இந்தியன் பிரீமியர் லீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்)
Indian Premier League Logo.png
அலுவல்முறை சின்னம்
நாடு(கள்)இந்தியா
நிர்வாகி(கள்)பிசிசிஐ
வடிவம்இ20
முதல் பதிப்பு2008
கடைசிப் பதிப்பு2022
போட்டித் தொடர் வடிவம்குழுநிலை மற்றும் தகுதிச்சுற்றுகள்
மொத்த அணிகள்10
தற்போதைய வாகையாளர்சென்னை சூப்பர் கிங்ஸ் (4வது முறை)
அதிகமுறை வெற்றிகள்சென்னை சூப்பர் கிங்ஸ் (5 முறை)
அதிகபட்ச ஓட்டங்கள்விராட் கோலி (6283)[1]
அதிகபட்ச வீழ்த்தல்கள்டுவைன் பிராவோ (172)[2]
வலைத்தளம்iplt20.com

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) என்பது இந்தியாவில் விளையாடப்படும் தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும், இது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து அணிகளால் விளையாடப்படுகின்றது. இத்தொடர் 2008ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) துவங்கப்பட்டதாகும். ஐபிஎல் தொடர், ஐசிசியின் எதிர்காலச் சுற்றுப்பயண திட்டத்தில் தனி விதிவிலக்கைப் பெற்றுள்ளது, அதன்படி ஏப்ரல்-மே மாதங்களில் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் எதுவும் நடத்தப்படுவதில்லை.

ஐபிஎல், உலகிலேயே அதிக பார்வையாளர்கள் பங்கேற்ற துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும். மேலும் 2014ஆம் ஆண்டு அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் சராசரி வருகையின் அடிப்படையில் ஐபிஎல் உலகளவில் ஆறாவது இடத்தைப் பிடித்தது. 2010ஆம் ஆண்டில், ஐபிஎல் யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட உலகின் முதல் விளையாட்டு நிகழ்வாக ஆனது. 2018ஆம் ஆண்டில் ஐபிஎல்லின் பிராண்ட் மதிப்பு 6.3 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்று டஃப் & பெல்ப்ஸ் தெரிவித்துள்ளது.[3] 2015 ஐபிஎல் பருவமானது இந்தியப் பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.5 பில்லியன் ரூபாய் அளவிற்குப் பங்களித்திருந்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.[4]

ஐபிஎல் தொடரில் இதுவரை மொத்தம் பதினான்கு பருவங்கள் நடைபெற்றுள்ளன. 2021 பருவத்தில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு ஐபிஎல் வாகையாளராக உள்ளனர்.[5]

வரலாறு[தொகு]

பின்னணி[தொகு]

2007இல் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிதியுதவியுடன் இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.) நிறுவப்பட்டது.[6] இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமோ (பி.சி.சி.ஐ) பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையோ (ஐ.சி.சி) ஏற்றுக்கொள்ளவில்லை,[7] பி.சி.சி.ஐ தனது குழு உறுப்பினர்கள் ஐ.சி.எல் நிர்வாகக் குழுவில் இணைந்ததில் உடன்படவில்லை. மேலும் ஐ.சி.எல் தொடரில் வீரர்கள் இணைவதைத் தடுக்க, பி.சி.சி.ஐ தங்கள் சொந்த உள்நாட்டு போட்டிகளில் பரிசுத் தொகையை அதிகரித்ததுடன், தங்களுக்குப் போட்டியாகக் கருதப்படும் ஐ.சி.எல் தொடரில் சேரும் வீரர்கள் மீது வாழ்நாள் தடையும் விதித்தது.[8][9]

தொடக்கம்[தொகு]

செப்டம்பர் 13, 2007 அன்று, இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் உரிமைக்குழுவை அடிப்படையாகக் கொண்ட இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரைத் தொடங்குவதாக பி.சி.சி.ஐ அறிவித்தது, அதன் முதல் பருவம் ஏப்ரல் 2008இல் புதுதில்லியில் ஒரு "உயர்தர விழாவில்" தொடங்கத் திட்டமிடப்பட்டது. ஐபிஎல் திட்டத்தை செயலாற்றியவராகக் கருதப்படும் பி.சி.சி.ஐ.யின் துணைத் தலைவர் லலித் மோடி, ஐபிஎல் போட்டித் தொடரின் வடிவம், பரிசுத் தொகை, உரிமைக்குழு வருவாய் அமைப்பு, அணியின் வடிவம் குறித்த விதிகள் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவித்தார். முன்னாள் இந்திய வீரர்கள் மற்றும் பிசிசிஐ அதிகாரிகளை உள்ளடக்கிய ஏழு பேர் கொண்ட ஆளும் குழுவால் ஐபிஎல் நடத்தப்படும் என்றும், தொடரின் முதல் இரு அணிகள் அந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் இருபது20 தொடருக்குத் தகுதி பெறும் என்றும் தெரியவந்தது. இரண்டு ஆண்டுகளாக தாங்கள் இந்த யோசனையைச் செய்து வருவதாகவும், ஐ.சி.எல்-க்கு எதிர்வினையாக ஐபிஎல் தொடங்கப்படவில்லை என்றும் லலித் மோடி தெளிவுபடுத்தினார்.[10] இதன் வடிவம் இங்கிலாந்தின் பிரீமியர் லீக் மற்றும் அமெரிக்காவின் என்.பி.ஏ போன்று இருந்தது.[11]

ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களைத் தீர்மானிப்பதற்காக, ஜனவரி 24, 2008 அன்று ஏலங்கள் நடத்தப்பட்டன. உரிமையாளர்களின் மொத்த அடிப்படை விலை ஏறத்தாழ 400 மில்லியன் டாலர்களாக இருந்தது. ஏலத்தின் முடிவில், வென்ற ஏலதாரர்களின் பெயர்களும் அவர்களது அணிகள் அமைந்திருக்கும் நகரங்களான பெங்களூர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மொகாலி மற்றும் மும்பை ஆகியவையும் அறிவிக்கப்பட்டன. இறுதியில், உரிமைக்குழுக்கள் அனைத்தும் மொத்தம் 723.59 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டன. பிறகு 2008இல் இந்திய கிரிக்கெட் லீக் வழக்கொழிந்துப் போனது.[12]

விரிவாக்கங்களும் செயலிழப்புகளும்[தொகு]

மார்ச் 21, 2010 அன்று, புனே வாரியர்ஸ் இந்தியா மற்றும் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய இரண்டு புதிய உரிமைக்குழுக்கள் 2011ஆம் ஆண்டு ஐபிஎல்லின் நான்காவது பருவத்துக்கு முன்பு தொடரில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.[13] சஹாரா அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் குழுமம் புனே உரிமையை 370 மில்லியன் டாலருக்கும், ரெண்டெஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் நிறுவனம் கொச்சி உரிமையை 333.3 மில்லியன் டாலருக்கும் வாங்கியது. இருப்பினும், ஒரு வருடம் கழித்து, பி.சி.சி.ஐ.யின் நிபந்தனைகளை மீறியதால் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி செயலிழக்கப்படும் என்று 11 நவம்பர் 2011இல் அறிவிக்கப்பட்டது.[14]

பின்னர், செப்டம்பர் 14, 2012 அன்று, புதிய உரிமையாளர்களைக் கண்டறிய இயலாமல் போனதைத் தொடர்ந்து, 2009 வாகையாளர்களான டெக்கான் சார்ஜர்ஸ் அணி செயலிழக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்தது.[15] பிறகு அக்டோபர் 25 அன்று, மாற்று உரிமைக்குழுவின் உரிமையாளர் யார் என்பதைக் கண்டறிய ஏலம் நடைபெற்றது. ஐதராபாத் உரிமைக்குழுவுக்காக நடைபெற்ற ஏலத்தில் சன் டிவி நெட்வொர்க் வென்றது.[16] அந்த உரிமைக்குழுவின் அணிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் என்று பெயரிடப்பட்டது.[17]

பி.சி.சி.ஐ உடனான நிதி வேறுபாடுகள் காரணமாக புனே வாரியர்ஸ் இந்தியா 21 மே 2013 அன்று ஐ.பி.எல்லில் இருந்து விலகியது.[18] தேவையான வங்கி உத்தரவாதத்தை வழங்கத் தவறியதால் அந்த உரிமைக்குழு 26 அக்டோபர் 2013 அன்று பிசிசிஐயால் முறையாக செயலிழக்கப்பட்டது.[19]

14 ஜூன் 2015 அன்று, இரண்டு முறை வாகை சூடிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தொடக்கப் பருவத்தில் வாகை சூடிய ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் சூதாட்டத்தில் பங்குபெற்றதற்காக அடுத்துவரும் இரண்டு பருவங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.[20] பின்னர், 8 டிசம்பர் 2015 அன்று, ஏலத்தைத் தொடர்ந்து, புனே மற்றும் ராஜ்கோட் ஆகிய இரு உரிமைக்குழுக்களும் சென்னை மற்றும் ராஜஸ்தானுக்கு மாற்றாக இரண்டு பருவங்களுக்கு செயல்படும் என்று தெரியவந்தது.[21] இரு அணிகளுக்கும் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் மற்றும் குஜராத் லயன்ஸ் என்று பெயரிடப்பட்டது.[22]

அமைப்பு[தொகு]

