உள்ளடக்கத்துக்குச் செல்

இஷாந்த் ஷர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இசாந்த் சர்மா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இஷாந்த் ஷர்மா
2012 இல் ஷர்மா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்இஷாந்த் விஜய் சர்மா
பிறப்பு2 செப்டம்பர் 1988 (1988-09-02) (அகவை 36)
தில்லி, இந்தியா
உயரம்1.93 m (6 அடி 4 அங்)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 258)25 மே 2007 எ. வங்காளதேசம்
கடைசித் தேர்வு24 சனவரி 2018 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 169)29 சூன் 2007 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாப17 சனவரி 2016 எ. ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்1 ( முன்னதாக 29)
இ20ப அறிமுகம் (தொப்பி 21)1 பெப்ரவரி 2008 எ. ஆத்திரேலியா
கடைசி இ20ப10 அக்டோபர் 2013 எ. ஆத்திரேலியா
இ20ப சட்டை எண்1
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2006/07–தற்போதுவரைபுது தில்லி துடுப்பாட்ட அணி
2008–2010கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (squad no. 29)
2011–2012டெக்கான் சார்ஜர்ஸ் (squad no. 1)
2013–2015சன்ரைசர்ஸ் ஐதராபாத் (squad no. 1)
2016ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு (squad no. 1)
2017கிங்சு இலெவன் பஞ்சாபு (squad no. 29)
2018சசெக்ஸ் மாகாணத் துடுப்பாட்ட அணி (squad no. 97)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து ஒ.ப.து மு.த.து பஅ
ஆட்டங்கள் 81 80 122 119
ஓட்டங்கள் 572 72 834 170
மட்டையாட்ட சராசரி 8.41 4.80 9.06 7.08
100கள்/50கள் 0/0 0/0 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 31* 13 66 31
வீசிய பந்துகள் 15,600 3,733 22,804 5,671
வீழ்த்தல்கள் 234 115 389 173
பந்துவீச்சு சராசரி 35.94 30.98 30.15 28.91
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
7 0 12 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 0 2 0
சிறந்த பந்துவீச்சு 7/74 4/34 7/24 5/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
16/– 19/– 26/– 26/–
மூலம்: ESPNcricinfo, 19 மே 2018

இசாந்த் ஷர்மா (Ishant Sharma; (ஒலிப்பு; (பிறப்பு: செப்டம்பர் 2 1988) இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய அனைத்து வடிவ துடுப்பாட்டங்களிலும் விளையாடி வருகிறார். இவர் ஒரு வலதுகை மித விரைவு வீச்சாளர் ஆவார்.[1] ஜவகல் ஸ்ரீநாத் திற்கு அடுத்தபடியாக அதிவேகமான பந்தினை வீசியுள்ளார் (ஸ்ரீநாத்தின் சாதனை: 1999 உலகக்கோப்பையின் போது மணிக்கு 154.5 கி.மீ., இசாந்தின் வேகம்: 2008 ஆஸ்திரேலியா அடிலெய்டில் 152.6 km/h). இவர் 1.93 மீ (6.3 அடி) உயரம் கொண்டவர் ஆவார்.[2][3][4]

2006–2007 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பு பெற்றார்.[5] அப்போது இவரின் வயது 18. இவரின் உடல்வாகினால் இவர் லம்பு எனும் புனைபெயர் கொண்டு அழைக்கப்பட்டார்.[6][7]. 2001 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டங்களில் மிக இளம்வயதில் 100 இலக்குகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 2013 ஆம் ஆண்டில் தென்னப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 100 வது இலக்கினை வீழ்த்தினார். இதன்மூலம் விரைவாக 100 இலக்குகளை வீழ்த்திய இந்தியர்களின் வரிசையில் ஐந்தாவது இடம்பிடித்தார்.[8] 2011 பொக்சிங் நாள் அன்று ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் ரிக்கி பாண்டிங்கிற்கு மணிக்கு 152.2 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசினார். சிறந்த இந்தியப் பந்துவீச்சாளர்களில் விரைவு வீச்சாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

சர்வதேச போட்டிகள்

[தொகு]

மே, 2007 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். முனாஃவ் பட்டேல் காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் இரண்டாவது போட்டியில் மூன்று ஓவர்கள் வீசினார். அதில் ஐந்து ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஒரு ஓவரை மெய்டனாக வீசினார்.இலக்குகளை வீழ்த்தவில்லை.[9] பின் சூலை-ஆகஸ்டு , 2007 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.

