வசீம் அக்ரம்
![]() வசீம் அக்ரம் (2018ல்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | வசீம் அக்ரம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 3 சூன் 1966 லாகூர், பஞ்சாப் (பாக்கிஸ்தான்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | வாஸ், ஊசலின் சல்தான், இரண்டு வ-க்கள் (வக்கார் யூனிசு உடன்), ஊசலின் மன்னன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடதுகை மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடதுகை வேகப்பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சு பல்துறையர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 102) | 25 சனவரி 1985 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 9 சனவரி 2002 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 53) | 23 நவம்பர் 1984 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 4 மார்ச் 2003 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 13 (முன்பு 12 மற்றும் 13, அணித்தலைவராக இருக்கையில் 1) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2003 | ஹாம்ப்சையர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1992–2002 | பாக்கித்தான் பன்னாட்டு வானூர்தி துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1988–1998 | லன்காசையர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1985–1987, 1997–1998, 2000–2001 | லாகூர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1984–1986 | பாக்கித்தான் தானுந்து நிறுவனம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNCricinfo, 4 ஏப்ரல் 2012 |
வசீம் அக்ரம் (Wasim Akram (உருது: وسیم اکرم; பிறப்பு 3 சூன், 1966) என்பவர் முன்னாள் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி பந்து வீச்சாளர் ,துடுப்பாட்ட வர்ணனையாளார் மற்றும் தொலைக்காட்சி பிரபலர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்[1][2][3][4] இவர் இடதுகை விரைவு வீச்சாளர் ஆவார். இவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டங்களை தலைமையேற்று நடத்தினார். அக்டோபர், 2013 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பின் 150 ஆண்டையொட்டி வெளியிட்ட தேர்வுத் துடுப்பாட்ட உலக லெவன் அணியில் இடம் பெற்ற ஒரே பாக்கித்தான் வீரர் இவர் ஆவார்.[5][6][7][8]
துடுப்பாட்ட வரலாற்றின் விரைவு வீச்சாளர்களில் குறிப்பிடத் தகுந்தவராகக் கருதப்படுகிறார். பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகளை எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இவர் 881 இலக்குகளை எடுத்துள்ளார். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உள்ளார். ஊஞ்சலாடும் வகையிலான பந்து வீச்சு முறையினை அறிமுகம் செய்தவர் என்றும் அதனை சிறப்பான முறையில் வீசுபவர் எனவும் பரவலாக அறியப்படுகிறார்.[9][10][11]
2003 துடுப்பாட்ட உலகக்கிண்ண போட்டியின் போது 500 இலக்குகள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு 2002 ஆம் ஆண்டில் அனைத்துக் காலத்திற்குமான துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் சிறந்த பந்து வீச்சாளர்களில் இவருக்கு 1223.5 புள்ளிகள் கிடைத்தது. இவருக்கு முன்னதாக அலன் டொனால்ட், இம்ரான் கான்,வக்கார் யூனிசு, ஜேயல் கார்னர், கிளென் மெக்ரா, மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் உள்ளனர்.[12] இவர் மொத்தம் 356 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.[9] அதில் 23 முறைகள் 4 இலக்குகளைப் பெற்றுள்ளார். செப்டம்பர் 30, 2009 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் ஹால் ஆஃப் ஃபேமாக அறிவிக்கப்பட்டார்.[13][14] கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக பணியாற்றினார்.[15] கராச்சியில் உள்ள தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 6 ஆவது பருவகாலத்தில் பங்கேற்கவில்லை.[16]
ஆரம்பகால வாழ்க்கை[தொகு]
வசீம் அக்ரம் சூன் 3, 1996 இல் லாகூரில் முஸ்லிம் பஞ்சாபிக் குடும்பத்தில் பிறந்தார்.[17] இவர் அரசு இஸ்லாமிய கல்லூரியில் பயின்றார். கல்லூரியில் படித்த காலகட்டத்தில் கல்லூரித் துடுப்பாட்ட அணியில் துவக்க மட்டையாளர் மற்றும் பந்து வீச்சாளராக செயல்பட்டார்.[18] இவரின் தந்தை சௌத்ரி முகமது அக்ரம் , இவர் அமிருதசரசு அருகிலுள்ள சிற்றூரில் பிறந்தார். பின் இந்தியப் பிரிப்பின் போது குடும்பத்தினருடன் இவர் பஞ்சாப், பாக்கித்தானுக்கு இடம்பெயர்ந்தார்.[19]