வீரர்கள் ஒப்பந்த முறை, அணியின் அமைப்பு, வருமானம்[தொகு]

ஆண்டுதோறும் நடைபெறும் வீரர்கள் ஏலம், மற்ற அணிகளுடன் வீரர்களை வர்த்தகம் செய்தல், கிடைக்காத வீரர்களுக்கு மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்தல் ஆகிய மூன்று வழிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் ஒரு அணியால் வீரர்களைப் பெற முடியும். பொதுவாக ஐபிஎல்லில் பங்குபெற விரும்பும் வீரர்கள் ஏலத்தில் பதிவுசெய்து, தங்களது அடிப்படை விலையையும் நிர்ணயிக்கின்றனர். பிறகு அவர்களை ஏலத்தின் மூலம் அணிகள் வாங்குகின்றன. ஏலத்தில் விற்கப்படாத வீரர்கள் மாற்று வீரர்களாக ஒப்பந்தம் செய்யத் தகுதிபெறுகின்றனர். வர்த்தக முறையில், ஒரு வீரரின் ஒப்புதலுடன் மட்டுமே அவரை மற்ற அணிக்கு வர்த்தகம் செய்ய முடியும், பழைய மற்றும் புதிய ஒப்பந்தங்களின் விலைகளுக்கிடையில் ஏதேனும் வித்தியாசம் இருந்தால் அந்த விலையை குறிப்பிட்ட வீரரின் அணியே செலுத்தும். புதிய ஒப்பந்தம் பழையதை விட அதிகமாக இருந்தால், வீரருக்கும் வீரரை விற்கும் உரிமையாளருக்கும் விலை வித்தியாசம் பகிரப்படும். பொதுவாக ஏலத்திற்கு முன்பு இரண்டு மற்றும் ஏலத்திற்குப் பிறகு ஒன்று என மூன்று விதமான வர்த்தக முறைகள் உள்ளன. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பு. வர்த்தக முறையில் வீரர்களை வர்த்தகம் செய்ய இயலாது. ஆனால் போட்டிகளுக்கு முன்பாகவோ அல்லது இடையிலோ மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய இயலும்.

அணி அமைப்பு குறித்த ஒருசில விதிகள் (2020 பருவத்தின் படி) பின்வருமாறு:

  • அணியில் 18 முதல் 25 வீரர்கள் வரை இருக்க வேண்டும், அதிகபட்சம் 8 வெளிநாட்டு வீரர்கள் இருக்கலாம்.
  • அணி வீரர்களின் மொத்த ஒப்பந்தத் தொகை 850 மில்லியனை ($12 மில்லியன்) விட அதிகமாக இருக்கக்கூடாது.[23]
  • முதல் தரம் அல்லது பட்டியல் அ போட்டிகளில் விளையாடி இருந்தால் மட்டுமே 19 வயதுக்குட்பட்ட வீரர்களைத் தேர்வு செய்ய முடியும்.
  • ஒரு அணி தனது ஆடும் பதினொருவரில் அதிகபட்சம் 4 வெளிநாட்டு வீரர்களை விளையாட வைக்க முடியும். [24]

போட்டி விதிகள்[தொகு]

ஐபிஎல் விளையாட்டுகள் தொலைக்காட்சி நேரத்தை பயன்படுத்துகின்றன, எனவே அணிகள் தங்கள் ஆட்டப்பகுதியை முடிக்க வேண்டிய குறிப்பிட்ட கால அவகாசம் இல்லை. இருப்பினும், இந்த சலுகையை தவறாகப் பயன்படுத்துவதாக நடுவர்கள் கருதினால் அபராதம் விதிக்கப்படலாம். ஒவ்வொரு ஆட்டப்பகுதியிலும் ஒவ்வொரு அணிக்கும் இரண்டரை நிமிட இடைவேளை வழங்கப்படும். இதை பந்துவீசும் அணி 6 மற்றும் 9வது நிறைவுகளுக்கு இடையிலும் மட்டையாடும் அணி 13 மற்றும் 16வது நிறைவுகளுக்கு இடையிலும் எடுத்துக்கொள்ள வேண்டும்.[25]

2018 பருவத்தில் இருந்து, அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் நடுவர் முடிவு மீளாய்வு முறைமை பயன்படுத்தப்படுகிறது, அதன்படி ஒவ்வொரு அணிக்கும் களத்திலுள்ள நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்ய ஒரு ஆட்டப்பகுதிக்கு ஒன்று என்ற விகிதத்தில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.[26]

அணிகள்[தொகு]

நடப்பு அணிகள்[தொகு]

