உமேஸ் யாதவ்
![]() Yadav in 2013 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | உமேஷ்குமார் திலக் யாதவ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 25 அக்டோபர் 1987 நாக்பூர், மகாராட்டிரம், இந்தியா[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை வேகப் பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 272) | 6 நவம்பர் 2011 எ. மேற்கிந்தியத்தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 26 திசம்பர் 2020 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 184) | 28 மே 2010 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 24 அக்டோபர் 2018 எ. மேற்கிந்தியத்தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 19 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 42) | 7 ஆகஸ்ட் 2012 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 24 பிப்ரவரி 2019 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 19 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–தற்போதுவரை | விதர்பா துடுப்பட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2009–2013 | டெல்லி டேர்டெவில்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014–2017 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (squad no. 19) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018–தற்போதுவரை | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (squad no. 19) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், 31 திசம்பர் 2020 |
உமேஷ் குமார் திலக் யாதவ் (Umesh Kumar Tilak Yadav பிறப்பு: அக்டோபர் 25 1987), ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் விதர்பா துடுப்பாட்ட அணிக்காகவும் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் விதர்பா துடுப்பாட்ட அணிக்காக 2008 ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். விதர்பா அணியிலிருந்து இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய முதல் நபர் இவர் ஆவார். மே , 2010 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். பின் 2011 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இவர் 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் அதிக இலக்குகள் வீழ்த்திய இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர்களில் முதலிடம் பிடித்தார்.[2]
இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் இவர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் 4.2 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது.
2011 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகம் இவரை 750,000அமெரிக்க டாலர் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது.[3] இந்தத் தொடர்களில் 7 போட்டிகளில் விளையாடிய இவர் 2 இலக்குகளை மட்டுமே கைப்பற்றினார். ஓவருக்கு 9 ஓட்டங்கள் வீதம் கொடுத்துள்ளார்.[4][5]
சர்வதேச போட்டிகள்[தொகு]
மே, 2010 ஆம் ஆண்டில் பன்னாட்டு இருபது20 போட்டித் தொடருக்கான இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. பிரவீன் குமாருக்கு காயம் ஏற்பட்டதனால் இவர் இடம்பெற்றார்.[6] ஆனால் விளையாடும் அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. பின் ஜூன் மாதம் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி, இலங்கைத் துடுப்பாட்ட அணி மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான முத்தரப்பு தொடரில் விளையாடும் இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. பின் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 8 ஓவர்கள் வீசி 48 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.[7][8][9] ஆனால் இலக்குகளைக் கைப்பற்றவில்லை. பின் இந்தத் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடிய இவர் 1 இலக்கினைக் கைப்பற்றினார்.[10]
செப்டம்பர் , 2011 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்[11].காயம் காரணமாக இறுதி இரண்டு போட்டிகளில் இவரால் விளையாட இயலவில்லை. மூன்று போட்டிகளில்விளையாடிய இவர் 4 இலக்குகளைக் கைப்பற்றினார்.[12] இவரின் பந்துவீச்சு சராசரி 38.25 ஆகும்.[13]
இங்கிலாந்த்துத் தொடரில் சிறப்பாக விளையாடியதனால் நவம்பர் 2011 ஆம் ஆண்டில்மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் சிறிசாந்த் மற்றும் பிரவீன் குமாருக்குப் பதிலாக இவரையும் , வருண் ஆரோனையும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்தனர்.[14] பின் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். முதல் ஆட்டப் பகுதியில் இஷாந்த் ஷர்மாவுடன் இனைந்து துவக்க ஓவர்களை வீசினார். ஆனால் இலக்கினைக் கைப்பற்ற இயலவில்லை.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 36 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றி அனியின் வெற்றிக்கு உதவினார்.[15]
சான்றுகள்[தொகு]
- ↑ "Umesh Yadav". New Delhi Television Limited. https://sports.ndtv.com/cricket/players/1258-umesh-yadav-playerprofile. பார்த்த நாள்: 12 April 2018.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151005180734/http://www.icc-cricket.com/cricket-world-cup/teams/india/stats/most-wickets.
- ↑ Indian Premier League 2011 / IPL player list, ESPNcricinfo, retrieved 22 May 2012
- ↑ Batting and fielding in Indian Premier League 2011 (ordered by average), CricketArchive, retrieved 22 May 2012
- ↑ Bowling in Indian Premier League 2011 (ordered by wickets), CricketArchive, retrieved 22 May 2012
- ↑ Injured Praveen out of World Twenty20, ESPNcricinfo, 6 May 2010, retrieved 28 December 2011
- ↑ o2981 a20592 Zimbabwe v India: Zimbabwe Tri-Series 2010, Cricket Archive, retrieved 28 December 2011
- ↑ Monga, Sidharth (28 May 2010), Taylor and Ervine seal terrific win, ESPNcricinfo, retrieved 28 December 2011
- ↑ 2010 ODI Rankings, ICC, retrieved 28 December 2011
- ↑ Zimbabwe Triangular Series, 2010 / Records / Most wickets, ESPNcricinfo, retrieved 28 December 2011
- ↑ Harbhajan dropped for first two ODIs, ESPNcricinfo, 29 September 2011, retrieved 28 December 2011
- ↑ Mithun to replace injured Umesh Yadav, ESPNcricinfo, 21 October 2011, retrieved 28 December 2011
- ↑ Mithun to replace injured Umesh Yadav, ESPNcricinfo, retrieved 28 December 2011
- ↑ Harbhajan out of Test squad; Kohli, Ashwin in, 28 October 2011, retrieved 28 December 2011
- ↑ f53504 t2015 India v West Indies: West Indies in India 2011/12 (1st Test), ESPNcricinfo, retrieved 28 December 2011
வெளியிணைப்புகள்[தொகு]
- உமேஷ் யாதவ் கிரிக் இன்ஃபோ
- [1]உமேஷ் யாதவ்'விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு
- [2]உமேஷ் யாதவ் கிரிக்கெட் அர்ச்சிவ்
- Zaheer Khan's guidance crucial during matches, says பரணிடப்பட்டது 2013-04-15 at the வந்தவழி இயந்திரம் உமேஷ் யாதவ்