உள்ளடக்கத்துக்குச் செல்

சித்தார்த் கௌல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தார்த் கௌல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சித்தார்த் கௌல்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குபந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது ஒ.நா இளைஞர்
ஆட்டங்கள் 1 5
ஓட்டங்கள் 6 1
மட்டையாட்ட சராசரி 6.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 6 1*
வீசிய பந்துகள் 180 216
வீழ்த்தல்கள் 5 10
பந்துவீச்சு சராசரி 19.40 15.40
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/79 3/37
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 0/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், மார்ச்சு 11 2008

சித்தார்த் கௌல் (Siddarth Kaul, பிறப்பு: மே 19, 1990), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு மித விரைவு வீச்சாளர் ஆவார். சுமாராக மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசும் திறன் பெற்றவர் ஆவார்.2007 ஆம் ஆண்டில் பஞ்சாப் அணிக்கு எதிராக தனது முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்ட துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணி சார்பாக விளையாடினார். இந்தத் தொடரில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. பின் 2008 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். இவரின் தந்தை சித்தார்த் கவுல் ஜம்மு காஷ்மீர் அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

உள்ளூர்ப்போட்டிகள்[தொகு]

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சிக் கோப்பையில் இவர் ஒரிசா மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக பஞ்சாப் அணியில் விளையாடினார். இதே அணியில் இவரின் சகோதரர் குச்சக் காப்பாளராக உள்ளார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப்பகுதியில் இவர் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 97 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார்[1]. மேலும் இவர் பஞ்சாப் இளையோர் அணி, 15 வயதிற்கு உட்பட்ட பஞ்சாப் அணி மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பஞ்சாப் அணி ஆகிய அணிகள் சார்பாகவும் விளையாடியுள்ளார்.[2]

இந்தியன் பிரீமியர் லீக்[தொகு]

2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்ட துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணி சார்பாக விளையாடினார். இந்தத் தொடரில் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது.இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதல் பருவத்திற்கான வீரர்களின் தேர்வில் இந்திய 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் இடம்பெற்றவர்கள் பெரும்பான்மையாக இடம்பெற்றனர்.இந்தத் தொடருக்கான உத்தேச அணியில் இவரின் பெயரும் இடம்பெற்றது[3]. 2008 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது. இந்த அணியின் தலைவராக இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவராக தற்போதைய தேர்வுக் குழுவின் உறுப்பினர் சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டார்.[4]

சர்வதேச போட்டிகள்[தொகு]

2017 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இவர் இடம்பெற்றார்.ஆனால் விளையாடும் அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.[5] 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் சிறப்பாக விளையாடியதால் 2018 ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு மற்றும் அயர்லாந்து துடுப்பாட்ட அணிகளுக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.[6]

முதல்தரத் துடுப்பாட்டம்[தொகு]

2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். டிசம்பர் 17 இல் சண்டிகரில் நடைபெற்ற ஒடிசா துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் . பின் பந்துவீச்சில் 23 ஓவர்கள் வீசி 79 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் 3 ஓவர்களை மெய்டனாக வீசினார். இதில் 5 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 7 ஓவர்கள் வீசி 28 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் 1ஓவர்களை மெய்டனாக வீசினார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப்போட்டியில் பஞ்சாப் அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[7]

சான்றுகள்[தொகு]

  1. "Punjab v Orissa in 2007/08". CricketArchive. 2007-12-20. பார்க்கப்பட்ட நாள் 2008-03-12.
  2. "Other matches played by Siddharth Kaul". CricketArchive. Archived from the original on 2011-05-22. பார்க்கப்பட்ட நாள் 2008-03-11. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. Sriram Veera (2008-03-10). "Draft system for Under-19 players". கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 2008-03-11.
  4. "Hopes the biggest draw in low-profile auction". Cricinfo. 2008-03-11. பார்க்கப்பட்ட நாள் 2008-03-11.
  5. "Kohli rested for Sri Lanka ODIs; Rohit to lead". ESPN Cricinfo. 27 November 2017. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
  6. "Iyer, Rayudu picked for ODIs in England". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 May 2018.
  7. "Group B, Ranji Trophy Super League at Chandigarh, Dec 17-20 2007 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-30
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தார்த்_கௌல்&oldid=3718837" இலிருந்து மீள்விக்கப்பட்டது