டிசம்பர் 2007 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் முன்னணிப் பந்துவீச்சாளர்களான ஜாகிர் கான், சிறிசாந்த் மற்றும் ஆர் பி சிங் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு விளையாடும் அணியில் இடம் கிடைத்தது. பெங்களூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 5 இலக்குகளை வீழ்த்தினார்.[10][11] இந்தத் தொடரின் இவரின் சிறப்பான செயல்பாட்டினால் ஆத்திரேலியச் சுற்றுப் பயணத்தில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.

காயம் காரணமாக ஓய்வுபெற்ற ஜாகிர் கான், சிறிசாந்த் மற்றும் ஆர் பி சிங் ஆகியோர் பார்டர் கவாஸ்கர் கோப்பையில் அணி திரும்பினர். எனவே ஆத்திரேலியச் சுற்றுப் பயணத்தில் விளையாடும் அணியில் இவரது பெயர் இடம்பெறவில்லை. பின் ஜாகிர் கானுக்கு காயம் ஏற்படவே இரண்டாவது போட்டியில் விளையாடுவதற்காக மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். மூன்றாவது போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி ரிக்கி பாண்டிங்கின் இலக்கினை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.[12] பின் அடிலெய்டு நீள்வட்ட அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக பந்துவீசி இரண்டு இலக்குகளை கைப்பற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்தத் தொடரின் முடிவில் 358 ஓட்டங்கள் கொடுத்து 6 இலக்குகளை வீழ்த்தினார். இவரின் பந்துவீச்சு சராசரி 59.66 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 101.0 ஆகவும் இருந்தது.[13]

சான்றுகள்

[தொகு]
  1. "Ishant Sharma". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 January 2012.
  2. "For Ishant Sharma, joys of small things a tall ask". Hindustan Times. Archived from the original on 20 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 September 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  3. "I enjoy being India's bowling spearhead: Ishant Sharma". The Times of India. Archived from the original on 2013-08-24. பார்க்கப்பட்ட நாள் 19 September 2013. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "Finn and Ishant: The tale of two tall spearheads". The Times of India. Archived from the original on 2013-05-21. பார்க்கப்பட்ட நாள் 19 September 2013. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. Ishant won't be going to SA, by Anand Vasu, Cricinfo, 27 December 2006
  6. "Speedster Ishant Sharma earns Curtly Ambrose comparison". Herald and Weekly Times. http://www.news.com.au/heraldsun/story/0,21985,24478043-2882,00.html. பார்த்த நாள்: 3 November 2008. 
  7. Ramamoorthy, Mangala (3 April 2008). "Season's flavour". The Hindu இம் மூலத்தில் இருந்து 20 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131020144508/http://www.hindu.com/mp/2008/04/03/stories/2008040351280400.htm. பார்த்த நாள்: 15 July 2012. 
  8. Sarath Feb 28, 2014. "Stats: Fastest Indian bowlers to reach 100 ODI wickets – Sportskeeda". Sportskeeda.com.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  9. Ishant Sharma to replace injured Munaf, by Anand Vasu, Cricinfo, 18 May 2007
  10. Misbah and Ishant light up the day, by Dilip Premchandran, Cricinfo, 11 December 2007
  11. "Pathan, VRV and Ishant drafted in". ESPNcricinfo. 5 December 2007. http://www.espncricinfo.com/cbs/content/story/323852.html. 
  12. Ishant savour spell to Ponting, by Siddharth Vaidyanathan, Cricinfo, 20 January 2008
  13. "Bowling records | Test matches | Cricinfo Statsguru | ESPN Cricinfo". Stats.espncricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2013-03-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஷாந்த்_ஷர்மா&oldid=3728051" இலிருந்து மீள்விக்கப்பட்டது