ஆசீஷ் நேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆசீஷ் நேரா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஆசீஷ் நேரா
பிறப்பு 29 ஏப்ரல் 1979 (1979-04-29) (அகவை 38)
தில்லி, இந்தியா
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 17) 24 பிப்ரவரி, 1999: எ இலங்கை
கடைசித் தேர்வு 13 ஏப்ரல், 2004: எ பாக்கிஸ்தான்
முதல் ஒருநாள் போட்டி (cap 117) 21 சூன், 2001: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி 21 சனவரி, 2011:  எ தென்னாபிரிக்கா
சட்டை இல. 64
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1997–நடப்பில் தில்லி
2008 மும்பை இந்தியன்ஸ்
2009–2010 தில்லி டேர்டெவில்ஸ்
2011-நடப்பில் சகாரா புனே வாரியர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுகள் ஒ. ப.து கள் மு.து ப. அ
ஆட்டங்கள் 17 117 78 174
ஓட்டங்கள் 77 140 515 341
துடுப்பாட்ட சராசரி 5.50 6.08 8.30 8.31
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதிக ஓட்டங்கள் 19 24 43 24
பந்து வீச்சுகள் 3447 5609 14829 8406
இலக்குகள் 44 154 257 217
பந்துவீச்சு சராசரி 42.40 31.56 29.87 32.13
சுற்றில் 5 இலக்குகள் 0 2 12 2
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 4 n/a
சிறந்த பந்துவீச்சு 4/72 6/23 7/14 6/23
பிடிகள்/ஸ்டம்புகள் 5/– 17/– 24/– 25/–

22 சனவரி, 2011 தரவுப்படி மூலம்: ESPNcricinfo

ஆசீஷ் நேரா (Ashish Nehra, பிறப்பு: ஏப்ரல் 29, 1979, தில்லி) ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார்.[1] இடதுகை விரைவுப் பந்து வீச்சாளராகிய நேரா 1999ஆம் ஆண்டு பன்னாட்டு அளவில் முதலில் இந்தியத் துடுப்பாட்ட அணியில் இடம்பெற்றார்.[1] தமது முதல் தரத் துடுப்பாட்டத்தைச் சொந்த ஊரான தில்லிக்காக 1997/98 பருவம் முதல் ஆடி வருகிறார்.[1] முதன்முறையாகத் தேர்வுத் துடுப்பாட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொழும்பில் 1999ஆம் ஆண்டில் விளையாடத் தொடங்கினார்.[1] முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தை சிம்பாப்வேயுடன் 2001ஆம் ஆண்டு அராரேயில் துவங்கினார்.[1] தமது முதல் தேர்வுப் போட்டியில் சில பந்துகளிலேயே மாவன் அத்தப்பத்தை வீழ்த்தினார்.[2] அதேபோல ஒருநாள் துடுப்பாட்டத்தின் முதல் ஆட்டத்திலும் இரண்டாவது பந்திலேயே அலிஸ்டர் கேம்பெல்லை வீழ்த்தினார்.[3] தென்னாபிரிக்காவில் நடந்த 2003 உலகக்கிண்ணத்தில் விளையாடி இங்கிலாந்திற்கு எதிராக 23 ஓட்டங்களுக்கு இலக்குகளை வீழ்த்தினார்.[4] பிற உலகக்கிண்ண ஆட்டங்களிலும் சிறப்பாகப் பந்து வீசினார்.

இருப்பினும் இவரது தொடர்ச்சியில்லாத ஆட்டத்திறனாலும் உடற்காயங்களாலும் இந்திய அணியில் நிரந்தரமாக இடம்பெற இயலவில்லை. மேலும் இவரது களத்தடுப்புத் திறன் மிக மோசமான ஒன்றாகக் கருதப்படுகிறது.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "ஆசீஷ் நேரா (ஆங்கிலத்தில்)". ஈ. எசு. பி. என். கிரிக்கின்வோ. பார்த்த நாள் நவம்பர் 14, 2012.
  2. "இலங்கை எதிர் இந்தியா (ஆங்கிலத்தில்)". ஈ. எசு. பி. என். கிரிக்கின்வோ. பார்த்த நாள் நவம்பர் 14, 2012.
  3. "சிம்பாவே எதிர் இந்தியா (ஆங்கிலத்தில்)". ஈ. எசு. பி. என். கிரிக்கின்வோ. பார்த்த நாள் நவம்பர் 14, 2012.
  4. "இங்கிலாந்து எதிர் இந்தியா (ஆங்கிலத்தில்)". ஈ. எசு. பி. என். கிரிக்கின்வோ. பார்த்த நாள் நவம்பர் 14, 2012.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசீஷ்_நேரா&oldid=2235987" இருந்து மீள்விக்கப்பட்டது