பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்இந்தியாவின் கொடி அனில் கும்ப்ளே
பயிற்றுநர்தென்னாப்பிரிக்கா கொடி ரே ஜென்னிங்ஸ்[1]
உரிமையாளர்விஜய் மல்லையா [2]
Team information
ColorsRoyal Challengers Bangalore colours 2.svg
Founded2008
Home groundஎம். சின்னச்சாமி அரங்கம் (கொள்ளளவு எண்ணிக்கை: 40000)
அதிகாரபூர்வ இணையதளம்:Royal Challengers Bangalore

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெங்களூரு நகரைத் தலைமையிடமாகக் கொண்டு விளையாடும் மட்டைப்பந்து அணி மற்றும் கிளையணி ஆகும். தொழிலதிபர் விஜய் மல்லையா தனது குழுநிறுவனமான யுபி குழுமம் மூலம் இந்த இந்தியன் பிரிமியர் லீக் அணிக்கு உரிமையாளராய் இருக்கிறார்.[3] அணியின் தலைமை நிர்வாக அதிகாரியாக பிரஜேஷ் படேலும் அணித் தலைவராக அனில் கும்ப்ளேயும் இருக்கின்றனர். அணியின் பெருமைஅடையாள வீரராக விராட் கோலி இருக்கிறார். தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரே ஜென்னிங்ஸ் பயிற்சியாளராய் இருக்கிறார்.[4]

கிளையணியின் வரலாறு[தொகு]

இந்தியன் பிரீமியர் லீக் என்பது இந்திய மட்டைப்பந்து கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்படும் மட்டைப்பந்து போட்டித் தொடர் ஆகும். இது சர்வதேச மட்டைப்பந்து குழுவின் ஆதரவையும் பெற்று நடத்தப்படுகிறது.[5] 2008 ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலத்தில் நடத்தப்பட்ட துவக்க போட்டித் தொடரில், பங்குபெறுவதற்கான எட்டு அணிகளின் பட்டியலை இந்திய மட்டைப்பந்து கட்டுப்பாட்டு வாரியம் இறுதி செய்தது. பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவின் எட்டு வெவ்வேறு நகரங்களை பிரதிநிதித்துவம் செய்யும் அணிகளுக்கான ஏலம் பிப்ரவரி 20, 2008 அன்று மும்பையில் நடந்தது. இதில் பெங்களூரு அணியை விஜய் மல்லையா வாங்கினார். இதற்காக அவர் 111.6 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை செலுத்தினார். ஐபிஎல் போட்டித் தொடர் அணி ஒன்றுக்கு செலவிடப்பட்ட ஏலத்தொகையில் இது இரண்டாவது பெரிய தொகையாகும்; குஜராத்தி சுபாரிஸ் அணிக்காக ஹர்ஷ் கன்சாகராவின் குஜூ ஃபைனான்சஸ் நிறுவனத்தின் ஏலத்தொகையான 111.9 மில்லியன் டாலர் தொகை தான் முதலிடத்தில் இருக்கிறது. பாலிவுட் நடிகைகளான கட்ரினா கைஃப் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோரும், கன்னட திரையுலக நடிகை ரம்யா மற்றும் நடிகர் உபேந்திரா ஆகியோரும் இந்த அணிக்கு விளம்பரத் தூதர்களாய் இருக்கின்றனர்.[6]

2008 ஐபிஎல் பருவம்[தொகு]