அணி நகரம் சொந்த அரங்கம் அறிமுகம் உரிமையாளர்[27]
சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை, தமிழ்நாடு சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் 2008 இந்தியா சிமெண்ட்ஸ்
டெல்லி கேபிடல்ஸ் தில்லி, தேசிய தலைநகர் வலயம் அருண் ஜெட்லி அரங்கம் 2008 GMR குழுமம், JSW குழுமம்
குஜராத் டைட்டன்ஸ் அகமதாபாத் , குஜராத் நரேந்திர மோடி விளையாட்டரங்கம் 2022 CVC கேப்பிடல் பார்ட்னர்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கொல்கத்தா, மேற்கு வங்காளம் ஈடன் கார்டன்ஸ் 2008 ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட், மெஹ்தா குழுமம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் லக்னோ , உத்தர பிரதேசம் பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி ஏக்கனா விளையாட்டரங்கம் 2022 RPSG குழுமம்
மும்பை இந்தியன்ஸ் மும்பை, மகாராட்டிரம் வான்கேடே அரங்கம் 2008 ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்
பஞ்சாப் கிங்ஸ் மொகாலி (சண்டிகர்), பஞ்சாப் பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம் 2008 பிரீத்தி சிந்தா, நெஸ் வாடியா, மொகித் பர்மன், கரன் பவுல்
ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெய்ப்பூர், ராஜஸ்தான் சவாய் மான்சிங் விளையாட்டரங்கம் 2008 மனோஜ் படாலே, லச்லன் முர்டோக், ரெட்பேர்ட் கேப்பிடல் பார்ட்னர்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெங்களூர், கர்நாடகா எம். சின்னசுவாமி அரங்கம் 2008 யுனைடட் ஸ்பிரிட்ஸ் லிமிட்டட்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஐதராபாத், தெலங்கானா ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் 2013 சன் டிவி நெட்வொர்க்

அணிகளின் செயல்திறன்கள்[தொகு]

2008 ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற பருவங்களில் பங்கேற்ற அணிகளின் செயல்திறன்கள்:

பருவம்
(மொத்த அணிகள்)
2008
(8)
2009
(8)
2010
(8)
2011
(10)
2012
(9)
2013
(9)
2014
(8)
2015
(8)
2016
(8)
2017
(8)
2018
(8)
2019
(8)
2020
(8)
2021
(8)
அணி \ நிகழ்விடம் இந்தியா தென்னாப்பிரிக்கா இந்தியா இந்தியா இந்தியா இந்தியா ஐக்கிய அரபு அமீரகம்
இந்தியா
இந்தியா இந்தியா இந்தியா இந்தியா இந்தியா ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா
ஐக்கிய அரபு அமீரகம்
ராஜஸ்தான் ராயல்ஸ் வெ 6வது 7வது 6வது 7வது 3வது 5வது 4வது தடை 4வது 7வது 8வது 7வது
சென்னை சூப்பர் கிங்ஸ் 4வது வெ வெ அஇ தடை வெ 7வது வெ
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6வது 8வது 6வது 4வது வெ 7வது வெ 5வது 4வது அஇ அஇ 5வது 5வது
மும்பை இந்தியன்ஸ் 5வது 7வது அஇ 4வது வெ 4வது வெ 5வது வெ 5வது வெ வெ 5வது
டெல்லி கேபிடல்ஸ் 4வது அஇ 5வது 10வது அஇ 9வது 8வது 7வது 6வது 6வது 8வது அஇ அஇ
கிங்ஸ் லெவன் பஞ்சாப்/பஞ்சாப் கிங்ஸ் அஇ 5வது 8வது 5வது 6வது 6வது 8வது 8வது 5வது 7வது 6வது 6வது 6வது
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 7வது அஇ 5வது 5வது 7வது அஇ 8வது 6வது 8வது 4வது 4வது
சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 4வது 6வது 6வது வெ 4வது 4வது அஇ 8வது
குஜராத் டைட்டன்ஸ் -
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் -
டெக்கான் சார்ஜர்ஸ் 8வது வெ 4வது 7வது 8வது -
புனே வாரியர்ஸ் இந்தியா - 9வது 9வது 8வது -
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - 8வது -
ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் - 7வது -
குஜராத் லயன்ஸ் - அஇ 7வது -

குறிச்சொல்:

  •      வெ = வெற்றியாளர் (1வது)
  •      இ = இறுதியாளர் (2வது)
  •      அஇ = அரை-இறுதியாளர் (3வது)
  • † = செயலிழந்த அணிகள்

பருவங்களும் முடிவுகளும்[தொகு]

