உள்ளடக்கத்துக்குச் செல்

ஜவகல் ஸ்ரீநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜவகல் ஸ்ரீநாத்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 67 229
ஓட்டங்கள் 1009 883
மட்டையாட்ட சராசரி 14.21 10.63
100கள்/50கள் -/4 -/1
அதியுயர் ஓட்டம் 76 53
வீசிய பந்துகள் 2517.2 1989.1
வீழ்த்தல்கள் 236 315
பந்துவீச்சு சராசரி 30.49 28.08
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
10 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 n/a
சிறந்த பந்துவீச்சு 8/86 5/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
22/- 32/-
மூலம்: [1], டிசம்பர் 22 2005

ஜவகல் ஸ்ரீநாத் (Javagal Srinath (pronunciation; பிறப்பு: ஆகத்து 31 1969), இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் தற்போது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் நடுவர் (துடுப்பாட்டம்) ஆவார். இந்தியத் துடுப்பாட்ட விரைவு வீச்சாளர்களில் ஒருவராகவும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 300 இலக்குகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[1]

ஜவகல் ஸ்ரீநாத் துவக்கப் பந்துவீச்சாளராக இருந்தார். கபில்தேவிற்கு அடுத்தபடியாக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 200 இலக்குகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் ஆவார். இவரும் கபில்தேவும் இணைந்து சுமார் 12 ஆண்டுகள் பந்துவீசினர். இவர் 315 இலக்குகளை ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் இலக்குகளை வீழ்த்தினார். இதன்மூலம் அனில் கும்ப்ளேவிற்கு அடுத்தபடியாக அதிக இலக்குகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சளர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். கும்ப்ளே 337 இலக்குகள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். விரைவாக 100 இலக்குகள் வீழ்த்தி சாதனை படைத்தார்.

1992, 1996, 1999 மற்றும் 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் 44 இலக்குகளை வீழ்த்தினார்.[2] இதன் மூலம் துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். இதன்பின் ஜாகிர் கான் 2003, 2007 மற்றும் 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பையில் விளையாடி 44 இலக்குகளை எடுத்து சமன் செய்தார்.[3] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விரைவாக 200, 250, 300 இலக்குகளை வீழ்த்திய இந்தியர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் 150 இலக்குகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். சார்ஜா துடுப்பாட்ட அரங்கத்தில் அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 39 இலக்குகள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். 300 இலக்குகளுக்கு மேல் வீழ்த்தியவர்களின் பட்டியலில் சர்வதேச அளவில் 11 ஆவது வீரராகவும், இந்திய வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இவர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடருக்குப் பின் ஓய்வு பெற்றார். இவர் ஓய்வுபெற்ற போது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் பந்து வீச்சாளருக்கான தரவரிசையில் 701 புள்ளிகள் பெற்று 8 ஆவது இடத்தில் இருந்தார்.

சர்வதேச போட்டிகள்[தொகு]

1991-1992 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 59 ஓட்டங்கள் விட்டுகொடுத்து 3 இலக்குகள் எடுத்தார். பின் இந்தத் தொடரில் 55.30 எனும் சரசரியுடன் 10 இலக்குகள் வீழ்த்தினார். கேப் டவுனில் நடைபெற்ற தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் புதிய பந்தின் மூலம் பந்துவீசிய இவர் 27 ஓவர்கள் வீசி 33 ஓட்டங்கள் வீசி 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தத் தொடரின் முடிவில் 26.08 எனும் சராசரியுடன் 12 இலக்குகளை வீழ்த்தினார்.

சாதனைகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 132 ஓட்டங்கள் கொடுத்து 13 இலக்குகளை வீழ்த்தி உலகசாதனை படைத்தார்.[4] துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் அதிக இலக்குகள் வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். பின் இந்தச் சாதனையானது அனில் கும்ப்ளேவினால் முறியடிக்கப்பட்டது. 300 இலக்குகளுக்கு மேல் வீழ்த்தியவர்களின் பட்டியலில் சர்வதேச அளவில் 11 ஆவது வீரராகவும், இந்திய வீரர்கள் வரிசையில் இரண்டாவது உள்ளார். துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் அதிகமுறை ஆட்டமிழக்காமல் இருந்தவர் எனும் சாதனை படைத்தார். இவர்ய்க்கு அடுத்தபடியாக ஸ்டீவ் வா உள்ளார்.[5]

சான்றுகள்[தொகு]

  1. "Cricket Records-India-ODI-Most Wickets". Cricinfo. Archived from the original on 28 February 2014. பார்க்கப்பட்ட நாள் 5 May 2014.
  2. http://www.rediff.com/sports/1996/2311b.htm
  3. "Cricket Records – World Cup – Most Wickets". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 May 2014.
  4. "Test cricket losing side records". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 March 2017.
  5. "Not out records". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 March 2017.

வெளியிணைப்புகள்[தொகு]

CricInfo Player Profile : ஜவகல் ஸ்ரீநாத்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜவகல்_ஸ்ரீநாத்&oldid=3588248" இலிருந்து மீள்விக்கப்பட்டது