ஏழாம் கிரகோரி (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருத்தந்தை புனித
ஏழாம் கிரகோரி
Gregory VII.jpg
ஆட்சி துவக்கம் 22 ஏப்ரல் 1073
ஆட்சி முடிவு 25 மே 1085
முன்னிருந்தவர் இரண்டாம் அலெக்சாண்டர்
பின்வந்தவர் மூன்றாம் விக்டர்
பிற தகவல்கள்
இயற்பெயர் சொவானா நகரின் ஹில்டப்ராண்தோ
பிறப்பு c. 1020
சொவானா, புனித உரோமைப் பேரரசு
இறப்பு 25 மே 1085(1085-05-25)
சலேர்னோ, அபுலியா
புனிதர் பட்டமளிப்பு
திருவிழா 25 மே
முத்திப்பேறு 1584
திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரி-ஆல்
புனிதர் பட்டம் 1728
திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்
கிரகோரி என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை ஏழாம் கிரகோரி (இலத்தீன்: Gregorius VII; அண். 1015/1028[1] – 25 மே 1085), என்பவர் கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தையாக 2 ஏப்ரல் 1073 முதல் 1085 இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார். இவரின் இயற்பெயர் சொவானா நகரின் ஹில்டப்ராண்தோ என்பதாகும் (இத்தாலியம்: Ildebrando da Soana).

கத்தோலிக்கத் திருச்சபையினைச் சீர்திருத்த முயன்றவர்களில் இவர் மிகவும் குறிக்கத்தக்கவர் ஆவார். புனித உரோமைப் பேரரசர் நான்காம் ஹென்றிக்கும் இவருக்கும் இடையே நிகழ்ந்த ஆயர்நிலை திருப்பொழிவுக்கு ஆட்களை தேர்வுசெய்யும் அதிகாரம் குறித்த சச்சரவில் (Investiture Controversy) திருத்தந்தைக்கு இருந்த அதிகாரத்தை இவர் நிலைநாட்டினார். இதை ஏற்காத நான்காம் ஹென்றியினை திருச்சபையின் முழு உறவு ஒன்றிப்பிலிருந்து மூன்று முறை நீக்கினார். இதனால் மூன்றாம் கிளமெண்டினை ஹென்றி எதிர்-திருத்தந்தையாக நியமித்தார். திருத்தந்தைத் தேர்தலுக்கான புதிய வழிமுறைகளைச் சட்டமாக்கினார்.

திருப்பட்டங்கள் காசுக்கு விற்றதைக் கடுமையாக இவர் எதிர்த்தார். குருக்கள் கற்பு நிலை வாக்கு அளித்து திருமணமாகாமல் வாழ வேண்டும் என்று இருந்த சட்டத்தை இவர் கடுமையாக நடைமுறைப்படுத்தினார். இவர் தனது அதிகாரத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தியதால் பலரின் வெறுப்புக்கு ஆளானார்.[2]

திருத்தந்தை ஏழாம் கிரகோரிக்கு பதின்மூன்றாம் கிரகோரி 1584 இல் முத்திப்பேறு பட்டமும், 1728இல் திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் புனிதர் பட்டமும் அளித்தனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Paravicini Bagliani, Agostino (டிசம்பர் 2008). Medioevo (143): 62. 
  2. Beno. Gesta Romanae ecclesiae contra Hildebrandum. ca. 1084. In K. Francke, MGH Libelli de Lite II (Hannover, 1892), pp. 369–373. Much of this is reproduced in English in The Acts and Monuments of John Foxe, p.121ff.
  3.  Thomas Oestreich (1913). "Pope St. Gregory VII". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
இரண்டாம் அலெக்சாண்டர்
திருத்தந்தை
1073–1085
பின்னர்
மூன்றாம் விக்டர்