ஷேன் வோர்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஷேன் வோர்ன்
Shane Warne February 2015.jpg
2015 ஆம் ஆண்டின் உலகக்கிண்ணம் கோப்பை அறிமுகத்தில் வோர்ன். மெல்போர்ன் . பெப்ரவரி, 2015
ஆத்திரேலியாவின் கொடி ஆத்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஷேன் கெய்த் வோர்ன்
பட்டப்பெயர் வார்னீ
உயரம் 6 ft 0 in (1.83 m)
உயரம் 1.83 m (6 ft 0 in)
வகை பந்து வீச்சாளர் (சுழல் திருப்பம்)
துடுப்பாட்ட நடை வலது கை, இறுதியில் வருபவர்
பந்துவீச்சு நடை வலது கை , (சுழல் திருப்பம்)
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 350) ஜனவரி 2, 1992: எ இந்தியா
கடைசித் தேர்வு 2 ஜனவரி, 2007: எ இங்கிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 110) 24 மார்ச், 1993: எ நியூசிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி 10 ஜனவரி, 2005:  எ ஆசியXI
சட்டை இல. 5, 99, 12, 23
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1990–2007 விக்டோரியா துடுப்பாட்ட அணி (squad no. 23)
2000–2007 ஹாம்சயர் துடுப்பாட்ட சங்கம் (squad no. 23)
2008–2011 ராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 23)
2011–2013 மெல்போர்ன் ஸ்டார்ஸ் (squad no. 23)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுத் துடுப்பாட்டம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்முதல் தர துடுப்பாட்டம்அ வரிசை துடுப்பாட்டம்
ஆட்டங்கள் 145 194 301 311
ஓட்டங்கள் 3,154 1,018 6,919 1,879
துடுப்பாட்ட சராசரி 17.32 13.05 19.43 11.81
100கள்/50கள் 0/12 0/1 2/26 0/1
அதிக ஓட்டங்கள் 99 55 107* 55
பந்து வீச்சுகள் 40,704 10,642 74,830 16,419
இலக்குகள் 708 293 1,319 473
பந்துவீச்சு சராசரி 25.41 25.73 26.11 24.61
சுற்றில் 5 இலக்குகள் 37 1 69 3
ஆட்டத்தில் 10 இலக்குகள் 10 n/a 12 n/a
சிறந்த பந்துவீச்சு 8/71 5/33 8/71 6/42
பிடிகள்/ஸ்டம்புகள் 125/– 80/– 264/– 126/–

29 மார்ச், 2008 தரவுப்படி மூலம்: cricketarchive.com

ஷேன் கெய்த் வோர்ன் (ஷேன் வோர்ன், Shane Warne) (பிறப்பு. செப்டம்பர் 13, 1969) என்பவர் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் மற்றும் முன்னாள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் அணித்தலைவர் ஆவார்.[1]துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக பரவலாக அறியப்படுகிறார். 1994 ஆம் ஆண்டிற்கான சிறந்த துடுப்பாட்ட வீரராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பினில் குறிப்பிடப்பட்டார். மேலும் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் விசுடன் சர்வதேச முன்னணி துடுப்பாட்ட வீரராக ஷேன் வோர்னை விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது.[2] 2000 இல் நூற்றாண்டின் சிறந்த ஐந்து விசுடன் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும் இவர் பன்னாட்டுத் துடுப்பாடப் போட்டிகளின் விளக்கவுரையாளராகவும், தொழில்முறை சீட்டாட்ட வீராராகவும் உள்ளார். அனைத்துவிதமான துடுப்பாட்ட வடிவங்களில் இருந்தும் சூலை, 2013 இல் தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.[3]

இளமைப்பருவம்[தொகு]

ஷேன் வோர்ன் செப்டம்பர் 13, 1969 இல் விக்டோரியா ஆஸ்திரேலியாவில் பிறந்தார். இவரின் தந்தை பிரிட்ஜெட் தாய் கெய்த் வோர்ன் .[4][5] வோர்ன் ஏழு முதல் ஒண்பதாம் வகுப்பு (தரநிலை) வரை ஹாம்ப்டன் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். பின் இவரின் விளையாட்டுப் புலமையினால் இவருக்கு மெண்டோன் கிராமர் பள்ளியில் இடம் கிடைத்தது. வோர்ன் தனது பள்ளிப்படிப்பின் இறுதி மூன்று ஆண்டுகளை அவர் மெண்டோன் பள்ளியில் கழித்தார். 16 வயதிற்குட்பட்டோருக்கான டௌலிங் கேடயப் போட்டியில் மெல்பேர்ண் துடுப்பாட்ட சங்க பலகலைக்கழக அணியை வழிநடத்தும் வாய்ப்பினை 1983, 1984 இல் பெற்றார்.

