ரிக்கி பாண்டிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(றிக்கி பொன்டிங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரிக்கி பாண்டிங்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரிக்கி தாமஸ் பாண்டிங்
பட்டப்பெயர்Punter
உயரம்1.78 m (5 அடி 10 அங்)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை மிதவேகம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.ப.து. மு.த பட்டியல் அ
ஆட்டங்கள் 168 375 289 456
ஓட்டங்கள் 13,378 13,704 24,150 16,363
மட்டையாட்ட சராசரி 51.85 42.03 55.90 41.74
100கள்/50கள் 41/62 30/82 82/106 34/99
அதியுயர் ஓட்டம் 257 164 257 164
வீசிய பந்துகள் 575 150 1,506 349
வீழ்த்தல்கள் 5 3 14 8
பந்துவீச்சு சராசரி 54.60 34.66 58.07 33.62
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/0 1/12 2/10 3/34
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
195/– 160/– 309/– 195/–
மூலம்: Cricinfo, 20 பெப்ரவரி 2014

ரிக்கி தாமஸ் பாண்டிங் (Ricky Thomas Ponting, டிசம்பர் 19, 1974) அவுஸ்திரேலிய முன்னாள் துடுப்பாட்டக்காரர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான இவர் ஒரு வலதுகை மட்டையாளர் ஆவார் . 2003 மற்றும் 2007 ஆண்டுகளின் துடுப்பாட்ட உலகக் கிண்ணம் போட்டியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணித் தலைவராக இருந்துள்ளார். அனைத்துக் கால துடுப்பாட்டத்தில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1] ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் பொற்காலமாகக் கருதப்படும் 2004 முதல் 2011 ஆண்டு வரையிலான கால தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கும் 2002 மற்றும் 2011 இல் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளுக்கும் அணித் தலைவராக இவர் இருந்தார். வலது கை மட்டையாளராகவும், சிறந்த களவீரராகவும், அவ்வப்போது பந்துவீச்சாளராகவும் செயல்பட்டார். 2000 ஆம் ஆண்டின் தசாப்த வீர்ராகத் தேர்வானார்.[2] 2003 மற்றும் 2007 ஆண்டுகளின் துடுப்பாட்ட உலகக் கிண்ணம் போட்டியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியிலும் 1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை வென்ற ஆத்திரேலிய அணியில் ஸ்டீவ் வா தலமையிலான அணியிலும் இடம் பெற்றிருந்தார்.

ஆத்திரேலிய உள்ளூர்ப் போட்டிகளில் தஸ்மானியன் டைகர்ஸ் அணிக்காகவும் உள்ளூர் இருபது 20 போட்டிகளில் ஹோபர்ட் ஹர்ரிகேன்ஸ் அணிக்காகவும் ,இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் 2008 ஆம் ஆண்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் விளையாடினார். நவீன துடுப்பாட்ட சகாப்தத்தில் இந்தியத் துடுப்பாட்ட அணியின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின் பிறயன் லாறா ஆகியோருடன் அறியப்படுகிறார். கடந்த ஐம்பது ஆண்டு கால துடுப்பாட்ட வரலாற்றில் தேர்வுத் துடுப்பாட்டத் தரவரிசைகளில் அதிகபட்ச புள்ளிகள் பெற்ற வீரர் எனும் சாதனையை டிசம்பர் 1, 2016 இல் படைத்தார். பின்னர் இந்தச் சாதனையானது இதே அணியைச் சார்ந்த ஸ்டீவ் சிமித்தால் டிசம்பர், 2017 இல் முறியடிக்கப்பட்டது.[3]

1992 ஆம் ஆண்டில் தஸ்மானியாவிற்காக இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் துவங்கினார். அப்போது இவரின் வயதானது 17 ஆண்டுகள் மற்றும் 337 நாட்கள் ஆகும். மிக இளம்வயதில் விளையாடியவர் எனும் சாதனையைப் படைத்தார். இவரின் முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் தென்னாப்பிரிக்காவில் 1995 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரானது ஆகும். இவரின் முதல் தேர்வுத் துடுப்பாட்டம் அதே ஆண்டில் பெர்த்தில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரானது ஆகும்.அந்தப் போட்டியில் இவர் 96 ஓட்டங்கள் எடுத்தார்.