இந்த பருவத்தில் இந்த அணி 4 போட்டிகளை வென்று 10 போட்டிகளில் தோற்றது. புள்ளிகள் பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தையே இது பிடிக்க முடிந்தது. இவர்களது மட்டைவீச்சாளர்களில் ராகுல் டிராவிட் மட்டும் தான் தொடரில் 300 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரராக இருந்தார். அணியின் மிகப் பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரரான ஜாக் காலிஸை சில ஆட்டங்களுக்கு அவரது மோசமான ஆட்டத்தின் காரணமாக வெளியில் அமர வைக்க வேண்டியதானது.[7][8] தொடர் தோல்விகளை அடுத்து பருவத்தின் பாதியிலேயே தலைமை நிர்வாக அதிகாரியான சாரு சர்மா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக பிரஜேஷ் படேல் நியமிக்கப்பட்டார்.[9] பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத்தும் கூட நீக்கப்படும் நிலை எழுந்தது. ஆயினும் அவர் வெளிப்படையாக அணியின் தோல்விகளுக்கு மன்னிப்பு கோரியதை அடுத்து அவரது பதவி தப்பியது. டிராவிட்டும் சர்மாவும் சரியான அணியைத் தேர்வு செய்யாதது தான் அணியின் தோல்விகளுக்குக் காரணம் என்று விஜய் மல்லையா பகிரங்கமாய் விமர்சித்தார். அணியின் தேர்வில் தான் பங்குபெறாமல் போனதற்கு வருந்துவதாகவும் அவர் கூறினார்.[9] ஐபிஎல் தொடரில் 14 ஆட்டங்களில் 11 துவக்க இணையை முயற்சி செய்து பார்த்த ஒரே அணி இது தான். இறுதியில் தலைமை அதிகாரியான மார்டின் குரோவ் ராஜினாமா செய்தார்.[10] 2009 ஐபிஎல் பருவம் முதல் அணிக்கு முன்னாள் தென்னாப்பிரிக்க அணி பயிற்சியாளர் ரே ஜென்னிங்ஸ் பயிற்சியளிப்பார் என அறிவிக்கப்பட்டது.

2009 ஐபிஎல் பருவம்[தொகு]

கெவின் பீட்டர்சன் தலைமையில் நடப்பு கோப்பை வெற்றியாளரான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக வெற்றியுடன் இந்த பருவத்தை துவங்கிய அணி அடுத்து வந்த ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்தது. ஆயினும், பீட்டர்சன் தேசிய அணியில் பங்குபெறுவதற்காக சென்று விட, அணியின் தலைமை இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவரான அனில் கும்ப்ளேயின் வசம் வந்தது. அதன்பின் அணியின் அதிர்ஷ்டம் தலைகீழாய் திரும்பியது. ஐபிஎல் 2 தொடரின் சுற்றுப் போட்டிகளின் கட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வென்று மூன்றாம் இடத்தை இந்த அணி பிடித்தது. எம்.எஸ்.தோனி தலைமையில் மேத்யூ ஹெய்டன், முத்தையா முரளிதரன் போன்ற வீரர்களை தனது அணியில் கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அரை இறுதிப் போட்டியில் சிறப்புற வென்று அவர்களது கோப்பை வெல்லும் கனவை சிதறடித்தது. ஆயினும் இறுதிப் போட்டியில் பரபரப்பான முடிவு கொண்டதொரு ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடம் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்த அணி தோல்வியைத் தழுவியது.

பெயர்க் காரணம்[தொகு]

விஜய் மல்லையா நம்பர். 1 மெக்டவல்’ஸ் அல்லது ராயல் சேலஞ்ச் ஆகிய தனது மிக அதிகமாக விற்பனையாகும் மது வகைகள் இரண்டில் ஒன்றுடன் தனது அணியின் பெயர் தொடர்புபட்டதாய் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.[11] இரண்டாவது வகை தெரிவு செய்யப்பட்டதால் இந்த பெயர் கிட்டியது. கர்நாடக அரசுக் கொடியின்[12] நிறங்களாக உள்ள சிவப்பு மற்றும் தங்க மஞ்சள் ஆகிய நிறங்கள் தான் இந்த அணியின் ஆடை நிறங்களாக உள்ளன. சின்னத்தில் “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்” என்கிற வார்த்தைகளுடன் RC ஆங்கில எழுத்துக்களுடனான முத்திரையும் பொறிக்கப்பட்டுள்ளது.

