உள்ளடக்கத்துக்குச் செல்

உபுல் தரங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உபுல் தரங்க
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு2 பெப்ரவரி 1985 (1985-02-02) (அகவை 39)
இலங்கை
மட்டையாட்ட நடைஇடது கை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்18 டிசம்பர் 2005 எ. இந்தியா
கடைசித் தேர்வு18 டிசம்பர் 2007 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம்2 ஆகஸ்ட் 2005 எ. மேற்கிந்தியத்தீவுகள்
கடைசி ஒநாப18 ஜனவரி 2013 எ. ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2000–01Singha Sports Club
2003–presentNondescripts Cricket Club
2007–presentRuhuna
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.நா.பா மு.து ப.அ
ஆட்டங்கள் 15 162 85 245
ஓட்டங்கள் 713 4,954 5,054 7,456
மட்டையாட்ட சராசரி 28.52 33.70 37.16 33.28
100கள்/50கள் 1/3 12/28 11/20 16/43
அதியுயர் ஓட்டம் 165 133 265* 173*
வீசிய பந்துகள் 18
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 0/4
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/– 31/– 63/1 62/2
மூலம்: Cricinfo, 18 ஜனவரி 2013

வரசிவதனா உபுல் தரங்க (Warushavithana Upul Tharanga (பிறப்பு: 2 பெப்ரவரி 1985), பரவலாக இவர் Upul Tharanga என அறியப்படுகிறார்(Sinhala: උපුල් තරංග), இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார். இவர் ஒருநாள் போட்டிகளின் முன்னாள் தலைவர் ஆவார்.[1] இவர் 2005 யூலை மாதம் முதலாவதாக இலங்க அணிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டார். இலங்கை முதல்தர துடுப்பாட்ட கழகமொன்றான நொன்டிஸ்கிரிப்ட் துடுப்பாட்ட கழகத்துக்கு 15 வயது முதலே விளையாடிவந்த உபுல் இலங்கை நாட்டு அணிக்கு விளையாட முன்னர் இலங்கை துடுப்பாட்ட நாட்டு அணியின் 15 வயதுக்கு கீழ், 17 வயதுக்கு கீழ் 19 வயதுக்கு கீழ் இலங்கை A அணிகளுக்கு விளையாடி வந்துள்ளார். இடதுகை மட்டையாளரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிகளுக்காக தேர்வுத் துடுப்பாட்டம் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சர்வதேசப் போட்டிகள்[தொகு]

2006 ஆம் ஆண்டுல் இலங்கைத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயண செய்து விளையாடியது. அந்தத் தொடரினை இலங்கை அணி முழுமையாகக் கைப்பற்றியது. அதன் இறுதி ஒருநாள் போட்டியில் துவக்க வீரராக களம் இறங்கி சனத் ஜெயசூரியாவுடன் இணைந்து 300 ஒட்டங்களுக்கும் அதிகமான ஓட்டங்களை எடுத்தனர். இதுவே இலங்கைத் துவக்க வீரர்களில் எடுக்கப்பட்ட அதிகபட்ச துவக்க ஓட்டம் ஆகும். இதில் இவர் 102 பந்துகளில் 109 ஓட்டங்களை எடுத்தார். இந்தத் தொடரினை இலங்கை அணி 5-0 என்று ஒட்டுமொத்தமாக முதல் முறை கைப்பற்றியது.[2]

2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக் கிண்ணத் தொடரில் இவர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தத் தவறினார். நியூசிலாதுத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே இவர் நூறு ஓட்டங்களை அடித்தார். இதே ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரிலும் இவரின் மோசமான ஆட்டம் தொடர்ந்தது.இதனால் இவருக்குப் பதிலாக ஒருநாள் போட்டிகளில் மலிந்தா வர்ணபுராவும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் மைக்கேல் வந்தோர்தும் தேர்வாகினர். ஆனால் இவர் அணியில் தக்க வைக்கப்பட்டார்.[3]

2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக் கிண்னத் தொடரில் இவர் மீண்டும் தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அதில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் திலகரத்ன தில்சனுடன் இணைந்து சிறப்பான துவக்கம் தந்தார்.[4] பின் இவரின் சிறப்பான ஆட்டத்திறனைப் பார்த்து இவர் இலங்கை அணியின் அடுத்த தலைவராகலாம் எனத் தெரிவித்தார்.[சான்று தேவை]

உபுல் தரங்கா மற்ற வீரர்களுடன் இணைந்து ஒருநாள் போட்டிகளில் ஏழு முறை 200 ஓட்டங்களுக்கும் மேலாக எடுத்துள்ளார். இதன்மூலம் அதிக முறை 200 ஓட்டங்களுக்கும் மேலாக எடுத்த இரண்டாவது வீரர் எனும் சாதனை படைத்தார். இதற்கு முன்பாக ரிக்கி பாண்டிங் இந்தச் சாதனை படைத்தார். 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்ன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 174* ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்களைப் பதிவுசெய்த வீரர் ஆனார். சனத் ஜயசூர்யா 189 ஓட்டங்களை எடுத்ததே சாதனையாக உள்ளது.மேலும் 5000 ஓட்டங்களைக் கடந்த ஒன்பதாவது இலங்கை வீரர் ஆனார்.15 நூறு ஓட்டங்களை எடுத்துள்ள இவர் 12 முறை ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றுள்ளார்.[5]

119 போட்டிகளில் விளையாடி இவர் ஒருநாள் போட்டிகளில் 4000 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் அதிவிரைவாக 4000 ஓட்டங்களை எடுத்த இலங்கை வீரர் எனும் சாதனை படைத்தார்.[6]

சான்றுகள்[தொகு]

  1. "Chandimal to lead SL in Tests, Tharanga in shorter formats". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 July 2017.
  2. "England v Sri Lanka, 2006". ESPNcricinfo.
  3. "Tharanga hundred can't stop defeat". ESPNcricinfo.
  4. "Tharanga and Dilshan crush England". ESPNcricinfo.
  5. "Tharanga's best, India's worst, and a first in ODIs". ESPNcricinfo.
  6. "RECORDS / ONE-DAY INTERNATIONALS / BATTING RECORDS / FASTEST TO 4000 RUNS". ESPNcricinfo.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உபுல்_தரங்க&oldid=2932805" இலிருந்து மீள்விக்கப்பட்டது