வசீம் 30 வயதாக இருக்கும் போது நீரிழிவு நோய் தாக்குதலுக்கு உள்ளானர். இதனைப் பற்றிக் கூறும் போது இது எனக்கு ஆச்சரியமாக உள்ளது .ஏனெனில் நான் ஒரு ஆரோக்கியமான விளையாட்டு வீரர். எனது குடும்பத்தினர் யாருக்கும் நீரிழுவு நோய் இருந்தது இல்லை. எனக்கு இந்த நோய் வரும் என்று நான் நினைத்துப் பார்த்தது கூட கிடையாது.எனக் கூறினார். இதன் பின் நீரிழிவு நோய்க்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொண்டார்.[20][21]
அக்ரம் 1995 ஆம் ஆண்டில் ஹுமா முப்தி என்பவரை மணந்தார்.[22] இவர்களின் 15 வருட திருமண பந்தத்தில் இரண்டு மகன்கள் இருந்தனர்.மூத்தவர் தஹ்மூர் 1996 ஆம் ஆண்டில் பிறந்தார். இளையவர் அக்பர் 2000 ஆம் ஆண்டில் பிறந்தார்.[23] அக்டோபர் 25, 2009 அன்று இந்தியாவின் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பல உறுப்பு செயலிழப்பால் ஹுமா இறந்தார்.[24]
7 ஜூலை 2013 அன்று, அக்ரம் ஆஸ்திரேலிய பெண்ணான ஷானீரா தாம்சனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது. அவர் 2011 இல் மெல்போர்ன், கிரவுன் கேசினோவில் நடந்த போக்கர் போட்டியில் பங்கேற்றபோது இவரைச் சந்தித்தார்.[25] அக்ரம் 12 ஆகஸ்ட் 2013 அன்று ஷானீராவை மணந்தார்.இதனைப் பற்றி அவர் தெரிவிக்கையில் "நான் ஒரு எளிய விழாவில் லாகூரில் ஷானீராவை மணந்தேன், இது எனக்கும், என் மனைவிக்கும், என் குழந்தைகளுக்கும் ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கமாகும்" எனத் தெரிவித்தார்.
அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லாகூரிலிருந்து கராச்சிக்கு குடிபெயர்ந்தார்.[26] செப்டம்பர் 3, 2014 அன்று, தம்பதியினர் தாங்கள் முதல் குழந்தையை எதிர்பார்பதாக ட்வீட் செய்தனர். இது அக்ரம் குடும்பத்தின் மூன்றாவது குழந்தை ஆகும்.[27] 27 டிசம்பர் 2014 அன்று, ஷானீரா மெல்போர்னில் அயிலா சபீன் ரோஸ் அக்ரம் என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
ஓய்விற்குப் பிறகு[தொகு]
துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றதிலிருந்து, அக்ரம் தொலைக்காட்சி வரிசைகளுகளில் வர்ணனையாளராகப் பணிபுரிந்தார். தற்போது ஈஎஸ்பிஎன் ,ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஏ.ஆர்.ஐ டிஜிட்டல் மற்றும் சில தொலைக்காட்சிகளுக்கும் விளையாட்டு வர்ணனையாளராக உள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2009 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை, இங்கிலாந்தில் நடைபெற்ற 2009 ஐசிசி உலக இருபது20, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2009 ஐசிசி வாகையாளர் கோப்பை, மற்றும் இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷில் நடந்த 2011 ஐசிசி துடுப்பாட்ட உலகக் கோப்பை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் அவர் வர்ணனை செய்தார்.
பயிற்சியாளராக[தொகு]
2010 இல் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அக்ரம் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்த சவுரவ் கங்குலி தலைவராக இருந்த காலத்தில், அக்ரமை இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்க விரும்பினார்.ஆனால் அது நடக்கவில்லை. பின்னர் இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக இருந்தபோது இவரை அந்த அணியின் தலைமைப் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்தார்.[28] சர்வதேச விரைவு வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் போன்றவர்களை வழிநடத்தியதில் இவரின் பங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்.கராச்சியில் உள்ள தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 6 ஆவது பருவகாலத்தில் பங்கேற்கவில்லை.பாகிஸ்தான் விரைவு வீச்சு முகாம்களுக்கு அக்ரம் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.முகமது ஆமீர் மற்றும் ஜூனைத் கான் ஆகியோர் இவரது பயிற்சியின் கீழ் இருந்தவர்கள் ஆவர்.
சான்றுகள்[தொகு]
- ↑ Qamar Ahmed. "Wasim Akram was the best I ever faced, says Kallis". dawn.com. http://www.dawn.com/news/791225/wasim-akram-was-the-best-i-ever-faced-says-kallis.
- ↑ Khabir Uddin Mughal. "Wasim Akram One of Greatest Bowlers of All Time.". Sporteology இம் மூலத்தில் இருந்து 2015-03-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150328220826/http://sporteology.com/wasim-akram-one-of-greatest-bowlers-of-all-time/.
