விவியன் ரிச்சர்ட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவ் ரிச்சர்ட்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சர் ஐசாக் விவியன் அலெக்சாண்டர் ரிச்சர்ட்சு
பட்டப்பெயர்மாஸ்டர் பிளாஸ்டர், ஸ்மோக்கி, ஸ்மோக்கின் ஜோ, கிங் விவ்
உயரம்5 அடி 10 அங் (1.78 m)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது-கை அலைவு வேகம் / மித வேகம் / வலத்திருப்பு
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
தேர்வு அறிமுகம் (தொப்பி [[{{{country}}} தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|151]])22 நவம்பர் 1974 எ. இந்தியா
கடைசித் தேர்வு8 ஆகஸ்ட் 1991 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி [[{{{country}}} ஒநாப துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|14]])சூன் 7 1975 எ. இலங்கை
கடைசி ஒநாப27 மே 1991 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1990–1993கிளமார்கன்
1976–1977குவீன்சுலாந்து
1974–1986சாமசெட்
1971–1991லீவடு தீவுகள்
1971–1981ஒருங்கிணைந்த தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை டெஸ்ட் போட்டி ஒரு நாள் போட்டி முதல் தர கிரிக்கெட் பட்டியல் A கிரிக்கெட்
ஆட்டங்கள் 121 187 507 500
ஓட்டங்கள் 8540 6721 36212 16995
மட்டையாட்ட சராசரி 50.23 47.00 49.40 41.96
100கள்/50கள் 24/45 11/45 114/162 26/109
அதியுயர் ஓட்டம் 291 189* 322 189*
வீசிய பந்துகள் 5170 5644 23226 12214
வீழ்த்தல்கள் 32 118 223 290
பந்துவீச்சு சராசரி 61.37 35.83 45.15 30.59
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 2 1 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/17 6/41 5/88 6/24
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
122/– 100/– 464/1 238/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்.com, 18 ஆகஸ்ட் 2007
விவியன் ரிச்சர்ட்ஸின் செயல்பாடு பற்றிய வரைபடம்

சர் ஐசக் விவியன் அலெக்சாண்டர் ரிச்சர்ட்ஸ் (Sir Isaac Vivian Alexander Richards) (பி. சென்.ஜான்ஸ் ஆண்டீகா, மார்ச் 7 1952) ஒரு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட வீரர்.அவரது இரண்டாவது பெயரான விவியன் அல்லது இன்னும் பரவலாக விவ் அல்லது கிங் விவ் என்று அறியப்பட்டார்.[1] துடுப்பாட்ட வரலாற்றில் தற்போது வரை உள்ள மிகச் சிறந்த மட்டையாளர்கள் ஒருவராகக் கருதப்படுகிறார்.[2][3][4][5] இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஐந்து துடுப்பாட்ட வீரர்களில் , டான் பிராட்மன், சோபர்ஸ், ஜாக் ஹாப்ஸ், மற்றும் ஷேன் வோர்ன் ஆகியாருடன் ஒருவராக 2000ஆம் ஆண்டு 100 வல்லுனர்கள் அடங்கியக்குழு ஒன்று வாக்களித்தது.[6]

பெப்ரவரி 2002 ஆம் ஆண்டு விசுடனால் எக்காலத்திலும் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆடியதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] அதே ஆண்டு திசம்பரில், விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அவரை சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட வீரராக மட்டுமன்றி தேர்வுத் துடுப்பாட்டத்திலும் டான் பிராட்மன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இவர்களை அடுத்து மூன்றாவது சிறந்த மட்டையாளராக தெரிவு செய்தது.[8] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருபது முறை ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற முதல் துடுப்பாட்ட வீரர் ஆவார்.

ஒட்டுமொத்தமாக 121 தேர்வுத் துடுப்பாட்டங்களில் 8,540 ஓட்டங்கள் பெற்றுள்ளார்.இவரின் தேர்வுத் துடுப்பாட்ட சராசரி 50.23 ஆகும். இவற்றில் 24 நூறுகள் (துடுப்பாட்டம்) அடங்கும். துடுப்பாட்ட அணித்தலைவராக விளையாடிய 50 போட்டிகளில் 24 இல் வெற்றி பெற்று 8 போட்டிகளில் மட்டுமே தோற்றுள்ளார். இவர் முதல் தர துடுப்பாட்டப் போட்டிகளில் 36,000 ஓட்டங்களுக்கு அதிகமாகவும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் சுமார் 7,000 ஓட்டங்களும் பெற்றுள்ளார். தற்போது ரிச்சர்ட்ஸ் அவ்வப்போது துடுப்பாட்ட விளக்கவுரையாளராகவும், அணியை வழிகாட்டுபவராகவும் உள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

மார்ச் 7, 1952 இல் சென் ஜோன்ஸ், அன்டிகுவாவும் பர்புடாவில் பிறந்தார். இவரின் பெற்றோர் மால்கம் மற்றும் கிரேடல் ரிச்சர்ட்ஸ் ஆவர். இவர் புனித ஜான் ஆண்கள் பள்ளியிலும் ஆண்டிகுவா கிராமர் (இலக்கணப்) பள்ளியில் உதவித்தொகையுடன் பயின்றார்.[9]

