ஆர். பிரேமதாச அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். பிரேமதாச அரங்கம்
கெத்தாராம துடுப்பாட்ட அரங்கம்
அரங்கத் தகவல்
அமைவிடம்மாளிகாவத்தை, கொழும்பு
ஆள்கூறுகள்6°56′22.8″N 79°52′19.3″E / 6.939667°N 79.872028°E / 6.939667; 79.872028ஆள்கூறுகள்: 6°56′22.8″N 79°52′19.3″E / 6.939667°N 79.872028°E / 6.939667; 79.872028
இருக்கைகள்35,000
குத்தகையாளர்இலங்கை துடுப்பாட்டம்
முடிவுகளின் பெயர்கள்
Khettarama End
Scoreboard End
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு28 ஆகஸ்டு 1992:
 இலங்கை v  ஆத்திரேலியா
கடைசித் தேர்வு12 September 2005:
 இலங்கை v  வங்காளதேசம்
முதல் ஒநாப9 மார்ச் 1986:
 இலங்கை v  பாக்கித்தான்
கடைசி ஒநாப8 பெப்ரவரி 2009:
 இலங்கை v  இந்தியா
28 ஏப்ரல்l 2009 இல் உள்ள தரவு
மூலம்: கிரிக்கின்போ

ஆர். பிரேமதாச அரங்கம் மேற்கு இலங்கையின் கொழும்பு மாநகரின் மாளிகாவத்தையில் அமைந்துள்ள ஒரு துடுப்பாட்ட அரங்கமாகும். 1994 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இவ்வரங்கம் கெத்தாராம துடுப்பாட்ட அரங்கம் என அழைக்கப்பட்டது. இன்று இவ்வரங்கம் இலங்கை துடுப்பாட்ட அணி விளையாடும் முக்கிய அரங்களில் ஒன்றாக காணப்படுகிறது.

முன் வரலாறு[தொகு]

35,000 பேருக்கு இருக்கை வதைகளைக் கொண்ட இவ்வரங்கம் இலங்கையின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டதாகும். அரங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னர் இப்பகுதியில் பாரிய சதுப்புநிலம் காணப்பட்டதோடு அருகே இருக்கும் கெத்தாராம கோவிலுக்கு பிக்குகள் படகு மூலமே சென்று வந்தனர். 1986 பெப்ரவரி 2 ஆம் நாள் இவ்வரங்கம் திறந்துவைக்கப்பட்டது. முதல் போட்டியில் இலங்கை 'B' அணியும் இங்கிலாந்து 'B' அணியும் விளையாடின.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._பிரேமதாச_அரங்கம்&oldid=1913663" இருந்து மீள்விக்கப்பட்டது