உள்ளடக்கத்துக்குச் செல்

பிரவீன் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரவீண் குமார்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிரவீண் குமார்
உயரம்5 அடி 11 அங் (1.80 m)
மட்டையாட்ட நடைவலதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகம்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி [[{{{country}}} ஒநாப துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|170]])18 நவம்பர் 2007 எ. பாக்கிஸ்தான்
கடைசி ஒநாப10 ஆகத்து 2010 எ. நியூசிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2004/05–நடப்பில்உத்தரப் பிரதேசம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.ப.து கள் மு.து ப.அ டி20
ஆட்டங்கள் 34 37 85 35
ஓட்டங்கள் 201 1,387 1,201 290
மட்டையாட்ட சராசரி 16.75 25.21 22.66 15.26
100கள்/50கள் 0/1 0/8 0/5 0/1
அதியுயர் ஓட்டம் 54* 98 64 76*
வீசிய பந்துகள் 1,646 7,840 4,226 742
வீழ்த்தல்கள் 40 166 126 35
பந்துவீச்சு சராசரி 35.17 23.18 25.85 27.47
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 12 2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 1 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 4/31 8/68 5/32 3/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/– 6/– 16/– 5/–
மூலம்: CricketArchive, 5 திசம்பர் 2009

பிரவீண்குமார் சகத் சிங் (Praveenkumar Sakat Singh அல்லது Praveen Kumar) (பிறப்பு இரண்டு அக்டோபர் 1986 மீரட், உத்தரப் பிரதேசம்) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். முதல்தர துடுப்பாட்டத்தில் உத்தரப் பிரதேச துடுப்பாட்ட அணிக்கு ஆடுகிறார். வலதுகை மிதவேக பந்து வீச்சாளராகிய இவர் பந்தை இருதிசைகளிலும் அலைவுறுமாறு வீசுவதிலும் வீசுகோடு மற்றும் வீசுநீளம் மாற்றங்களிலும் திறன் மிகுந்தவர். இவரது அலைவுறு பந்துவீச்சினால் புதிய பந்து மூலம் விக்கெட்களை வீழ்த்துவதில் வல்லவராக விளங்குகிறார். மட்டையாட்டத்திலும் ஆடுவரிசையில் பின்னால் வந்து விளாசுவதில் பெயரெடுத்துள்ளார். உள்ளூர் ஆட்டங்களில் துவக்க மட்டையாளராகவும் களமிறங்கியுள்ளார்.

ஆட்டவாழ்வு

[தொகு]

முதல்தரம்

[தொகு]

உத்தரப் பிரதேசத்திற்காக ஆடும் குமார் தமது முதல் ஆட்டத்தை 2004ஆம் ஆண்டு துவங்கினார். 25 ஆட்டங்களில் சராசரியாக 21.50 ஓட்டங்களிக்கு ஒரு விக்கெட் என 126 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். பட்டியல் அ போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி 22.05 சராசரியில் 39 ஆட்டங்களில் 67 விக்கெட்கள் எடுத்துள்ளார்.

பன்னாடு

[தொகு]

இந்தியத் துடுப்பாட்ட வாரியத்திற்கு எதிரான இந்தியன் கிரிக்கெட் லீக்கிற்கு கையொப்பமிட்டு தனது பன்னாட்டு ஆட்டவாழ்வை சிதைக்க இருந்தார். இருப்பினும் கடைசி நேரத்தில் இந்த முடிவிலிருந்து மாற்றிக்கொண்டார். இவரது முதல்தரத் துடுப்பாட்டத்தில் மற்றும் இந்தியா முதல்நிலை அணியில் காட்டிய ஆட்டத்திறனுக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் ஆட்டத்தை 18 நவம்பர் 2007ஆம் ஆண்டில் பாக்கிஸ்தானுடன் நடந்த ஐந்தாவது பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் துவங்கினார்.[1] ஜெய்ப்பூரில் நடந்த இந்த முதல் ஆட்டத்தில் தமது முழு பத்து பந்து பரிமாற்றங்களிலும் விக்கெட் எதுவும் எடுக்காது 50 ஓட்டங்கள் கொடுத்தார். இவரது இரண்டாவத் ஒருநாள் ஆட்டத்திலும் விக்கெட்கள் எதுவும் எடுக்க இயலவில்லை. ஆனால் 26 பிப்ரவரி 2008 அன்று இலங்கையுடன் ஆடிய தமது மூன்றாவது ஆட்டத்தில் 31 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்கள் வீழ்த்தி இந்திய வெற்றிக்கு வழிகோலினார்.[2]

மார்ச்சு 4, 2008 அன்று நடந்த இரண்டாவது இறுதி ஆட்டத்தில் ஆத்திரேலியாவிற்கு எதிராக 46 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்கள் வீழ்த்தி ஆட்டநாயகனாகத் தெரிவானார்.

குமார் பயிற்சிவலையில் பந்து வீசுதல்.

இந்தியன் பிரீமியர் லீக்

[தொகு]

இந்தியன் பிரீமியர் லீக்கின் முதல் பருவத்தில் இருபது20 போட்டிகளில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருவிற்காக ஆடினார். இப்போட்டிகளில் மூன்று அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட் வீழ்த்தி "ஹேட்ரிக்" பெற்ற முதல் பந்துவீச்சாளராக விளங்கினார். 18 மார்ச்சு,2010 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் பெங்களூரு சின்னசாமி அரங்கத்தில் நடந்த ஆட்டத்தில் டேமியன் மார்ட்டின், நர்வால் மற்றும் டோக்ராவை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

2011 ஆண்டில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறார்.

ஆடுகளத்திற்கு வெளியேயான சர்ச்சைகள்

[தொகு]

16 மே 2008 அன்று மீரட் நகரில் ஒரு மருத்துவரை அடித்ததாக பிரவீண் மீது குற்றம் சாட்டப்பட்டது. குடிபோதையில் இவ்வாறு நடந்துகொண்டதாகத் தெரிகிறது. இருப்பினும் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.[3]

துடுப்பாட்டத்திலிருந்து ஓய்வு

[தொகு]

இந்திய துடுப்பாட்ட அணியில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த பிரவீண் குமார் அக்டோபர் 20, 2018 இல் துடுப்பாட்டப் போட்டிகளில் தான் விளையாடுவதிலிருந்து ஓய்வெடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். இவர் தனது 32 ஆவது வயதில் இந்த முடிவை அறிவித்துள்ளார். இவர் இந்திய அணியில் 2007 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் விளையாடினார்.[4] இவர் 6 டெஸ்ட் போட்டிகளில் 27 இலக்குகளையும், 68 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 77 இலக்குகளையும், 10 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடி 8 இலக்குகளையும் கைப்பற்றி உள்ளார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. India v Pakistan, 18 November 2007, Jaipur, CricketArchive, Retrieved on 20 November 2007
  2. Scorecard
  3. "Pacer Praveen Kumar man-handles doctor, apologises - News - News - The Times of India Cricket". Archived from the original on 2008-10-20. பார்க்கப்பட்ட நாள் 2011-01-25.
  4. 4.0 4.1 https://www.icc-cricket.com/news/883917

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Praveen Kumar
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரவீன்_குமார்&oldid=3679230" இலிருந்து மீள்விக்கப்பட்டது