ஐபிஎல் பருவங்களின் முடிவுகள்[28][29]
பருவம் இறுதிப்போட்டி இறுதிப்போட்டி நிகழிடம் மொத்த அணிகள் தொடர் நாயகன்
வெற்றியாளர் வெற்றி வேறுபாடு இரண்டாமிடம்
2008 ராஜஸ்தான் ராயல்ஸ்[30]
164/7 (20 நிறைவுகள்)
3 இழப்புகளால் வெற்றி
(ஆட்ட விவரம்)
சென்னை சூப்பர் கிங்ஸ்[30]
163/5 (20 நிறைவுகள்)
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை[30] 8[31] ஷேன் வாட்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்)[30]
2009 டெக்கான் சார்ஜர்ஸ்[32]
143/6 (20 நிறைவுகள்)
6 ஓட்டங்களால் வெற்றி
(ஆட்ட விவரம்)
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்[32]
137/9 (20 நிறைவுகள்)
வேன்டரர்ஸ் அரங்கம், ஜோகானஸ்பேர்க்[32]
(தென்னாப்பிரிக்கா)
8[33] அடம் கில்கிறிஸ்ற் (டெக்கான் சார்ஜர்ஸ்)[32]
2010 சென்னை சூப்பர் கிங்ஸ்[34]
168/5 (20 நிறைவுகள்)
22 ஓட்டங்களால் வெற்றி
(ஆட்ட விவரம்)
மும்பை இந்தியன்ஸ்[34]
146/9 (20 நிறைவுகள்)
டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை[34] 8[35] சச்சின் டெண்டுல்கர் (மும்பை இந்தியன்ஸ்)[34]
2011 சென்னை சூப்பர் கிங்ஸ்[36]
205/5 (20 நிறைவுகள்)
58 ஓட்டங்களால் வெற்றி
(ஆட்ட விவரம்)
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்[36]
147/8 (20 நிறைவுகள்)
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை[36] 10[37] கிறிஸ் கெயில் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)[36]
2012 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்[38]
192/5 (19.4 நிறைவுகள்)
5 இழப்புகளால் வெற்றி
(ஆட்ட விவரம்)
சென்னை சூப்பர் கிங்ஸ்[38]
190/3 (20 நிறைவுகள்)
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை[38] 9[39] சுனில் நரைன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)[38]
2013 மும்பை இந்தியன்ஸ்[40]
148/9 (20 நிறைவுகள்)
23 ஓட்டங்களால் வெற்றி
(ஆட்ட விவரம்)
சென்னை சூப்பர் கிங்ஸ்[40]
125/9 (20 நிறைவுகள்)
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா[40] 9[41] ஷேன் வாட்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்)[40]
2014 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்[42]
200/7 (19.3 நிறைவுகள்)
3 இழப்புகளால் வெற்றி
(ஆட்ட விவரம்)
கிங்ஸ் லெவன் பஞ்சாப்[42]
199/4 (20 நிறைவுகள்)
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்[42] 8[43] கிளென் மேக்ஸ்வெல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)[42]
2015 மும்பை இந்தியன்ஸ்[44]
202/5 (20 நிறைவுகள்)
41 ஓட்டங்களால் வெற்றி
(ஆட்ட விவரம்)
சென்னை சூப்பர் கிங்ஸ்[44]
161/8 (20 நிறைவுகள்)
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா[44] 8[45] ஆன்ட்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)[44]
2016 சன்ரைசர்ஸ் ஐதராபாத்[46]
208/7 (20 நிறைவுகள்)
8 ஓட்டங்களால் வெற்றி
(ஆட்ட விவரம்)
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்[46]
200/7 (20 நிறைவுகள்)
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்[46] 8[47] விராட் கோலி (பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்)[46]
2017 மும்பை இந்தியன்ஸ்[48]
129/8 (20 நிறைவுகள்)
1 ஓட்டத்தால் வெற்றி
(ஆட்ட விவரம்)
ரைசிங் புனே சூப்பர்ஜைன்ட்[48]
128/6 (20 நிறைவுகள்)
ராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்[48] 8[49] பென் ஸ்டோக்ஸ் (ரைசிங் புனே சூப்பர்ஜைன்ட்ஸ்)[48]
2018 சென்னை சூப்பர் கிங்ஸ்[50]
181/2 (18.3 நிறைவுகள்)
8 இழப்புகளால் வெற்றி
(ஆட்ட விவரம்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
178/6 (20 நிறைவுகள்)[50]
வான்கடே அரங்கம், மும்பை 8[51] சுனில் நரைன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)[50]
2019 மும்பை இந்தியன்ஸ்[52]
149/8 (20 நிறைவுகள்)
1 ஓட்டத்தால் வெற்றி
(ஆட்ட விவரம்)
சென்னை சூப்பர் கிங்ஸ்[52]
148/7 (20 நிறைவுகள்)
ராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்[52] 8[53] ஆன்ட்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
2020 மும்பை இந்தியன்ஸ்[54]
157/5 (18.4 நிறைவுகள்)
5 இழப்புகளால் வெற்றி
(ஆட்ட விவரம்)
டெல்லி கேப்பிடல்ஸ்[54]
156/7 (20 நிறைவுகள்)
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்[54] 8[55] ஜோப்ரா ஆர்ச்சர்
(ராஜஸ்தான் ராயல்ஸ்)
2021 சென்னை சூப்பர் கிங்ஸ்[56]
192/3 (20 நிறைவுகள்)
27 ஓட்டங்களால் வெற்றி
(ஆட்ட விவரம்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்[56]
165/9 (20 நிறைவுகள்)
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய்[56] 8[57] ஹர்ஷல் படேல்
(ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
2022 குஜராத் டைட்டன்ஸ்[58]
133/3 (18.1 நிறைவுகள்)
7 இழப்புகளால் வெற்றி ராஜஸ்தான் ராயல்ஸ்
130/9 (20 நிறைவுகள்)
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாத் 10[59] ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
2023 சென்னை சூப்பர் கிங்ஸ்
171/5 (15 நிறைவுகள்)
5 இழப்புகளால் வெற்றி (டக்வோர்த் லூயிஸ் முறை) குஜராத் டைட்டன்ஸ்
214/4 (20 நிறைவுகள்)
10 சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்)
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கில் சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது

விருதுகள்[தொகு]

  • ஆரஞ்சு தொப்பி- தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த மட்டையாளருக்கு வழங்கப்படுகிறது
  • ஊதா தொப்பி- தொடரில் அதிக மட்டையாளர்களை வீழ்த்திய பந்துவீச்சாளருக்கு வழங்கப்படுகிறது

ஒளிபரப்பு[தொகு]

2008இல் இந்தியாவின் சோனி தொலைக்காட்சி நிறுவனமும் சிங்கப்பூரின் வேர்ல்டு ஸ்போர்ட் குரூப் நிறுவனமும் இணைந்த கூட்டு நிறுவனத்திற்கு 10 வருட ஒப்பந்தமாக ஒளிபரப்பு உரிமை வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 1.026 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். உள்நாட்டில் சோனி நிறுவனமும் பன்னாட்டு அளவில் வேல்ர்டு ஸ்போர்ட் குரூப் நிறுவனமும் போட்டிகளை ஒளிபரப்பின.

செப்டம்பர் 2018இல் ஐபிஎல் போட்டிகளின் 5 வருட உலகளாவிய ஒளிபரப்பு ஒப்பந்தத்தை ஸ்டார் இந்தியா நிறுவனம் கைப்பற்றியது.இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 2.55 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். துடுப்பாட்ட வரலாற்றில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஒளிபரப்பு ஒப்பந்தமான இது முந்தைய ஐபிஎல் ஒப்பந்தத்தை விட 158% அதிகமானதாகும். தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலமாகவும் இணையதளத்தில் ஹாட்ஸ்டார் என்ற செயலி மூலமாகவும் ஐபிஎல் போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன. ஹாட்ஸ்டார் செயலியில் சந்தா செலுத்திய பயனர்களால் மட்டுமே போட்டிகளைக் காண இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.[60]

விளம்பர ஆதரவுகள்[தொகு]

ஆதரவாளர் காலம் விளம்பர ஆதரவுத் தொகை
டிஎல்எஃப்[61] 2008–2012 2 பில்லியன் (US$26 மில்லியன்)
பெப்சி[62] 2013–2015 2.38 பில்லியன் (US$31 மில்லியன்)
விவோ[63] 2016–2017 1.9 பில்லியன் (US$25 மில்லியன்)
2018–2019 21.99 பில்லியன் (US$290 மில்லியன்)
ட்ரீம்11 2020 222 கோடி (US$29.1 மில்லியன்)
விவோ 2021 439.8 கோடி (US$57.7 மில்லியன்)
டாட்டா 2022-2023 439.8 கோடி (US$57.7 மில்லியன்)

ஐபிஎல் ஆளுங்குழு[தொகு]

ஐபிஎல் தொடரின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஐபிஎல் ஆளுங்குழு பொறுப்பேற்கிறது. ஜனவரி 2016இல் இந்திய உச்சநீதிமன்றம் நியமித்த லோதா குழுவானது,.பிசிசிஐ மற்றும் ஐபிஎல் ஆகிய இரண்டிற்கும் தனித்தனியே ஆளுங்குழுக்களை அமைக்கப் பரிந்துரைத்தது. அதன்படி ஐபிஎல் ஆளுங்குழு உருவானது.