கருப்பொருள் பாடல்[தொகு]

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முதல் கருப்பொருள் பாடலாக குணால் கஞ்சவாலா மற்றும் சுனிதி சவுகான் பாடிய ஜீதேங்கே ஹம் ஷான் ஸே எனும் பாடல் தெரிவு செய்யப்பட்டிருந்தது. ஆயினும் டிவி9 உதவியுடன் சிவப்பு & மஞ்சள் அணிக்கு ஆதரவாய் தொகுக்கப்பட்ட தக்காத் கீதே என்கிற பாடலும் அதிகாரப்பூர்வமற்ற ரசிகர்பட்டாள கருப்பொருள் பாடலாக இருக்கிறது. ஆயினும், அணிப் பாடல் 2009 ஆம் ஆண்டில் ரீடிஃப்யூஸன் ஒய்&ஆர் பெங்களூர் மூலம் உருவாக்கப்பட்டது. இது கேம் ஃபார் மோர் என்று அழைக்கப்படுகிறது. இந்த இசை காணொளியை சஞ்சய் ஷெட்டி மற்றும் விஷால் இயக்கியுள்ளனர்; இசைத் தொகுப்பினை அமித் திரிவேதி (தேவ்.டி மற்றும் அமீர் புகழ்) செய்துள்ளார்; பாடல் வரிகளை அன்ஷூபாபா எழுதியுள்ளார்.

வீரர்கள்[தொகு]

முதலாவது ஐபிஎல் ஏலம்[தொகு]

அணி வீரர்கள் (பெருமைஅடையாள வீரரான ராகுல் டிராவிட்டைத் தவிர்த்து) இந்திய மட்டைப்பந்து வாரியம் மூலம் 20 பிப்ரவரி 2008 அன்று நடத்தப்பட்ட ஏலத்தில் தெரிவு செய்யப்பட்டனர். தென்னாப்பிரிக்க வீரரான ஜாக் காலிஸ் $900,000 தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட விலை உயர்ந்த வீரராக இடம்பெற்றார். இதன்காரணத்தால், பெருமைமிகு வீரராய் தேர்வு செய்யப்பட்டிருந்த ராகுல் டிராவிட்டுக்கு $1,035,000 கிடைத்தது (அணியில் மிக உயர்ந்த தொகைக்கு ஏலம் எடுக்கப்படும் வீரருக்கான தொகையை விட 15% அதிகமாக). இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் அனில் கும்ப்ளே, பிரவீண் குமார் மற்றும் ஜாகிர் கான், மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஷிவ்நரேன் சந்தர்பால், ஆஸ்திரேலிய வீரர்களான நாதன் பிராக்கன் மற்றும் கேமரூன் ஒயிட், தென் ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் மற்றும் டேல் ஸ்டெயின் ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட பிற வீரர்களாவர். பாகிஸ்தான் மட்டைப்பந்து அணியின் துணைத் தலைவரான மிஸ்பா-உல்-ஹக்கும் அணியில் இடம் பெற்றிருந்தார். ஆயினும் தொடரின் அநேக பகுதியில் விளையாடிய 11 பேரில் அவர் இடம்பெறவில்லை.

அணிமாற்றங்களும் & புதிய ஒப்பந்த வீரர்களும்[தொகு]

2008-2009 அணிமாற்ற சாளரத்தின் கடைசி நாளில், ஜாகிர் கான் மும்பை இந்தியன்ஸ் அணியின் ராபின் ஊத்தப்பா உடன், பண பரிவர்த்தனை இன்றி அணிமாற்றிக் கொள்ளப்பட்டார். அத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து கர்நாடக மட்டைவீச்சாளரான கவுரவ் திமேன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான பங்கஜ் சிங் ஆகியோரையும் அணி ஒப்பந்தம் செய்து கொண்டது.
ஜாகிர் கானுக்கு மாற்ற வீரராக ஈகிள்ஸ் அணியின் வேகப்பந்து வீரரான டிலான் டு ப்ரீஸை அணி ஒப்பந்தம் செய்தது.

