முத்தையா முரளிதரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முத்தையா முரளிதரன்
MuralitharanBust2004IMG.JPG
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் முத்தையா முரளிதரன்
பட்டப்பெயர் முரளி
பிறப்பு 17 ஏப்ரல் 1972 (1972-04-17) (அகவை 45)
கண்டி, இலங்கை
வகை பந்து வீச்சாளர்
துடுப்பாட்ட நடை வலக்கை-மட்டையாளர்
பந்துவீச்சு நடை வலக்கை ஓஃப் சுழற்பந்து வீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 54) ஆகஸ்ட் 28, 1992: எ ஆஸ்திரேலியா
கடைசித் தேர்வு ஜூலை 12, 2010: எ இந்தியா
முதல் ஒருநாள் போட்டி (cap 70) ஆகஸ்ட் 12, 1993: எ இந்தியா
கடைசி ஒருநாள் போட்டி ஏப்ரல் 2, 2011:  எ இந்தியா
சட்டை இல. 08
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1991–- தமிழ்ச் சங்கம்
1999–2007 லங்காசயர்
2003 கெண்ட்
2008 சென்னை சூப்பர் கிங்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒரு
நாள்
[17]
முதற்
தரம்
A
தரம்
ஆட்டங்கள் 133 350 232 444
ஓட்டங்கள் 1,261 674 2,192 938
துடுப்பாட்ட சராசரி 11.67 6.80 11.35 7.32
100கள்/50கள் 0/1 0/0 0/1 0/0
அதிக ஓட்டங்கள் 67 33* 67 33*
பந்து வீச்சுகள் 44,039 18,811 66,933 23,308
இலக்குகள் 800 534 1,374 666
பந்துவீச்சு சராசரி 22.72 23.08 19.64 22.49
சுற்றில் 5 இலக்குகள் 67 10 119 12
ஆட்டத்தில் 10 இலக்குகள் 22 n/a 34 n/a
சிறந்த பந்துவீச்சு 9/51 7/30 9/51 7/30
பிடிகள்/ஸ்டம்புகள் 72/– 130/– 123/– 158/–

7 February, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

முத்தையா முரளிதரன் (Muttiah Muralitharan, பிறப்பு: ஏப்ரல் 17, 1972, கண்டி) பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். தேர்வு (Test) துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடி 800 இலக்குகளை (விக்கெட்டுகளை) வீழ்த்தி உலகசாதனை படைத்துள்ளார். [1] 22 சூலை 2010 அன்று தேர்வுக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்திலும் இவர் அதிகூடிய இலக்குகளை வீழ்த்திய பட்டியலில் முதலாவதாக உள்ளார்[2]. இவரது பந்துவீச்சின் தன்மைக் குறித்த பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆனால் ஆய்வுக் கூட பரிசோதனைகளின் பின்னர் சர்ச்சைகள் பொய்யென நிரூபிக்கப்பட்டன.[சான்று தேவை]

2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார். [3].

இலங்கை துடுப்பாட்ட அணியில் விளையாடும் ஒரு சில தமிழர்களில் ஒருவரான முரளி 2005 இல் இந்தியரான மதிமலர் இராமானுதியைத் திருமணம் செய்து கொண்டார்[4].

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

சின்னசாமி முத்தையா, இலட்சுமி முத்தையா தம்பதிகளுக்கு மகனாக 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ல் முரளிதரன் பிறந்தார். சிறிதரன், பிரபாகரன், சசிகரன் என்ற மூன்று சகோதரர்கள் உள்ளனர். முரளிதரனின் தந்தை இலங்கையில் பிரபல பிஸ்கட் தயாரிக்கும் நிறுனவமான லக்கிலாண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் பாடசாலைக் கல்வியை பயின்ற முரளிதரன், பாடசாலை துடுப்பாட்ட அணியில் விளையாடி அதற்கு தலைமையும் தாங்கியிருந்தார். பாடசாலைக் காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த முரளிதரன் அச்சமயம் பாடசாலை துடுப்பாட்ட அணியின் பயிற்றுனர் சுனில் பெர்னாண்டோவின் ஆலோசனைக்கேற்ப சுழற்பந்து வீச்சை தொடங்கினார். 1990 மற்றும் 1991 ஆண்டுகளில் இலங்கையின் பாட்டா நிறுவனம் வழங்கும் "பாட்டா ஆண்டின் சிறந்த பாடசாலை துடுப்பாட்ட வீரர்" என்ற விருதை பெற்றார். 1991ஆம் ஆண்டு தமிழ் யூனியன் துடுப்பாட்டக் கழகத்தில் இணைந்து தனது துடுப்பாட்ட வாழ்வை ஆரம்பித்தார்.[சான்று தேவை]

துடுப்பாட்ட வீரராக[தொகு]

இலங்கை அணிக்காக 1992 இல் முதல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் 1992 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார். தனது முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டியை ஆகஸ்டு 12, 1993 இல் இந்திய அணிக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார்.

துடுப்பாட்ட உலகின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகை உலகின் தலைசிறந்த வீரராக முரளிதரனைத் தெரிவு செய்துள்ளது. இந்த விருது வழங்கும் முறை உருவாக்கப்பட்டு நான்காவது வீரராக இம்முறை முரளிதரன் விஸ்டன் சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, இந்த விருதுகளை அவுஸ்திரேலியாவின் றிக்கி பொன்டிங் மற்றும் ஷேன் வோர்ன், இங்கிலாந்தின் அன்றூ பிளின்டோவ் ஆகியோர் பெற்றுள்ளனர். 1992 இல் இலங்கை அணிக்கு விளையாடத் தொடங்கியதில் இருந்து இதுவரை 800 தேர்வு இலக்குகளையும் 500க்கும் அதிகமான ஒருநாள் இலக்குகளையும் வீழ்த்திச் சாதனை புரிந்துள்ளார். ஸ்டீவ் வா முத்தையா முரளிதரனை பந்து வீச்சின் டொன் பிறட்மன் என வர்ணித்துள்ளார்[5].

