இருபது20

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2006 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் 2006 சூன் 15 ஆம் நாள் நடைப்பெற்ற இருபது20 துடுப்பாட்டப் போட்டி

இருபது20 ஒரு வகை துடுப்பாட்டப் போட்டி வகையாகும். இது இங்கிலாந்து வேல்சு துடுப்பாட்ட வாரியத்தினால் கௌண்டிகளுக்கிடையே 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளுக்காக முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் இரண்டு அணிகள் ஒவ்வொரு சுற்றைக் கொண்டிருப்பதோடு அணிக்கு உச்ச வரம்பாக 20 பந்துப் பரிமாற்றங்கள் மட்டையாட வழங்கப்படுகின்றது.

ஒவ்வொரு சுற்றும் 75 நிமிடங்கள் நீடிப்பதொடு முழு இருபது20 துடுப்பாட்டப் போட்டி 3 மணி 30 நிமிடத்த்தில் நிறைவடையும். இருபது20 போடிகளின் நேர அளவானது ஏனைய பிரபல விளையாட்டுக்களின் நேர அளவிற்க்கு அண்மித்தாக உள்ளது. அரங்கில் உள்ள பார்வையாளருக்கும் தொலைக்காட்சி பார்வையாளருக்கும் விருவிருப்பான பொடியை வழங்கும் வகையில் இருபது20 போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இருபது20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து உலகம் முழுவதும் அது அரவியுள்ளது. இன்று துடுப்பாட்ட சுற்றுப்பயணங்களின் போது குறைந்தது ஒரு இருபது20 போட்டியாவது விளையாடப்படுகிறது. முதலாவது உலக இருபது20 போட்டிகள் தென்னாபிரிக்காவில் 2007 ஆம் ஆண்டு நடைப்பெற்றது. இதன்போது இந்திய துடுப்பாட்ட அணி வெற்றியப் பெற்றது 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றன.[1] 2009 நடைப்பெற்ற இறுதிப்போட்டியில் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணி வெற்றியைப் பெற்றது.[2]

உலகக் கிண்ண இருபது 20 போட்டிகள்[தொகு]

இப்போட்டிகள் சர்வதேச கிரிக்கட் சங்கத்தினால் நடாத்தப்பட்டு வருகின்றது. இப்போட்டியில் 12 அணிகள் போட்டியிடுகின்றன.இப் போட்டிகள் இரண்டு வருடங்ளுக்கு ஒருமுறை நடாத்தப்படுகின்றது. இது 2007ஆம் ஆண்டு முதல் நடாத்தப்பட்டு வருகின்றது.

உலகக் கிண்ண இருபது 20 போட்டிகள்
போட்டி இல. வருடம் நடைபெற்ற நாடு வெற்றிபெற்ற நாடு
01 2007 Flag of South Africa.svg தென்னாப்பிரிக்கா Flag of India.svg இந்தியா
02 2009 Flag of England.svg இங்கிலாந்து Flag of Pakistan.svg பாக்கித்தான்
03 2010 WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள் Flag of England.svg இங்கிலாந்து
04 2012 Flag of Sri Lanka.svg இலங்கை WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள்

பன்னாட்டு இருபது20 அணிகள்[தொகு]

ஒவ்வொரு நாடும் பன்னாட்டுப் போட்டியொன்றில் முதலில் பங்கெடுத்த நாள் அடைப்புக் குறிக்குள் காட்டப்பட்டுள்ளது.

 1. Flag of Australia (converted).svg ஆத்திரேலியா (17 பிப்ரவரி, 2005)
 2. Flag of New Zealand.svg நியூசிலாந்து (17 பிப்ரவரி, 2005)
 3. Flag of England.svg இங்கிலாந்து (13 சூன், 2005)
 4. Flag of South Africa.svg தென்னாப்பிரிக்கா (21 அக்டோபர், 2005)
 5. WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள் (16 பிப்ரவரி, 2006)
 6. Flag of Sri Lanka.svg இலங்கை (15 சூன், 2006)
 7. Flag of Pakistan.svg பாக்கித்தான் (28 ஆகத்து, 2006)
 8. Flag of Bangladesh.svg வங்காளதேசம் (28 நவம்பர், 2006)
 9. Flag of Zimbabwe.svg சிம்பாப்வே (28 நவம்பர், 2006)
 10. Flag of India.svg இந்தியா (1 திசம்பர், 2006)
 11. Flag of Kenya.svg கென்யா (1 செப்டம்பர், 2007)
 12. Flag of Scotland.svg இசுக்காட்லாந்து (12 செப்டம்பர், 2007)
 13. Flag of the Netherlands.svg நெதர்லாந்து (2 ஆகத்து, 2008)
 14.  அயர்லாந்து (2 ஆகத்து, 2008)
 15. Flag of Canada.svg கனடா (2 ஆகத்து, 2008)
 16. Flag of Bermuda.svg பெர்முடா (3 ஆகத்து, 2008)
 17. Flag of Afghanistan.svg ஆப்கானித்தான் (2 பிப்ரவரி, 2010)

ப.து.அ உலக இருபது20[தொகு]

பதுஅ உலக இருபது20 போட்டிகள் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபது20&oldid=2479847" இருந்து மீள்விக்கப்பட்டது