உள்ளடக்கத்துக்குச் செல்

கவுதம் கம்பீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவுதம் கம்பீர்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு14 அக்டோபர் 1981 (1981-10-14) (அகவை 43)
புது தில்லி, இந்தியா
உயரம்5 அடி 6 அங் (1.68 m)
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைவலது கை
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 249)3 நவம்பர் 2004 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வு17 டிசம்பர் 2012 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 149)11 ஏப்ரல் 2003 எ. வங்காளதேசம்
கடைசி ஒநாப27 ஜனவரி 2013 எ. இங்கிலாந்து
இ20ப அறிமுகம் (தொப்பி 12)13 செப்டம்பர் 2007 எ. இசுக்கொட்லாந்து
கடைசி இ20ப28 டிசம்பர் 2012 எ. பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1999/00–presentDelhi
2008–2010டெல்லி டேர்டெவில்ஸ்
2011–presentகொல்கத்தா நைட் ரைடர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து ஒ.ப.து மு.த.து ப.அ.து
ஆட்டங்கள் 54 147 140 252
ஓட்டங்கள் 4,021 5,238 11,162 8,679
மட்டையாட்ட சராசரி 44.18 39.68 51.20 38.34
100கள்/50கள் 9/21 11/34 32/50 19/52
அதியுயர் ஓட்டம் 206 150* 233* 150*
வீசிய பந்துகள் 12 6 397 37
வீழ்த்தல்கள் 0 7 1
பந்துவீச்சு சராசரி 40.14 36.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0
சிறந்த பந்துவீச்சு 3/12 1/7
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
38/– 36/– 87/– 68/–
மூலம்: Cricinfo, 6 ஜனவரி 2013

கவுதம் கம்பீர் (Gautam Gambhir,pronunciation பிறப்பு: அக்டோபர் 14, 1981) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார்[1]. இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய அனைத்து வடிவங்களிலும் விளையாடியுள்ளார். இவர் இடது கை மட்டையாளர் ஆவார். துவக்க வீரராக களம் இறங்கி வருகிறார்.[2] உள்ளூர்ப் போட்டிகளில் புது தில்லி அணிக்காக விளையாடி வருகிறார்.[3] இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் 2017 ஆம் ஆண்டு வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவராக விளையாடி வந்தார். ஆனால் 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணித் தலைவராக விளையாடுகிறார்[3]. 2003 ஆம் ஆண்டில் வங்காளதேச துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[3] பின் 2004 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[3] 2010 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான ஆறு ஒருநாள் போட்டிகளில் தலைவராக இருந்தார். இந்த ஆறு போட்டிகளிலும் இந்தியத் துடுப்பாட்ட அணி வெற்றி பெற்றது. 2007 ஐசிசி உலக இருபது20,2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை ஆகிய இரு உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதில் இவரின் பங்களிப்பும் இருந்தது.

வங்காளதேசத்திற்கு எதிராக சிட்டகாங்க் தேர்வுப் போட்டியில் நூறு அடித்ததன் மூலம் தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் அடுத்தடுத்து ஐந்து துடுப்பாட்டப் போட்டிகளில் (ஐந்து) நூறுகளை எடுத்த நான்காவது வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இதற்கு முன் ஆத்திரேலிய வீரர் பிராட்மன், தென்னாபிரிக்க வீரர் ஜாக் கலிஸ், பாகித்தானிய வீரர் முகமது யூசுப் ஆகியோர் இந்தச் சாதனையைப் படைத்தனர்.[4][5] பிராட்மன் ஒருவர் மட்டுமே அடுத்தடுத்து ஆறு டெஸ்ட் போட்டிகளில் (ஆறு) சதங்களை எடுத்த பெருமைக்குரியவர். தொடர்ச்சியாக நான்கு தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்களில் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். ஏப்ரல் ,2018 அன்றைய நிலவரப்படி பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[6] இவரின் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இந்தியன் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது.[3]

