வருண் ஆரோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வருண் ஆரோன்
Varun Aaron.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்வருண் ரேமண்ட் ஆரோன்
உயரம்1.95 m (6 ft 5 in)
மட்டையாட்ட நடைவலது-கை துடுப்பாட்டக்காரர்
பந்துவீச்சு நடைவலது-கை மித-வேகம்
பங்குபந்து வீச்சாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
சார்க்கண்ட்19க்குக் கீழே
2008-நடப்புசார்க்கண்ட்
2008-2010கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2011-நடப்புதில்லி டேர்டெவில்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை மு.து ப.அ T20
ஆட்டங்கள் 11 11 11
ஓட்டங்கள் 258 73 15
மட்டையாட்ட சராசரி 19.84 18.25 7.50
100கள்/50கள் 0/1 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 72 34 6*
வீசிய பந்துகள் 1757 524 228
வீழ்த்தல்கள் 25 23 8
பந்துவீச்சு சராசரி 38.48 17.47 29.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 5/17 5/47 2/6
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/0 3/0 0/0
மூலம்: [1], 22 ஆகத்து 2011

வருண் ரேமண்ட் ஆரோன் (Varun Raymond Aaron, பிறப்பு 29 அக்டோபர் 1989) இந்தியாவின் துடுப்பாட்ட களத்தில் வளரும் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராவார். சார்க்கண்ட் மாநிலத்தவராகிய ஆரோன் விஜய் அசாரே கோப்பை இறுதி ஆட்டத்தில் இராசத்தானிற்கு எதிரான ஆட்டத்தில் 153கிமீ வேகத்தில் பந்து வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சார்க்கண்ட் பத்தொன்பதுகளுக்கு கீழான அணியில் தமது துடுப்பாட்ட நுழைவை மேற்கொண்டார். வலது கை மித வேக பந்து வீச்சாளரான இவர் வலது கை மட்டையாளருமாவார்.

துவக்க காலங்கள்[தொகு]

வேகப் பந்து வீச்சாளர்களின் பற்றாக்குறை மிகுந்த இந்தியாவில் 2010-11 பருவத்தில் விசய் அசாரே கோப்பை ஆட்டத்தில் 153 கிமீ வேகத்தில் பந்து வீசி பரவலாக அறியப்படலானார். சார்க்கண்ட் மாநிலத்தவரான ஆரோன் சென்னை எம்ஆர்எஃப் பேசு பவுண்டேசன் நிறுவனத்தில் 15 வயது முதல் பயிற்சி பெற்றவர். சார்க்கண்ட் 19க்கு கீழணி, கிழக்கு மண்டல துடுப்பாட்ட அணி மற்றும் இந்திய 19க்கு கீழணி ஆகியவற்றில் பங்கு பெற்றுள்ளார்.2008-09 பருவ ரஞ்சிக்கோப்பை ஆட்டங்களில் இவரது முனைப்பான ஆட்டத்தால் முதுகெலும்பு அழுத்தங்களால் துன்பப்பட்டார். இலகுவான ஓட்டத்துடன் திரும்பவும் செய்யத்தக்க வகையான இவரது பந்துவீச்சு பாணியால் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள்ளாக தொடர்ந்து குச்சங்களுக்கு அண்மித்து வந்து 140 கிமீ வேகத்திற்கு மேற்பட்டு பந்து வீச முடிகிறது. பாக்கித்தானின் வசிம் அக்ரம் இவருக்குப் பயிற்சி அளித்துள்ளார்.இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டங்களில் 2008-2010 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் 2011ஆம் ஆண்டில் தில்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் ஆடியுள்ளார். தில்லி டேர்டெவில்சுக்காக தமது முதல் ஐபில் ஆட்டத்தை ஆடியுள்ளார்.

இந்தியாவின் எதிர்கால துடுப்பாட்டக்காரர்கள் அணியில் பங்கேற்று 2011இல் ஆத்திரேலியா சென்றார். அங்கு நடந்த ஆட்டங்களில் சிற்றப்பாக விளையாடி இங்கிலாந்தில் நடைபெறும் இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் தொடர்களில் காயமடைந்துள்ள இசாந்த் சர்மாவிற்கு மாற்றாக விளையாட அழைக்கப்பட்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வருண்_ஆரோன்&oldid=2721073" இருந்து மீள்விக்கப்பட்டது