  • பிரிஜேஷ் பட்டேல் - தலைவர்
  • ஜெய் ஷா - மதிப்பியல் செயலாளர்
  • அருண் சிங் துமால் - மதிப்பியல் பொருளாளர்
  • எம் கைருல் ஜமால் மஜும்தார் - உறுப்பினர்
  • பிரக்யான் ஓஜா - ஐசிஏ பிரதிநிதி
  • அல்கா ரெஹானி பரத்வாஜ் - சிஏஜி நியமனம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "IPL Most runs". IPLT20. 27 March 2022 அன்று பார்க்கப்பட்டது.
  2. "IPL Most wickets". IPLT20. 27 March 2022 அன்று பார்க்கப்பட்டது.
  3. Laghate, Gaurav (2019-09-20). "IPL brand valuation soars 13.5% to Rs 47,500 crore: Duff & Phelps". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/sports/ipl-brand-valuation-soars-13-5-to-rs-47500-crore-duff-phelps/articleshow/71197984.cms?from=mdr. 
  4. "IPL 2015 contributed Rs. 11.5 bn to GDP: BCCI". தி இந்து. IANS. 30 October 2015. http://www.thehindu.com/sport/cricket/2015-indian-premier-league-ipl-contributed-rs115-billion-12-million-to-indias-gross-domestic-product-gdp-says-bcci/article7823334.ece. பார்த்த நாள்: 20 February 2019. 
  5. "IPL 2019 Final: Mumbai Indians beat Chennai Super Kings in last-ball thriller to win 4th title". 2019-10-09 அன்று பார்க்கப்பட்டது.
  6. "ICL announces team lists". Rediff. 14 November 2007. http://www.rediff.com/cricket/2007/nov/14icl.htm. பார்த்த நாள்: 20 February 2019. 
  7. Press Trust of India (13 June 2007). "BCCI shoots down ICL". http://inhome.rediff.com/cricket/2007/jun/13icl.htm. பார்த்த நாள்: 20 February 2019. 
  8. Press Trust of India (21 June 2007). "BCCI hikes domestic match fees". https://www.rediff.com/cricket/2007/aug/21hike.htm. பார்த்த நாள்: 20 February 2019. 
  9. "Indian Premier League: How it all started". Times of India. 2 April 2013. https://timesofindia.indiatimes.com/ipl-history/Indian-Premier-League-How-it-all-started/articleshow/19337875.cms. பார்த்த நாள்: 20 February 2019. 
  10. Alter, Jamie (13 September 2007). "Franchises for board's new Twenty20 league". ESPNcricinfo. 17 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  11. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; IPL Started2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  12. "INDIAN PREMIER LEAGUE, 2007/08".
  13. Ravindran, Siddarth; Gollapudi, Nagraj (21 March 2010). "Pune and Kochi unveiled as new IPL franchises". ESPN CricInfo. http://www.espncricinfo.com/ipl2010/content/current/story/452856.html. பார்த்த நாள்: 20 February 2019. 
  14. "Kochi franchise terminated by BCCI". ESPN CricInfo. 19 September 2011. http://www.espncricinfo.com/indian-premier-league-2012/content/story/532973.html. பார்த்த நாள்: 20 February 2019. 
  15. "BCCI terminates Deccan Chargers franchise". ESPNcricInfo. 14 September 2012. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  16. "Sun TV Network win Hyderabad IPL franchise". ESPN CricInfo. 25 October 2012. http://www.espncricinfo.com/india/content/story/588090.html. பார்த்த நாள்: 20 February 2019. 
  17. "Hyderabad IPL franchise named Sunrisers". ESPNcricinfo. 18 December 2012. http://www.espncricinfo.com/india/content/story/597700.html. பார்த்த நாள்: 20 February 2019. 
  18. "Pune Warriors pull out of IPL". ESPNcricinfo. 21 May 2013. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  19. K Shriniwas Rao (27 October 2013). "BCCI terminates contract with Sahara, Pune Warriors out of IPL". The Times of India. TNN. https://timesofindia.indiatimes.com/news/BCCI-terminates-contract-with-Sahara-Pune-Warriors-out-of-IPL/articleshow/24769374.cms. பார்த்த நாள்: 20 February 2019. 
  20. "IPL scandal: Chennai Super Kings and Rajasthan Royals suspended". BBC News. 14 July 2015. https://www.bbc.com/news/world-asia-india-33517583. பார்த்த நாள்: 20 February 2019. 
  21. "Pune, Rajkot to host new IPL franchises". ESPN CricInfo. 8 December 2015. http://www.espncricinfo.com/india/content/story/949987.html. பார்த்த நாள்: 20 February 2019. 
  22. "IPL announce two new teams for 2016".
  23. "Kolkata to host IPL 2020 auction on December 19". https://timesofindia.indiatimes.com/sports/cricket/news/kolkata-to-host-ipl-2020-auction-on-december-19/articleshow/71386522.cms. பார்த்த நாள்: 15 October 2019. 
  24. "Instances in IPL when team played less than 4 overseas players". CricTracker. 5 May 2016. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  25. "Law 15 – Intervals". Indian Premier League. 17 பிப்ரவரி 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  26. "DRS to be used in IPL". The Hindu. PTI. 21 March 2018. https://www.thehindu.com/sport/cricket/drs-to-be-used-in-ipl/article23314621.ece. பார்த்த நாள்: 20 February 2019. 