தனது இளம்வயது முதலே துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். இவரின் இளைய சகோதரர் மெர்வின் ரிச்சர்ட்ஸ் மற்றும் டொனால்டு ஆகியோரும் ஆண்டிகுவா அணிக்காக விளையாடினர். அவர்கள்தான் ரிச்சர்ட்சை துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாட ஊக்கப்படுத்தினர். துவக்கத்தில் ரிச்சர்ட்ஸ் தனது ஆரம்பகாலங்களில் தனது தந்தை பட் எவான்சன் மற்றும் ஆண்டிகுவா அணித் தலைவராக இருந்த தனது அண்டை வீட்டாரரருடன் பயிற்சி செய்து வந்தார்.[10]

துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

ஜனவரி, 1972 இல் முதல்தர போட்டிகளில் ரிச்ச்ர்ட்ஸ் தனது 19 வயதில் விளையாடினார்.[11] தனது 22 வயதில் அன்டிகுவா பர்புடா , லீவர்ட் ஐலாண்ட்ஸ் அணிக்காக விளையாடினார். 1973 இல் இவரின் திறமையை சாமர்செட் துடுப்பாட்ட துணை அவைத்தலைவராக இருந்த லென் கிரீட் கண்டறிந்தார்.[12]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

ரிச்ச்ட்ஸ் 1974 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் முதன்முறையாக விளையாடினார். அந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் 192 ஓட்டங்கள் எடுத்தார். அதிலிருந்து மேற்கு இந்தியத் தீவுகளின் சிறந்த துவக்க வீரராக அறியப்படுகிறார்.

1976 ஆம் ஆன்டில் 11 போட்டிகளில் விளையாடினார். அதில் மொத்தம் 1710 ஓட்டங்கள் எடுத்தார். அதில் 7 நூறு (துடுப்பாட்டம்) அடங்கும் . இந்தத் தொடரில் இவரின் சராசரி 90.00 ஆகும். இதன் இரண்டாவது போட்டியில் காளக்காய்ச்சல் காரணமாக விளையாடவில்லை. பின் ஓவலில் நடைபெற்ற போட்டியில் 291 ஓட்டங்கள் பெற்றார். ஒரு ஆண்டுக் கால காலத்தில் ஒரு துடுப்பாட்ட வீர்ர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் எனும் இவரின் சாதனை 30 ஆண்டுகாலங்கள் எவராலும் முறியடிக்கப்படவில்லை. பின் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் முகம்மது யூசுப் நவம்பர் 30, 2006 இல் இந்தச் சாதனையை முறியடித்தார்.

சர்வதேச சாதனை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Rajan, Sanjay (7 February 2003). "Greatest batsman: Viv Richards". The Hindu இம் மூலத்தில் இருந்து 2 ஆகஸ்ட் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110802001430/http://www.hinduonnet.com/2003/02/07/stories/2003020705571900.htm. பார்த்த நாள்: 22 September 2009. 
 2. "Stats from the Past: The best ODI batsmen from across eras | Highlights | Cricinfo Magazine". ESPN Cricinfo. Retrieved 2014-08-07.
 3. "Stats analysis: Viv Richards | Specials | Cricinfo Magazine". ESPN Cricinfo. Retrieved 2014-08-07.
 4. "Viv Richards- The greatest ODI batsman of all time". Sify.com. Archived from the original on 2011-02-19. Retrieved 2014-08-07. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 5. Featured Columnist (2013-11-13). "The ICC Ranking System's Top 10 Batsmen in ODI Cricket History". Bleacher Report. Retrieved 2014-08-07.
 6. "Wisden's cricketers of the century". BBC News. 5 April 2000. http://news.bbc.co.uk/1/hi/sport/cricket/702818.stm. பார்த்த நாள்: 22 September 2009. 
 7. "Richards, Gilmour top Wisden ODI list". rediff.com. 15 February 2002. Retrieved 22 September 2009.
 8. "Tendulkar second-best ever: Wisden". rediff.com. 14 December 2002. Retrieved 22 September 2009.
 9. McDonald (1984), pp. 25–6.
 10. Richards (1982), pp. 22–3.
 11. "The Home of CricketArchive".
 12. Viv Richards by Vivian Richards and David Foot. First Published 1979 by World's Work Ltd (UK). ISBN 978-0-437-14470-6.
 13. Baker, By Andrew. "Sir Viv Richards smashes fastest century in Test match history" (in en). Telegraph.co.uk. https://www.telegraph.co.uk/sport/cricket/international/england/4613508/Sir-Viv-Richards-smashes-fastest-century-in-Test-match-history.html. 
 14. fastest hundreds
 15. "McCullum scores fastest hundred in Test history" (in en). Cricinfo. http://www.espncricinfo.com/new-zealand-v-australia-2015-16/content/story/974457.html. 
 16. "Records | Test matches | Batting records | Highest strike rate in an innings | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/content/records/284192.html. 
 17. "Records | One-Day Internationals | Batting records | Fastest to 1000 runs | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/content/records/283174.html. 
 18. "Highest ODI scores at each batting position". cricinfo.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விவியன்_ரிச்சர்ட்ஸ்&oldid=3571839" இலிருந்து மீள்விக்கப்பட்டது