பாகிஸ்தானிய வீரர்களின் ஒப்பந்தங்களை மற்ற சில உரிமையாளர்கள் துண்டிக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வீரரும் பாகிஸ்தான் மட்டைப்பந்து அணியின் தற்போதைய துணைத் தலைவருமான மிஸ்பா-உல்-ஹக்கின் ஒப்பந்தத்தையும் அணி நிர்வாகம் நிறுத்தி விட்டது.

இரண்டாவது ஐபிஎல் ஏலம்[தொகு]

ஐபிஎல் வரலாற்றில் மிகுந்த தொகை கொடுத்து வாங்கப்பட்ட வீரராக கெவின் பீட்டர்சன் இந்த அணியில் காலடி எடுத்து வைத்தார். 1.35 மில்லியன் டாலர் அடிப்படை விலையில் துவங்கிய அவரது மதிப்பு 1.55 மில்லியன் டாலரில் ஒப்பந்தமானது. நியூசிலாந்து அணியின் ஜெஸி ரைடரும் ஏலத்தில் 160,000 டாலர் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

அணித் தலைமை[தொகு]

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி உரிமையாளரான விஜய் மல்லையா அணித் தலைமை வாய்ப்புகளை திறந்தே வைத்திருந்தார். 1.5 மில்லியன் டாலருக்கு கெவின் பீட்டர்சனை ஏலம் எடுத்த அடுத்த நிமிடமே, அந்த விலையில் தனக்கு மகிழ்ச்சி என்று மல்லையா தெரிவித்தார். “அணித் தலைமை வாய்ப்புகள் திறந்தே உள்ளன. அணி நிர்வாகம் அது குறித்து முடிவெடுக்கும்” என்று அவர் கூறினார். முந்தைய வருடத்தில் ராகுல் டிராவிட்டால் தலைமை நடத்தப்பட்ட அணி கடைசிக்கு முந்தைய இடத்தைப் பிடித்திருந்தது. 2009 பருவத்திற்கு அணித் தலைவராக ராகுல் டிராவிட்டுக்குப் பதிலாக கெவின் பீட்டர்சன் இருப்பார் என்று மார்ச் 21, 2009 அன்று விஜய் மல்லையா அறிவித்தார். சொந்த காரணங்களால் டிராவிட் தொடரின் சுற்றுப் போட்டிகளில் விளையாடாதது அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.[13] ஆயினும், ஐபிஎல்லின் முதல் பருவத்தில் அணி சரியாக விளையாடாததே அணித் தலைவர் மாற்றப்பட்டதற்குக் காரணம் என்றே பலரும் சந்தேகிக்கிறார்கள். அதன்பின் அந்த பருவத்தில் பாதியில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் பங்கேற்பதற்காக கெவின் பீட்டர்சன் சென்று விட்டதையடுத்து எஞ்சிய ஆட்டங்களுக்கு அனில் கும்ப்ளே அணித் தலைவராக அறிவிக்கப்பட்டார். அதுமுதல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் செயல்பாடு சிறப்புற்றதாக ஆகியிருப்பதோடு அந்த திருப்பம் அற்புதமானதாய் அமைந்திருக்கிறது.

தற்போதைய அணியின் வீரர்கள் & நிர்வாகம்[தொகு]

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Lua error in Module:Navbar at line 62: Invalid title {{{2}}}.

மட்டைவீச்சாளர்கள்

சகலகலா வீரர்கள்

குச்சிக் காப்பான்கள்

பந்துவீச்சாளர்கள்

அணியின் பிறர்

முன்னாள் வீரர்கள்

நிர்வாகம்[தொகு]

சாம்பியன்ஸ் லீக் ட்வெண்டி20[தொகு]

ட்வெண்டி20 சாம்பியன்ஸ் லீக் என்பது இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளின் கிளையணிகளுக்கு இடையே நடக்கும் சர்வதேச ட்வெண்டி20 மட்டைப்பந்து தொடர் ஆகும். தேசிய ட்வெண்டி20 உள்நாட்டு மட்டைப்பந்து தொடர்களின் வெற்றி, குறிப்பாக இந்தியன் பிரிமியர் லீகின் வெற்றியை அடுத்து, இந்த போட்டித் தொடர் 2008 ஆம் ஆண்டில் துவக்கி வைக்கப்பட்டது.

