ஜாகிர் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாகீர் கான்
Zaheer khan 72.jpg
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
பட்டப்பெயர் ஷக், ஷிப்பி அண்ட் ஷிப்பி [1]
உயரம் 5 ft 11 in (1.80 m)
வகை பந்து வீச்சாளர்
துடுப்பாட்ட நடை வலது கை
பந்துவீச்சு நடை இடது கை விரைவு வீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 231) 10 நவம்பர், 2000: எ வங்காளதேசம்
கடைசித் தேர்வு 14 பெப்ரவரி, 2014: எ நியூசிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 133) 3 அக்டோபர், 2000: எ கென்யா
கடைசி ஒருநாள் போட்டி 4 ஆகஸ்டு, 2012:  எ இலங்கை
சட்டை இல. 34
முதல் இ20ப போட்டி (cap 5) 1 டிசம்பர், 2006: எ தென்னாப்பிரிக்கா
கடைசி இ20ப போட்டி 2 அக்டோபர், 2012:  எ தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1999/00–2005/06 பரோடா
2004 சர்ரே மாகாணத் துடுப்பாட்ட அணி
2006 வோர்செச்டர்ஷயர்
2006–2014 மும்பை
2008, 2011–2013 பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
2009–2010, 2014 மும்பை இந்தியன்ஸ்
2015–2017 டெல்லி டேர்டெவில்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுத் துடுப்பாட்டம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்பன்னாட்டு இருபது20முதல்தரத் துடுப்பாட்டம்
ஆட்டங்கள் 92 200 17 253
ஓட்டங்கள் 1,230 792 13 1047
துடுப்பாட்ட சராசரி 11.94 12.00 6.50 12.17
100கள்/50கள் 0/3 0/0 0/0 0/0
அதிகூடிய ஓட்டங்கள் 75 34* 9 43
பந்து வீச்சுகள் 18,785 10,097 352 12,745
வீழ்த்தல்கள் 311 282 17 357
பந்துவீச்சு சராசரி 32.95 29.44 26.35 29.07
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 11 1 0 1
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 1 0 0 0
சிறந்த பந்துவீச்சு 7/87 5/42 4/19 5/42
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 19/– 43/– 2/– 57/–

25 December, 2016 தரவுப்படி மூலம்: ESPNCricinfo

ஜாகீர் கான் (Zaheer Khan (பிறப்பு:7 அக்டோபர், 1978)[2] என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் 2000 முதல் 2014 வரை இந்திய அணியில் விளையாடினார். கபில்தேவிற்கு அடுத்தபடியாக இந்திய அணியின் இரண்டாவது வெற்றிகரமான விரைவு வீச்சாளராகத் திகழ்ந்தார். இவர் பரோடா அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். இவர் மட்டையாளர் நிற்கும் வரைகோட்டிற்கருகே வீசப்படும் பந்து (யார்க்கரை ) துல்லியமாகவும், விரைவாகவும் வீசுவதன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.[3]

2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர்களுள் இவரும் ஒருவர். இவர் விளையாடிய 9 போட்டிகளில் 21 இலக்குகளை எடுத்தார். 2011 ஆம் ஆண்டு இந்திய அரசின் விளையாட்டு விருதுகளில் இரண்டாவது பெரிய விருதாகக் கருதப்படும் அருச்சுனா விருதை இந்தியக் குடியரசுத் தலைவரிடம் பெற்றார். இவர் பல முறை காயங்களினால் துன்பமடைந்தார். அந்தக் காராணத்தினால் தான் புரோ ஸ்போர்ட் அண்ட் சர்விசஸ் எனும் சேவை மையத்தினை ஆண்ட்ரூ லிபசுடன் இணைந்து துவங்கினார்.

2008 ஆம் ஆண்டின் சிறந்த வீரர்களுள் ஒருவராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது. அக்டோபர் 2015 இல் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இவர் அறிவித்தார்.[4] இவர் மும்பை துடுப்பாட்ட அணிக்காவும், வோர்செஸ்டெர்ஷயர் அணிக்காகவும் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஜாகீர் கான் அக்டோபர் 7,1978 இல் ஸ்ரீராம்பூர், மகாராட்டிரத்தில் பிறந்தார். இவரின் தந்தை பக்தியார் கான், தாய் ஷகியா. இவருக்கு சீசான் எனும் மூத்த சகோதரரும் , அனீஸ் எனும் இளைய சகோதரரும் உள்ளனர். இவர் நியூ மராத்தி துவக்கப் பள்ளியிலும், பின் கே. ஜே. சோமையா மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். இவர் லோகல் ரெவென்யூ காலனி துடுப்பாட்ட சங்கத்திற்காக விளையாடினார். பின் புனேவில் தனது துடுப்பாட்ட வாழ்க்கையைத் துவக்கினார்.[5]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 282 இலக்குகளை வீழ்த்தியுள்ளார். இவர் ஒரு இலக்குகளை வீழ்த்துவதற்கு 29 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். மேலும் 4 இலக்குகளை 6 முறைகள் வீழ்த்தியுள்ளார். இதில் நான்கு முறை சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராக வீழ்த்தியுள்ளார். மேலும் அந்த அணிக்கு எதிராக மட்டும் 32 இலக்குகளை வீழ்த்தியுள்ளார். ஒரு இலக்கிற்கு 17.46 ஓட்டஙகளை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் ஆசீஷ் நேராவுடன் பந்துவீசி இந்திய அணியை இறுதிப் போட்டியில் பங்கேற்கச் செய்தார். இந்தத் தொடரின் அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நான்காவது இடம் பெற்றார்.இவர் 11 போட்டிகளில் விளையாடி 18 இலக்குகளை வீழ்த்தினார். ஒரு இலக்கிற்கு 20 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார்.[6]

2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டித் தொடரில் இந்திய அணி வெற்றி பெற முக்கியக் காரணமாக விளங்கினார். இந்தத் தொடரில் அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் சாகித் அஃபிரிடியுடன் முதலிடத்தில் உள்ளார். இருவரும் தலா 21 இலக்குகள் வீழ்த்தினர். இதன்மூலம் துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடர்களில் அதிக இலக்குகள் எடுத்த இந்திய வீரர் ஜவகல் ஸ்ரீநாத்தின் சாதனையை சமன் செய்தார். இந்தச் சாதனையை 34 போட்டிகள் ஸ்ரீநாட்த் பெற்றார். ஆனால் 23 போட்டிகளிலேயே ஜாகீர் கான் இந்தச் சாதனையைப் புரிந்தார்.[7]

சான்றுகள்[தொகு]

  1. [1] Cricinfo Magazine
  2. Zaheer Khan, http://www.espncricinfo.com/ci/content/player/30102.html?index=timeline, பார்த்த நாள்: 2018-05-08 
  3. http://www.espncricinfo.com/ci/content/player/30102.html?index=timeline
  4. http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/344697.html
  5. "Wisden Cricketer of the Year 2008 Zaheer Khan". பார்த்த நாள் 1 December 2013.
  6. "ICC Cricket World Cup, 2002/03 Bowling – Most Wickets". ESPNcricinfo (17 June 2008). பார்த்த நாள் 2010-12-20.
  7. "ICC Cricket World Cup, 2010/11 / Records / Most wickets". ESPNcricinfo. பார்த்த நாள் 2011-07-15.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாகிர்_கான்&oldid=2760797" இருந்து மீள்விக்கப்பட்டது