ஆரம்பகால சரவதேச துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

இவரின் முதல் சர்வதேச போட்டியானது சனவரி, 1992 இல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டம் ஆகும். இந்தப் போட்டியில் 45 ஓவர்கள் வீசிய வோர்ன் ஒரு இலக்கினை மட்டுமே கைப்பற்றினார். இவர் ரவி சாஸ்திரியின் இலக்கை 150 ஓட்டங்கள் கொடுத்து கைப்பற்றினார். அடிலெய்டு நீள்வட்ட அரங்கில் அந்தத் தொடரின் நான்காவது போட்டியில் 78 ஓட்டங்கள் கொடுத்தார். ஆனால் இலக்குகளைப் பெற இயலவில்லை. எனவே அந்தத் தொடரின் இவரின் ஒட்டுமொத்த பந்து வீச்சானது 228 ஓட்டங்களுக்கு 1 இலக்கு என்று இருந்தது. இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக கொழும்புவில் நடைபெற்ற போட்டிகளிலும் இவரின் மோசமான பந்துவீச்சு 0/ 107 எனத் தொடர்ந்தது. இவ்வாறாக இருந்தபோதிலும் ஆகஸ்டு 22, 1992 இல் இரண்டாவது ஆட்டப் பகுதியில் ஓட்டங்களை விட்டுக் கொடுக்காமல் இறுதி மூன்று இலக்குகளை எடுத்தார். இதன் மூலம் ஆத்திரேலிய அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி குறிப்பிடத் தகுந்த வெற்றியைப் பெற்றது. இதனைப் பற்றி அர்ஜுன றணதுங்க கூறுகையில் 300 க்கும் அதிகமான பந்துவீச்சு சராசரி உள்ள ஒரு வீர்ர் எங்களின் வெற்றியை எங்கள் கைகளில் இருந்து பறித்துச் சென்றுவிட்டார் எனக் கூறினார்.

இருபது20 போட்டி[தொகு]

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த பிறகு இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை $450,000 மதிப்பில் தேர்வு செய்தது.[6] ஷேன் வோர்ன் இந்த அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டார். இவரின் தலைமையில் முதல் இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.[7] முதல் நான்கு பருவங்களுக்கு அணித் தலைவராக இருந்தார்.[8]

சான்றுகள்[தொகு]

  1. 'The finest legspinner the world has ever seen'Cricinfo Australia, 20 December 2006
  2. "The leading cricketer in the world, 2004 Shane Warne". ESPNcricinfo (2005).
  3. "Warne officially retires from all cricket". Wisden India. 22 July 2013. http://www.wisdenindia.com/cricket-news/warne-officially-retires-cricket/70146. பார்த்த நாள்: 31 July 2017. 
  4. "Shane Warne considers German citizenship". News Corp Australia (17 March 2009). பார்த்த நாள் 6 March 2018.
  5. "Leader: Danke Shane". The Guardian (19 Aug 2007). பார்த்த நாள் 6 March 2018.
  6. "Warne retires from first-class cricket". The Hindu. 28 March 2008. http://www.hindu.com/thehindu/holnus/007200803281040.htm. பார்த்த நாள்: 21 January 2012. 
  7. "Warne's Royals win inaugural IPL". BBC Sport. 2 June 2008. http://news.bbc.co.uk/sport2/hi/cricket/7430352.stm. பார்த்த நாள்: 21 January 2012. 
  8. Bose, Saibal (20 May 2011). "Royals plan a warm send-off for Warne". Times of India. http://articles.timesofindia.indiatimes.com/2011-05-20/news/29563926_1_shane-warne-rajasthan-royals-royals-plan. பார்த்த நாள்: 21 January 2012. 

வெளியிணைப்புகள்[தொகு]

கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: ஷேன் வோர்ன்

ஷேன் வோர்னுடைய இலக்குகள் பட்டியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷேன்_வோர்ன்&oldid=2755456" இருந்து மீள்விக்கப்பட்டது