2008 பருவம்[தொகு]

2008 பருவத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சாம்பியன்ஸ் லீகிற்கு தகுதி பெறவில்லை. 2008 மும்பை தாக்குதல்களின் காரணமாக இந்த போட்டித் தொடர் நடைபெறாமல் போனது என்றாலும், இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

2009 பருவம்[தொகு]

இந்தியன் பிரிமியர் லீக் 2009 பருவத்தில் இறுதிப் போட்டியில் தோற்று இரண்டாம் இடத்தைப் பிடித்ததை அடுத்து இந்த அணி டி20 சாம்பியன்ஸ் லீக் துவக்க தொடரில் பங்கேற்றது. ஐபிஎல் 2009 தொடரை வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் சுற்றுப் போட்டிகளின் மட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய மற்ற இரண்டு அணிகளும் பங்கேற்றன.

முதல் சுற்றில் சி குழுவில் இடம்பெற்றிருந்த இந்த அணி, போட்டித் தொடரில் குறைந்த அளவுக்கே வெற்றி பெற்றது. தங்களது முதல் ஆட்டத்தில் கேப் கோப்ராஸ் அணியிடம் தோற்ற இந்த அணி பின் வலிமையுடன் திரும்பி வந்து ஓடகோ அணியை எளிதாய் வென்று இரண்டாம் சுற்றில் நுழைந்தது. முதல் சுற்றிலான இணை ஆட்டங்களில் இருந்தான புள்ளிகளும் இரண்டாவது சுற்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டு கணக்கிடப்பட்டன என்பதால் இரண்டாவது சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெளியேறியது. இந்த அணி விக்டோரியன் புஷ்ரேஞ்சர்ஸ் அணியிடம் தோல்வி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் வெற்றி, கேப் கோப்ராஸ் அணியிடம் முதல் சுற்றில் தோற்றது இரண்டாவது சுற்றிற்கு எடுத்து வரப்பட்டது என மூன்று ஆட்டங்களில் 2 புள்ளிகளைப் பெற்றிருந்தது.

தேதி அட்டவணைகள் மற்றும் முடிவுகள்[தொகு]

ஐபிஎல் ஒட்டுமொத்த முடிவுகள்[தொகு]

முடிவுகளின் சுருக்கம்
வெற்றிகள் தோல்விகள் முடிவு இல்லை % வெற்றி வரிசையிடம்
2008 4 10 0 28.57% 7
2009 (அரையிறுதியில் கிட்டிய வெற்றி மற்றும் இறுதியில் கிட்டிய தோல்வி உட்பட) 9 7 0 56.25% 2
2010 5 4 0 55.55% 3
மொத்தம் 18 21 0 46.15%

2008 பருவம்[தொகு]