இவர் மொத்தம் 160 தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் 370 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் போட்டிகளில் விளையாடி ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீர்ரர்களிலேயே அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 13,000 ஓட்டங்களை எடுத்த ஒரே ஆத்திரேலிய வீரர் ஆவார். இதற்கு முன் இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், ஜாக் கலிஸ்ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். புள்ளிவிவரங்களின் படி வெற்றிகரமான அணித்தலைவராக இருந்துள்ளார். 2004 முதல் 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால இடைவெளிகளில் 77 தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் 44 போட்டிகளில் இவர் தலைமையேற்ற அணி வெற்றி பெற்றுள்ளது. துடுப்பாட்ட வரலாற்றில் இவர் 100 தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அணியில் இடம்பிடித்த ஒரே வீர்ரர் இவர் ஆவார்.[4][5][6][7] மேலும் 262 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற அணியில் இடம் பிடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.[8]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

டிசம்பர் 19, 1974 இல் டாசுமேனியாவின் லான்செசுடனில் பிறந்த ரிக்கி பாண்டிங் கிரேம் மற்றும் லோரெய்ன் பாண்டிங்கின் நான்கு குழந்தைகளில் மூத்தவர் ஆவார்.இவரது தந்தை கிரேம் துடுப்பாட்ட சங்க அளவில் சிறந்த துடுப்பாட்ட வீரராக இருந்தார்.மேலும், ஆஸ்திரேலியாவில் கால்பந்து விளையாடியுள்ளார், அதே நேரத்தில் லோரெய்ன் ஒரு மாநில வைகோரோ வாகையாளராக இருந்தார். [9] இவரது மாமா கிரெக் காம்ப்பெல் 1989 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். பாண்டிங்கின் பெற்றோர் முதலில் ப்ராஸ்பெக்ட்டில் வாழ்ந்தனர். [10]

தனது நீண்டகால காதலியான சட்டம் பயின்ற ரியானா கேன்டரை ஜூன் 2002 இல் திருமணம் செய்தார். [11] இந்த ஜோடிக்கு 2008 மற்றும் 2014 க்கு இடையில் மூன்று குழந்தைகள் பிறந்தன. [12] [13] [14]

தந்தை கிரேம் மற்றும் மாமா கிரெக் காம்ப்பெல் ஆகியோரால் துடுப்பாட்டத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். [15] பாண்டிங் 1985-86ல் தனது 11 வயதில் 13 வயதுக்குட்பட்ட மவுப்ரே துடுப்பாட்ட சங்கத்திற்காக விளையாடினார். ஜனவரி 1986 இல், இவர் ஐந்து நாள் வடக்கு டாஸ்மேனியா ஜூனியர் துடுப்பாட்டப் போட்டியில் பங்கேற்றார். [16] ஒரு வாரத்தில் நான்கு நூறுகளை அடித்த பிறகு, மட்டை உற்பத்தியாளர் கூகபுர்ரா பாண்டிங்கிற்கு உதவித் தொகை ஒப்பந்தத்தை வழங்கினார். வடக்கு டாஸ்மேனிய பள்ளிகள் துடுப்பாட்ட சங்கத்தின் முன்னாள் தலைவர் டெட் ரிச்சர்ட்சன்ரிக்கி நிச்சயமாக டேவிட் பூனுக்கு சமமானவர் எனக் கூறினார். [17]

குளிர்காலத்தில் இவர் வடக்கு லான்ஸ்டெஸ்டனுக்காக இளையோர் பிரிவில் கால்பந்து விளையாடினார்.மேலும் இவர் 14 வயது வரை, கால்பந்தினை விளையாடினார் . தனது 13 ஆம் வயதில் 17 வயதிற்குட்பட்ட நார்த் லான்ஸ்டெஸ்டனுக்காக விளையாடும் போது அவரது வலது கையில் உள்ள புய எலும்பில் முறிவு ஏற்பட்டது. பாண்டிங்கின் கை மிகவும் மோசமாக சேதமடைந்தது.[18]அதன் பிறகு இவர் கால்பந்து விளையாடுவதனை நிறுத்திக் கொண்டார்.[19]

சர்வதேச போட்டிகள்[தொகு]

ஆரம்ப காலங்களில்[தொகு]