2008 ஆம் ஆண்டில் இந்தியக் குடியுரிமை விருதுகளில் இரண்டாவது பெரிய விருதாகக் கருதப்படும் அருச்சுனா விருது இவருக்கு வழங்கப்பட்டது.[7] 2009 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தேர்வுத் துடுப்பாட்ட மட்டையாளர் தரவரிசையில் முதலிடம் பெற்றார்.[8][9] இதே ஆண்டில் ஆண்டின் சிறந்த வீரர் விருதினைப் பெற்றார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

கம்பீர் அக்டோபர் 14, 1981 இல் புது தில்லியில் பிறந்தார். இவரின் தந்தை தீபக் கம்பீர், துணி தொழில் முனைவோர் ஆவார். தாய் சீமா கம்பீர் குடும்பத் தலைவியாக உள்ளார். இவருக்கு எக்தா எனும் இளைய சகோதரி உள்ளார்.[10] இவர் பிறந்த 18 நாட்களில் இவரை இவர்களின் தாத்தா- பாட்டி தத்தெடுத்தனர்.[11] கம்பீர் 10 ஆவது வயது முதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார்.

சாதனைகள்

[தொகு]

2008 ஆம் ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் எனும் சதனையைப் படைத்தார்.[12] இதே ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில்

அதிக நூறு (துடுப்பாட்டம்) எடுத்த இந்திய வீரரானார்[13]. 2009 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக நூறு அடித்த இந்திய வீரரானார்.[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கவுதம் கம்பீர் புரொபைல்", கிரிக்பஸ் (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-05-05
  2. "கவுதம் கம்பீர் (ஆங்கில மொழியில்)". ஈ. எசு. பி. என். கிரிக்கி்ன்வோ. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 14, 2012.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Gautam Gambhir Profile - ICC Ranking, Age, Career Info & Stats", Cricbuzz (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-05-05
  4. Hundreds in consecutive matches
  5. "கம்பீர் சிட்டகாங்கில் வரலாற்றை உருவாக்குகின்றார் (ஆங்கில மொழியில்)". இந்தியா உருடே. சனவரி 20, 2010. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 14, 2012.
  6. Cricket Records | India | Records | Twenty20 Internationals | Most runs | ESPN Cricinfo பரணிடப்பட்டது 17 நவம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம். Stats.espncricinfo.com. Retrieved on 2013-12-23.
  7. Gambhir honoured with Arjuna Award | India Cricket News. ESPN Cricinfo. Retrieved on 2013-12-23.
  8. "Gambhir is No. 1 Test batsman". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2018-05-05.
  9. "Sangakkara topples Gambhir from top of ICC Test rankings". The Times of India. 25 July 2009 இம் மூலத்தில் இருந்து 25 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121025102215/http://articles.timesofindia.indiatimes.com/2009-07-25/top-stories/28173324_1_south-african-dale-steyn-icc-test-rankings-pakistani-run-machine-mohammad-yousuf. பார்த்த நாள்: 11 August 2009. 
  10. "A knight's tale". TOI. 10 June 2011. Archived from the original on 6 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 3 October 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  11. The Telegraph – Calcutta : Weekend. Telegraphindia.com (2006-05-13). Retrieved on 2013-12-23.
  12. Cricket Records | Records | 2008 | One-Day Internationals | Most runs | ESPN Cricinfo. Stats.espncricinfo.com. Retrieved on 2013-12-23.
  13. Cricket Records | Records | 2008 | One-Day Internationals | Most hundreds | ESPN Cricinfo. Stats.espncricinfo.com. Retrieved on 2013-12-23.
  14. Cricket Records | Records | 2009 | Test matches | Most hundreds | ESPN Cricinfo. Stats.espncricinfo.com (1970-01-01). Retrieved on 2013-12-23.

வெளியிணைப்புகள்

[தொகு]

http://கம்பீர்[தொடர்பிழந்த இணைப்பு] டுவிட்டர்

வார்ப்புரு:இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஒ.ப.து தலைவர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவுதம்_கம்பீர்&oldid=3728074" இலிருந்து மீள்விக்கப்பட்டது