- ↑ Khabir Uddin Mughal. "Wasim Akram, Best ODI Bowler in History.". Sporteology. http://sporteology.com/wasim-akram-best-odi-bowler-in-history/.
- ↑ Khabir Uddin Mughal. "Top 10 Greatest Cricketers of All Time.". Sporteology இம் மூலத்தில் இருந்து 2014-10-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141022001537/http://sporteology.com/top-10-greatest-cricketers-time/.
- ↑ "Don Bradman, Shane Warne in Wisden's XI". theaustralian.com. 23 October 2013. http://www.theaustralian.com.au/sport/cricket/don-bradman-shane-warne-in-wisdens-xi/story-e6frg7rx-1226745875416. பார்த்த நாள்: 23 October 2013.
- ↑ "Sachin Tendulkar in Wisden's All-time World Test XI". என்டிடிவி. 23 October 2013 இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131023230756/http://sports.ndtv.com/cricket/news/215990-sachin-tendulkar-in-wisdens-all-time-world-test-xi. பார்த்த நாள்: 23 October 2013.
- ↑ "Sachin Tendulkar named in Wisden all-time World Test XI". DNA India. 23 October 2013. http://www.dnaindia.com/sport/report-sachin-tendulkar-named-in-wisden-all-time-world-test-xi-1907777. பார்த்த நாள்: 23 October 2013.
- ↑ "WG Grace and Shane Warne in Wisden all-time World Test XI". BBC.co.uk. 23 October 2013. https://www.bbc.co.uk/sport/0/cricket/24640224. பார்த்த நாள்: 23 October 2013.
- ↑ 9.0 9.1 Wasim Akram, இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ, retrieved 21 April 2012
- ↑ Career Bowling – Most Wickets, ESPNcricinfo, 30 April 2007, retrieved 21 April 2012
- ↑ List A Limited-Overs Most Wickets in Career, ESPNcricinfo, 30 April 2007, retrieved 21 April 2012
- ↑ "All-time W100 ODI Top 10s". ESPNCricinfo. 27 January 2003. http://www.espncricinfo.com/ci/content/story/128517.html. பார்த்த நாள்: 21 April 2012.
- ↑ "ICC Cricket Hall of Fame". ESPNCricinfo. http://www.espncricinfo.com/ci-icc/content/page/391062.html. பார்த்த நாள்: 21 April 2012.
- ↑ "Wasim Akram, Steve Waugh inducted into ICC Hall of Fame". MSN Sports இம் மூலத்தில் இருந்து 2 அக்டோபர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091002134250/http://sports.in.msn.com/cricket/article.aspx?cp-documentid=3261064. பார்த்த நாள்: 6 August 2010.
- ↑ "Kolkata Knight Riders". iplt20.com. http://www.iplt20.com/teams/kolkata-knight-riders.
- ↑ "IPL news : Wasim Akram takes break as KKR bowling coach | Cricket News | Indian Premier League | ESPN Cricinfo". Cricinfo.
- ↑ [1]
- ↑ "Akram biography" இம் மூலத்தில் இருந்து 2 August 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5rgRJCtgc?url=http://taimour.wordpress.com/2007/09/21/biography-of-wasim-akram/. பார்த்த நாள்: 2 August 2010.
- ↑ First Look: Wasim Akram returns
- ↑ Rehan, Sohema. "Dealing With Diabetes". Newsline இம் மூலத்தில் இருந்து 16 April 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090416073959/http://newsline.com.pk/NewsDec2004/health1dec.htm.
- ↑ "'After the shock, I took control'". National Health Service. http://www.nhs.uk/Conditions/Diabetes-type1/Pages/WasimAkram.aspx. பார்த்த நாள்: 28 May 2012.
- ↑ "Wasim Akram Wedding Was Held In 1995". Awami Web.
- ↑ The Sultan swings by பரணிடப்பட்டது 25 ஆகத்து 2011 at the வந்தவழி இயந்திரம். Toronto Star. Retrieved on 30 April 2007.
- ↑ "Pakistan / News – Akram's wife died at the age of 42". ESPN Cricinfo. http://www.cricinfo.com/pakistan/content/story/431079.html.
- ↑ Te Koha, Nui. Pakistan cricket great Wasim Akram to marry Melbourne woman Herald Sun, 7 July 2013].
- ↑ "Wasim Akram marries Australian girlfriend Shaniera Thompson" பரணிடப்பட்டது 2013-08-22 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ "'Wasim, Shaniera expecting first child". Herald. 3 September 2014. http://www.dawn.com/news/1129634/wasim-shaniera-expecting-first-child.
- ↑ "KKR can win IPL's 3rd edition: Wasim Akram". The News International. 11 January 2010. http://www.thenews.com.pk/updates.asp?id=95819.[தொடர்பிழந்த இணைப்பு]