தந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆண் - பெண் என இருபாலினருக்கிடையிலான பாலுறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு ஆண் பாலினமாக இருப்பவர் தந்தை எனப்படுகிறார். அப்பா,அய்யா போன்ற சொற்கள் தந்தையைக் குறிக்கப் பயன்படுகின்றன. 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்பது சான்றோர் வாக்கு. ஒரு குழந்தையின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் தந்தை எனும் நிலையிலிருப்பவரின் பங்களிப்பு முக்கியமானது.சில பிள்ளைகளின் பழக்க வழக்கம்,பண்புக்கு முன் உதாரணமே அப்பா தான். பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது தந்தையின் கடமை. குழந்தைகளுக்கு முன் உதாரணமாக தந்தை இருக்கிறார்.தனக்கு படிப்பு வாசனை இல்லாவிட்டாலும் தன் குழந்தைகள் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்று கனவு காண்பார்.தங்கள் பிள்ளைகளுக்கு மோசமான அப்பாவாக இருந்திருக்க கூடாது.தந்தை பொறுப்பின்மையால் தவறாக நடந்ததால் குடும்பமே பாதிப்படையும்.எடுத்துக்காட்டாக குடிகார தந்தையினால் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு செல்வது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்தை&oldid=3368832" இருந்து மீள்விக்கப்பட்டது