சௌரவ் கங்குலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சௌரவ் கங்குலி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சௌரவ் சண்டிதாஸ் கங்குலி
பிறப்பு8 சூலை 1972 (1972-07-08) (அகவை 51)
பெகாலா, கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
உயரம்1.80 மீ
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தரம்
பங்குமட்டையாட்டம்
உறவினர்கள்
சினேஹாசிஷ் கங்குலி (சகோதரர்)
வலைத்தளம்souravganguly.co.in
தலைவர், இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்
பதவியில் உள்ளார்
பதவியில்
அக்டோபர் 2019
முன்னையவர்சி. கே. கன்னா
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 206)20 சூன் 1996 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு6 நவம்பர் 2008 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 84)11 சனவரி 1992 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாப15 நவம்பர் 2007 எ. பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1990–2010வங்கம்
2000லங்காசயர்
2005கிளமோர்கன்
2006நோர்தாம்ப்டன்சயர்
2008–2010கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2011–2012புனே வாரியர்சு இந்தியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒநாப மு.த ப.அ
ஆட்டங்கள் 113 311 254 437
ஓட்டங்கள் 7,212 11,363 15,687 15,622
மட்டையாட்ட சராசரி 42.17 41.02 44.18 43.32
100கள்/50கள் 16/35 22/72 33/89 31/97
அதியுயர் ஓட்டம் 239 183 239 183
வீசிய பந்துகள் 3,117 4,561 11,108 8,199
வீழ்த்தல்கள் 32 100 167 171
பந்துவீச்சு சராசரி 52.53 38.49 36.52 38.86
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 2 4 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 3/28 5/16 6/46 5/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
71/– 100/– 168/– 131/–
மூலம்: Cricinfo, 2 சனவரி 2013

சௌரவ் சந்திதாஸ் கங்குலி (Sourav Chandidas Ganguly; ஒலிப்பு; பிறப்பு: சூலை 8, 1972) தாதா என அன்பாக அழைக்கப்படுகிறார். அதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்பது அர்த்தமாகும். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் அணித்தலைவரும் ஆவார். தற்போது இவர் வங்காளத் துடுப்பாட்ட அவையின் தலைவராக உள்ளார்.[1] சர்வதேச துடுப்பாட்ட அரங்கில் மிகச் சிறந்த அணித் தலைவராகவும் மட்டையாளராகவும் விளங்கினார்.வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர் எனவே இவர் காட் ஆஃப் தெ ஆஃப் சைட் (வலது புறத்தின் கடவுள்) என அழைக்கப்படுகிறார்.[2]

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை நிர்வகிக்கும் நான்கு பேர்கொண்ட குழுவில் ஒவராகத் திகழ்கிறார்.இவர் உச்ச நீதிமன்றத்தினால் சனவரி 2016 இல் நியமனம் செய்யப்பட்டார்.[3] இந்தியன் பிரீமியர் லீக்கின் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.[4]

சௌரவ் கங்குலி, இவரின் மூத்த சகோதரர் சினேஹாசிஷால் துடுப்பாட்ட உலகத்திற்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். நவீன துடுப்பாட்ட வரலாற்றில் இந்தியாவின் மிகச் சிறந்த அணித் தலைவராகக் கருதப்படுகிறார்[5]. அனைத்துக் காலத்திற்குமான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் சிறந்த வீரர்களுள் ஒருவராகத் திகழ்கிறார்.[6][7][8] இவரின் பள்ளிக்கூட துடுப்பாட்ட அணி மற்றும் மாநிலத் துடுப்பாட்ட அணிகளிலும் விளையாடியுள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் தற்போது எட்டாம் இடத்திலும் , 10,000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், இன்சமாம் உல் ஹக் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திலும் உள்ளார். விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு 2002 ஆம் ஆண்டில் அளித்த தரவரிசையில் விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர்,பிறயன் லாறா,டீன் ஜோன்ஸ் மற்றும் மைக்கேல் பெவன் ஆகியோருக்கு அடுத்தபடியாக ஆறாவது இடத்தில் இவரின் பெயரை அறிவித்தது.[6]

