புனித ஆசிர்வாதப்பர் சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித ஆசிர்வாதப்பர் சபை
Ordo Sancti Benedicti
சுருக்கம்OSB
உருவாக்கம்அண். கி.பி 529
நிறுவனர்நூர்சியாவின் பெனடிக்ட்
வகைகத்தோலிக்க அர்ப்பணவாழ்வுச் சபை
தலைமையகம்புனித அன்சல்மோ கோவில், உரோமை
தன்னாட்சித் ஆதீனத் தலைவர்
Notker Wolf O.S.B.,
மைய அமைப்பு
பெனடிக்டன் கூட்டமைப்பு
வலைத்தளம்osb.org

புனித ஆசிர்வாதப்பர் சபை அல்லது புனித பெனடிக்டன் சபை (OSB; இலத்தீன்: Ordo Sancti Benedicti), என்பது தன்னாட்சி அதிகாரமுடைய, நூர்சியாவின் பெனடிக்டின் துறவற சட்டங்களின்படி நடக்கும் துறவியர் இல்லங்கள், மடங்கள், ஆதீனங்கள் ஆகியவற்றால் ஆன ஒரு கத்தோலிக்க துறவற சபை ஆகும். இவ்வகை இல்லங்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்றிருப்பதால், இவற்றிற்கு தலைமையகம் ஏதும் இல்லை. இவை அனைத்தின் ஒருமித்த தேவைகளையோ அல்லது நிலைப்பாட்டையோ எடுத்துரைக்க பெனடிக்டன் கூட்டமைப்பு உள்ளது. இக்கூட்டமைப்புக்கு இவ்வில்லங்களின்மீது எவ்வகை அதிகாரமும் இல்லை. இக்கூட்டமைப்பு 1883இல் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோவின் Summum semper என்னும் அறிக்கையினால் நிறுவப்பட்டது. இக்கூட்டமைப்பின் தலைவர் தன்னாட்சித் ஆதீனத் தலைவர் (Abbot Primate) என அழைக்கப்படுகின்றார்.

இவர்களின் உடையின் நிறத்தால் இவர்களை கருப்பு துறவியர் எனவும் அழைப்பர். இச்சபையின் உறுப்பினர்கள் OSB என்னும் சுறுக்கக்குறியினை தங்களின் பெயர்களுக்குப்பின் சேர்ப்பது வழக்கம்.

இச்சபையின் உறுப்பினராக இருந்த திருத்தந்தையர்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_ஆசிர்வாதப்பர்_சபை&oldid=2222318" இலிருந்து மீள்விக்கப்பட்டது