எண். தேதி எதிரணி இடம் முடிவு
1 18 ஏப்ரல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூரு 140 ஓட்டங்களில் தோல்வி
2 20 ஏப்ரல் மும்பை இந்தியன்ஸ் மும்பை ஐந்து வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - மார்க் பவுச்சர் - 39* (19)
3 26 ஏப்ரல் ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூரு 7 வீரர் வித்தியாசத்தில் தோல்வி
4 28 ஏப்ரல் சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூரு 13 ஓட்டங்களில் தோல்வி
5 30 ஏப்ரல் டெல்லி டேர்டெவில்ஸ் டெல்லி 10 ஓட்டங்களில் தோல்வி
6 3 மே டெக்கான் சார்ஜர்ஸ் பெங்களூரு 3 ஓட்டங்களில் வெற்றி, ஆட்ட நாயகன் - பிரவீண் குமார் - 3/23 (4 ஓவர்கள்)
7 5 மே கிங்சு இலெவன் பஞ்சாபு பெங்களூரு 6 வீரர் வித்தியாசத்தில் தோல்வி
8 8 மே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கொல்கத்தா 5 ஓட்டங்களில் தோல்வி
9 12 மே கிங்சு இலெவன் பஞ்சாபு மொஹாலி 9 வீரர் வித்தியாசத்தில் தோல்வி
10 17 மே ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெய்ப்பூர் 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி
11 19 மே டெல்லி டேர்டெவில்ஸ் பெங்களூரு 5 வீரர் வித்தியாசத்தில் தோல்வி, ஆட்ட நாயகன் - ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி - 52 (42)
12 21 மே சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - அனில் கும்ப்ளே - 3/14 (4 ஓவர்கள்)
13 25 மே டெக்கான் சார்ஜர்ஸ் ஐதராபாத் 5 வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - வினய் குமார் - 3/27 (4 ஓவர்கள்)
14 28 மே மும்பை இந்தியன்ஸ் பெங்களூரு 9 வீரர் வித்தியாசத்தில் தோல்வி

2009 பருவம்[தொகு]

எண். தேதி எதிரணி இடம் முடிவு
1 18 ஏப்ரல் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப் டவுன் 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - ராகுல் டிராவிட் - 66 (48)
2 20 ஏப்ரல் சென்னை சூப்பர் கிங்ஸ் போர்ட் எலிசபெத் 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி
3 22 ஏப்ரல் டெக்கான் சார்ஜர்ஸ் கேப் டவுன் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி
4 24 ஏப்ரல் கிங்சு இலெவன் பஞ்சாபு டர்பன் 7 வீரர் வித்தியாசத்தில் தோல்வி
5 26 ஏப்ரல் டெல்லி டேர்டெவில்ஸ் போர்ட் எலிசபெத் 6 வீரர் வித்தியாசத்தில் தோல்வி
6 29 ஏப்ரல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டர்பன் 5 வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - மார்க் பவுச்சர் - 25* (13)
7 1 மே கிங்சு இலெவன் பஞ்சாபு டர்பன் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
8 3 மே மும்பை இந்தியன்ஸ் ஜோகனஸ்பர்க் 9 வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - ஜாக்வஸ் காலிஸ் - 69* (59)
9 7 மே ராஜஸ்தான் ராயல்ஸ் செஞ்சுரியன் 7 வீரர் வித்தியாசத்தில் தோல்வி
10 10 மே மும்பை இந்தியன்ஸ் போர்ட் எலிசபெத் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி
11 12 மே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் செஞ்சுரியன் 6 வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - ரோஸ் டெய்லர் - 81* (33)
12 14 மே சென்னை சூப்பர் கிங்ஸ் டர்பன் 7 வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - ரோஸ் டெய்லர் - 46 (50)
13 19 மே டெல்லி டேர்டெவில்ஸ் ஜோகனஸ்பர்க் 7 வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - ஜாக்வஸ் காலிஸ் - 58 (56)
14 21 மே டெக்கான் சார்ஜர்ஸ் செஞ்சுரியன் 12 ஓட்டங்களில் வெற்றி, ஆட்ட நாயகன் - மணிஷ் பாண்டே - 114* (73)
அரையிறுதி 23 மே சென்னை சூப்பர் கிங்ஸ் ஜோகனஸ்பர்க் 6 வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - மணிஷ் பாண்டே - 48 (35)
இறுதிப் போட்டி 24 மே டெக்கான் சார்ஜர்ஸ் ஜோகனஸ்பர்க் 6 ஓட்டங்களில் தோல்வி ஆட்ட நாயகன் - அனில் கும்ப்ளே - 4/16 (4 ஓவர்கள்)