  27. "IPL 2019: Meet the owners of the 8 teams taking the field in season 12". Moneycontrol. https://www.moneycontrol.com/news/trends/sports-trends/ipl-2019-meet-the-owners-of-the-8-teams-taking-the-field-in-season-12-2542331.html. பார்த்த நாள்: 15 August 2019. 
  28. Bharath Seervi (30 May 2016). "A great tournament for captains, a poor one for spinners". Sony ESPN. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  29. "IPL all seasons' results". Iplt20.com. Board of Control for Cricket in India. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  30. 30.0 30.1 30.2 30.3 "2008 IPL Final scorecard, venue and MVP details". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  31. "IPL 2008 season squads". ESPNcricinfo. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  32. 32.0 32.1 32.2 32.3 "2009 IPL Final scorecard, venue and MVP details". ESPNcricinfo. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  33. "IPL 2009 season squads". ESPNcricinfo. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  34. 34.0 34.1 34.2 34.3 "2010 IPL Final scorecard, venue and MVP details". ESPNcricinfo. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  35. "IPL 2010 season squads". ESPNcricinfo. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  36. 36.0 36.1 36.2 36.3 "2011 IPL Final scorecard, venue and MVP details". ESPNcricinfo. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  37. "IPL 2011 season squads". ESPNcricinfo. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  38. 38.0 38.1 38.2 38.3 "2012 IPL Final scorecard, venue and MVP details". ESPNcricinfo. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  39. "IPL 2012 season squads". ESPNcricinfo. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  40. 40.0 40.1 40.2 40.3 "2013 IPL Final scorecard, venue and MVP details". ESPNcricinfo. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  41. "IPL 2013 season squads". ESPNcricinfo. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  42. 42.0 42.1 42.2 42.3 "2014 IPL Final scorecard, venue and MVP details". ESPNcricinfo. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  43. "IPL 2014 season squads". ESPNcricinfo. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  44. 44.0 44.1 44.2 44.3 "2015 IPL Final scorecard, venue and MVP details". ESPNcricinfo. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  45. "IPL 2015 season squads". ESPNcricinfo. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  46. 46.0 46.1 46.2 46.3 "2016 IPL Final scorecard, venue and MVP details". ESPNcricinfo. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  47. "IPL 2016 season squads". ESPNcricinfo. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  48. 48.0 48.1 48.2 48.3 "2017 IPL Final scorecard, venue and MVP details". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  49. "IPL 2017 Squads". ESPNcricinfo. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  50. 50.0 50.1 50.2 "2018 IPL Final scorecard, venue and MVP details". ESPNcricinfo. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  51. "IPL 2018 Squads". ESPNcricinfo. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  52. 52.0 52.1 52.2 "Full Scorecard of Mumbai Indians vs Chennai Super Kings, Indian Premier League, Final - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (ஆங்கிலம்). 2019-05-12 அன்று பார்க்கப்பட்டது.
  53. "IPL 2019 season squads". ESPNcricinfo. 20 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  54. 54.0 54.1 54.2 "Full Scorecard of Delhi Capitals vs Mumbai Indians Final 2020 – Score Report". ESPNcricinfo.com (ஆங்கிலம்). 2020-11-10 அன்று பார்க்கப்பட்டது.
  55. "IPL 2020/21 squads". ESPN Cricinfo. 20 September 2020 அன்று பார்க்கப்பட்டது.
  56. 56.0 56.1 56.2 "CSK v KKR | Final, IPL 2021 Match Centre". IPLT20 (ஆங்கிலம்). 16 April 2021 அன்று பார்க்கப்பட்டது.
  57. "IPL 2021 squads". ESPN Cricinfo. 15 April 2021 அன்று பார்க்கப்பட்டது.
  58. "Final, IPL 2022 Match Centre". IPLT20 (ஆங்கிலம்). 17 May 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 16 April 2021 அன்று பார்க்கப்பட்டது.
  59. "IPL 2022 squads". ESPN Cricinfo. 17 May 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 18 May 2022 அன்று பார்க்கப்பட்டது.
  60. "Should You Subscribe to Hotstar VIP or Hotstar Premium Ahead of IPL 2019?". News18. 28 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
  61. "DLF win IPL title sponsorship rights".
  62. "Title sponsorship: Mobile companies gear up for IPL Innings".
  63. "Vivo Indian Premier League: Sponsorship round-up of the eight teams".

புற இணைப்புகள்[தொகு]