இந்தியத் துடுப்பாட்ட அனியில் இடம் கிடைப்பதற்கு முன்பாக ரஞ்சிக் கோப்பை,துலீப் கோப்பை போன்ற தொடர்களில் விளையாடி வந்தார். பின் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடும் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் 131 இலக்குகள் அடித்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இலங்கைத் துடுப்பாட்ட அணி, பாக்கித்தான் துடுப்பாட்ட அணி,ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்றதன் மூலம் இந்திய அணியில் இவரின் இடம் நிரந்தரமானது. 1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் இவரும் ராகுல் திராவிட்டும் இணைந்து 318 ஓட்டங்கள் சேர்த்து சாதனை படைத்தனர். தற்போது வரை இந்தச் சாதனை முறியடிக்கப்படாமல் உள்ளது. 2000 ஆம் ஆண்டில் எழுந்த சூதாட்டப் புகார் பிரச்சினைகள் மற்றும் உடல்நிலை மோசமான காரணத்தினால் அணித் தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் டெண்டுல்கர் விலகினார். இதனால் தலைவர் பொறுப்பு கங்குலியிடம் வந்தது. 2002 ஆம் ஆண்டின் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது இவரின் மேலாடையைக் கழற்றியது மற்றும் வெளிநாடுகளில் அணி தோல்வியைத் தழுவியது போன்ற காரணங்களினால் இவர் விமர்சனத்திற்கு உள்ளானார். இவரின் தலைமையில் இந்தியதுடுப்பாட்ட அணி 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் இறுதிப்போட்டி வரை சென்று ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியிடம் வீழ்ந்தது. இந்தியக் குடிமை விருதுகளில் விருதுகளில் ஒன்றான பத்மசிறீ விருதை 2004 இல் பெற்றார்.[9]

சான்றுகள்[தொகு]

  1. "Sourav Ganguly appointed Cricket Association of Bengal chief". TOI. 24 September 2012 இம் மூலத்தில் இருந்து 6 January 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160106214137/http://timesofindia.indiatimes.com/sports/toi-cri/top-stories/Sourav-Ganguly-appointed-Cricket-Association-of-Bengal-chief/articleshow/49092564.cms. 
  2. Press Trust of India. Sourav Ganguly: God Of The Off-Side. NDTV.
  3. "Governing Council". Archived from the original on 6 June 2017. பார்க்கப்பட்ட நாள் 24 April 2017.
  4. "IPL Committees". IPLT20. Archived from the original on 6 June 2017. பார்க்கப்பட்ட நாள் 24 April 2017.
  5. "Sourav Ganguly | Sourav Ganguly Photos | Sourav Ganguly Profile – Yahoo! Cricket". Cricket.yahoo.com. Archived from the original on 23 August 2011. பார்க்கப்பட்ட நாள் 30 June 2011.
  6. 6.0 6.1 "Tendulkar second-best ever: Wisden". Rediff.com இம் மூலத்தில் இருந்து 23 January 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090123042213/http://www.rediff.com/cricket/2002/dec/13wisden.htm. பார்த்த நாள்: 27 November 2008. 
  7. "Lara, Ganguly, Sobers & Johnson in TMS left-handers XI". BBC Sport. Archived from the original on 18 November 2015. பார்க்கப்பட்ட நாள் 9 January 2016.
  8. "Top 10 Most Player of the Match Award Winners in ODIs". WONDERSLIST. Archived from the original on 25 December 2015. பார்க்கப்பட்ட நாள் 9 January 2016.
  9. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.

வார்ப்புரு:ஓரு நாள் கிரிக்கெட்டில் 10000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌரவ்_கங்குலி&oldid=3587087" இலிருந்து மீள்விக்கப்பட்டது