2010 பருவம்[தொகு]

எண் தேதி எதிரணி இடம் முடிவு
1 14 மார்ச் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கொல்கத்தா 7 வீரர் வித்தியாசத்தில் தோல்வி
2 16 மார்ச் கிங்சு இலெவன் பஞ்சாபு பெங்களூரு 8 வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - ஜாக்வஸ் காலிஸ் - 89* (55)
3 18 மார்ச் ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூரு 10 வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - ஜாக்வஸ் காலிஸ் - 44* (34)
4 20 மார்ச் மும்பை இந்தியன்ஸ் மும்பை 7 வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - ஜாக்வஸ் காலிஸ் - 66* (55)
5 23 மார்ச் சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூரு 36 ஓட்டங்களில் வெற்றி, ஆட்ட நாயகன் - ராபின் ஊத்தப்பா - 68* (38)
6 25 மார்ச் டெல்லி டேர்டெவில்ஸ் பெங்களூரு 17 ஓட்டங்களில் தோல்வி
7 31 மார்ச் சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை 5 வீரர் வித்தியாசத்தில் தோல்வி
8 2 ஏப்ரல் கிங்சு இலெவன் பஞ்சாபு மொஹாலி 6 வீரர் வித்தியாசத்தில் வெற்றி, ஆட்ட நாயகன் - கெவின் பீட்டர்சன் - 66* (44)
9 4 ஏப்ரல் டெல்லி டேர்டெவில்ஸ் டெல்லி 37 ஓட்டங்களில் தோல்வி
10 8 ஏப்ரல் டெக்கான் சார்ஜர்ஸ் பெங்களூரு
11 10 ஏப்ரல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூரு
12 12 ஏப்ரல் டெக்கான் சார்ஜர்ஸ் நாக்பூர்
13 14 ஏப்ரல் ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெய்ப்பூர்
14 17 ஏப்ரல் மும்பை இந்தியன்ஸ் பெங்களூரு

குறிப்புதவிகள்[தொகு]

 1. DLF - IPL - Indian Premier League - Bangalore Royal Challengers Details
 2. [1]
 3. G. Krishnan (2008-02-20). "Bangalore team named 'Royal Challengers'". HindustanTimes. மூல முகவரியிலிருந்து 2008-05-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-02-20.
 4. DLF - IPL - இந்தியன் பிரீமியர் லீக் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் விவரங்கள்
 5. "Everything you wanted to know about the Indian Premier League". Cricinfo. பார்த்த நாள் 2008-02-20.
 6. "Mukesh, Mallya top bidders for IPL". The Hindu (2008-01-25). பார்த்த நாள் 2008-02-20.
 7. "Most Runs, Indian Premier League, 2007/08". Cricinfo.com. பார்த்த நாள் 2007-05-30.
 8. "Bangalore's wretched summer continues". Cricinfo.com. பார்த்த நாள் 2007-05-30.
 9. 9.0 9.1 "Biggest mistake was to abstain from selection - Mallya". Cricinfo.com. பார்த்த நாள் 2008-05-23.
 10. "A Test team in Twenty20 clothes" (28 April 2008).
 11. Shruti Sabharwal (2008-01-25). "No. 1 McDowell's or Royal Challenge to be Bangalore IPL team sponsor". பார்த்த நாள் 2008-02-20.
 12. இந்தியன் பிரீமியர் லீக் - மட்டைப்பந்து பொழுதுபோக்குடன் சந்திக்கிறது : மட்டைப்பந்து பத்திகள் : CricketZone.Com
 13. http://ipl.timesofindia.indiatimes.com/KP_replaces_Dravid_as_Challengers_skipper/articleshow/4297609.cms
 14. மட்டைப்பந்து அணி விவரங்கள் - யாஹூ! இந்தியா புனித் ராஜ்குமார் புதிய ராயல் சேலஞ்சர்ஸ் தூதராகி உள்ளார்

புற இணைப்புகள்[தொகு]