1995 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த நியூசிலாந்து நூற்றாண்டு போட்டியில் நான்கு அணிகள் கலந்து கொள்ளும் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய ஒருநாள் அணிக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த அணிகளில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவும் அடங்கும். பாண்டிங் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மட்டையாடும் வரிசையில் ஆறாவது இடத்தில் அறிமுகமானார்.அந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி வெறி பெற்றது. பின்னர் அடுத்த போட்டியில் ஆக்லாந்தில் நியூசிலாந்திற்கு எதிராக, பாண்டிங் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்கள் எடுத்தார் . பின்னர் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினார்.[20]

மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இவர் தேர்வானர். உலகின் மிகச் சிறந்த விரைவு வீச்சாளர்களைக் கொண்ட துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடுவது எனது அனைத்துப் பிறந்த நாள்களும் ஒரே சமயத்தில் வந்தது போன்று மகிழ்ச்சியாக இருந்ததாக இவர் பின்னர் கூறினார். [21] மேற்கிந்தியத் தீவுகள் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக துடுப்பாட்டத்தின் அதிகார மையமாக இருந்தன. அணிகளில் பல சிறந்த விரைவு வீச்சாளர்களும் இருந்தனர். [21] பாண்டிங்கின் அச்சமற்ற அணுகுமுறை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகப் பயன்படும் என ரோட் மார்ஷ் நம்பினார்.

சான்றுகள்[தொகு]

 1. https://www.telegraph.co.uk/sport/cricket/international/australia/9712982/Michael-Vaughan-Ricky-Ponting-was-the-best-batsman-I-ever-played-against.html
 2. http://www.espncricinfo.com/decadereview2009/content/story/443957.html
 3. Smith closes in on Bradman, reaches joint-second highest batting points ever. ICC-Cricket.com. Retrieved 20 Dec 2017.
 4. ESPNcricinfo Staff (29 December 2010). "The proudest century". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 December 2010.
 5. ESPNcricinfo Staff (29 திசம்பர் 2010). "Statistics / Statsguru / Test matches / Batting records-Most Test wins". ESPNcricinfo. Archived from the original on 19 January 2014. பார்க்கப்பட்ட நாள் 30 December 2010.
 6. ESPNcricinfo Staff (29 December 2010). "Jump before you are pushed, Chappell tells Ponting". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 December 2010.
 7. Ponting celebrates 100 Test wins – Rediff.com Cricket. Rediff.com (2011-09-03). Retrieved on 2013-12-23.
 8. ESPNcricinfo Staff (29 திசம்பர் 2010). "Statistics / Statsguru / One-Day Internationals / Batting records-most ODI wins". ESPNcricinfo. Archived from the original on 31 October 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2010.
 9. Richardson (2002), p. 18–20.
 10. Richardson (2002), p. 20.
 11. Ricky Ponting – Australian Story. ABC TV.
 12. "Baby Emmy a cure for Ponting's trophy woes". Sydney Morning Herald. 27 July 2008. http://www.smh.com.au/news/cricket/baby-emmy-a-cure-for-pontings-trophy-woes/2008/07/26/1216492801742.html. பார்த்த நாள்: 13 August 2009. 
 13. "Former Australian captain Ricky Ponting and his wife Rianna welcome baby daughter Matisse Ellie". The Daily Telegraph. 8 September 2011. http://www.dailytelegraph.com.au/sport/cricket/former-australian-captain-ricky-ponting-and-his-wife-rianna-welcome-baby-daughter-matisse-ellie/story-e6frey50-1226132161919. பார்த்த நாள்: 9 October 2011. 
 14. "DSEG on Twitter". 24 September 2014. https://twitter.com/DSEGWorldwide/status/514684024120672257. பார்த்த நாள்: 25 September 2014. 
 15. Richardson (2002), p. 18.
 16. Richardson (2002), p. 21.
 17. Richardson (2002), p. 22.
 18. Ponting and Staples (1998), p. 12.
 19. Richardson (2002), p. 24.
 20. "One Day International series averages". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 January 2010.
 21. 21.0 21.1 Richardson (2002), p. 46.


வெளியிணைப்புகள்[தொகு]

கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: ரிக்கி பாண்டிங்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிக்கி_பாண்டிங்&oldid=3588036" இலிருந்து மீள்விக்கப்பட்டது