்டிருக்க வேண்டும். ஒரு மட்டையாளர் ஒருமை எண்ணிக்கையில் ஓட்டங்கள் எடுக்கும் போது மட்டையாடுபவரும் காத்திருப்பவரும் களம் மாறுவர். இதனால் அவர்களின் பணிகளும் மாற்றமடையும். பன்மை ஓட்டங்கள் எடுக்கும் போது இருவரும் பழைய இடத்திற்கே வந்து தங்கள் பணிகளைத் தொடர்வர்.

ஒருவேளை மட்டையாளர் அடித்த பந்து நிலத்தில் பட்டு எகிறிச் சென்று எல்லையைத் தாண்டினால் நான்கு ஓட்டங்களும் நிலத்தில் படாமல் நேரடியாக எல்லையைத் தாண்டினால் ஆறு ஓட்டங்களும் கிடைக்கும். அப்போது களத்தில் ஓடி எடுத்த ஓட்டங்கள் கணக்கிடப்படாது.[1]

மட்டையாளர் எடுக்காமல் ஓர் அணிக்கு இலவசமாகக் கிடைக்கும் ஓட்டங்களுக்குக் கூடுதல்கள் என்று பெயர். அகல வீச்சு, பிழை வீச்சு, அடியா ஓட்டம், கால்படு ஓட்டம், தண்டனை ஓட்டம் ஆகிய ஐந்து வகையான நிகழ்வுகளுக்கும் கூடுதல் ஓட்டம் வழங்கப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Law 18 – Scoring runs". MCC. 29 September 2017 அன்று பார்க்கப்பட்டது.