உலகசாதனைகளும் அடைவுகளும்[தொகு]

முத்தையா முரளிதரன் பல உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்:

 • தேர்வு மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் மொத்தமாக அதிகூடிய இலக்குகள் பெற்றவர் (1155 இலக்குகள் ஜூலை 14 2007இன் படி)[6]
 • தேர்வு துடுப்பாட்டத்தில் போட்டியொன்றில் 10 இலக்குகளுக்கதிகமாக அதிக சந்தர்ப்பங்களில் பெற்றவர் (20).[7]
 • தேர்வு துடுப்பாட்டத்தில் போட்டியொன்றில் ஐந்து இலக்குகளுக்கதிகமாக அதிக சந்தர்ப்பங்களில் பெற்றவர (60) [8]
 • ஜிம் லேக்கர் (இங்கிலாந்து) மற்றும் முரளிதரன் மாதிரமே தேர்வு துடுப்பாட்டத்தில் சுற்று ஒன்றில் ஒன்பது இலக்குகளை இருமுறைப் பெற்றவர்களாவர்.
 • தேர்வுதுடுப்பாட்ட நாடுகள் அனைத்திற்கும் எதிராக 50 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். [9]
 • தேர்வுதுடுப்பாட்ட நாடுகள் அனைத்திற்கும் எதிராக ஒரு போட்டியில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். [10]
 • வேகமான 350[11], 400[12], 450[13], 500[14], 550[15], 600[16], 650[17] மற்றும் 700[18] தேர்வு இலக்குகளைப் பெற்றவர்.
 • நான்கு அடுத்தடுத்த தேர்வுப் போட்டிகளில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். முரளி இதனை இருமுறைச் செய்துள்ளார்.[19]
 • தேர்வு துடுப்பாட்டத்தில் நேரடி ஆட்டமிழப்புகள் அதிகமாக கொண்ட வீரர். (153) [20] [21]
 • அதிக சாதகமான களத்தார்/பந்துவீச்சாளர் சோடி பிடி,மகெல ஜயவர்தனா - பந்து முரளி(63) [22]

புதிய தரவுகள் 12 பெப்ரவரி 2011 உள்ளபடி[தொகு]

துடுப்பாட்டம்[தொகு]

இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 31

 • விளையாடிய இனிங்ஸ்: 11
 • ஆட்டமிழக்காமை: 4
 • ஓட்டங்கள்: 62
 • கூடிய ஓட்டம்: 16
 • சராசரி: 8.85,
 • 100கள்: 0,
 • 50கள் :0,

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 341

 • விளையாடிய இனிங்ஸ்: 160
 • ஆட்டமிழக்காமை: 62
 • ஓட்டங்கள் :667
 • கூடிய ஓட்டம் 33 (ஆட்டமிழக்காமல்)
 • சராசரி: 6.80
 • 100 கள்: 0
 • 50கள்: 0

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 444

 • விளையாடிய இனிங்ஸ்: 203
 • ஆட்டமிழக்காமை: 75
 • ஓட்டங்கள்: 938
 • கூடிய ஓட்டம்: 33(ஆட்டமிழக்காமல்)
 • சராசரி: 7.32
 • 100கள்: 0
 • 50கள்: 0.

பந்து வீச்சு[தொகு]

இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 31

 • வீசிய பந்துகள் :1635
 • கொடுத்த ஓட்டங்கள்:1044
 • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :53
 • சிறந்த பந்து வீச்சு: 4/19
 • சராசரி: 19.69
 • ஐந்து விக்கட்டுக்கள்: 0

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 341

 • வீசிய பந்துகள் :18385
 • கொடுத்த ஓட்டங்கள்:12035
 • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :519
 • சிறந்த பந்து வீச்சு: 7/30
 • சராசரி: 23.18
 • ஐந்து விக்கட்டுக்கள்: 10

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 444

 • வீசிய பந்துகள் :23308
 • கொடுத்த ஓட்டங்கள்:14979
 • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :666
 • சிறந்த பந்து வீச்சு: 7/30
 • சராசரி: 22.49
 • ஐந்து விக்கட்டுக்கள்: 12

ஆதாரங்கள்[தொகு]

 1. "ஷேன் வோர்னின் இலக்கை முரளி தாண்டினார்".
 2. Cricinfo, ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய இலக்குகள்
 3. [1]
 4. [2]
 5. http://web.archive.org/web/20100916100235/http://www.time.com/time/asia/2004/heroes/hmuttiah_muralitharan.html
 6. http://content-usa.cricinfo.com/srilanka/content/current/player/49636.html
 7. [3]
 8. [4]
 9. [5]
 10. [6]
 11. [7]
 12. [8]
 13. [9]
 14. [10]
 15. [11]
 16. [12]
 17. [13]
 18. Tests - Fastest to 700 Career Wickets
 19. [14]
 20. [15]
 21. Lynch, Steven (2005-07-11). "Most ODIs before a Test, and double figures all in a row". கிரிக்இன்ஃபோ. பார்த்த நாள் 2007-01-04.
 22. [16]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்தையா_முரளிதரன்&oldid=2472836" இருந்து மீள்விக்கப்பட்டது