கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிருஷ் ஸ்ரீகாந்த்
Cricket no pic.png
இவரைப் பற்றி
முழுப்பெயர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
பட்டப்பெயர் ச்சீகா
பிறப்பு 21 திசம்பர் 1959 (1959-12-21) (அகவை 58)
சென்னை, இந்தியா
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 43) நவம்பர் 27, 1981: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு பெப்ரவரி 1, 1992: எ ஆஸ்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 146) நவம்பர் 25, 1981: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி மார்ச் 15, 1992:  எ தென்னாபிரிக்கா
தரவுகள்
தேர்வுகள்ஒ.ப.து
ஆட்டங்கள் 43 146
ஓட்டங்கள் 2062 4091
துடுப்பாட்ட சராசரி {{{bat avg1}}} {{{bat avg2}}}
100கள்/50கள் {{{100s/50s1}}} {{{100s/50s2}}}
அதியுயர் புள்ளி 123 123
பந்துவீச்சுகள் 36 36
விக்கெட்டுகள் 0 25
பந்துவீச்சு சராசரி {{{bowl avg1}}} {{{bowl avg2}}}
5 விக்/இன்னிங்ஸ் - 2
10 விக்/ஆட்டம் - -
சிறந்த பந்துவீச்சு {{{best bowling1}}} {{{best bowling2}}}
பிடிகள்/ஸ்டம்புகள் {{{catches/stumpings1}}} {{{catches/stumpings2}}}

அக்டோபர் 7, 2009 தரவுப்படி மூலம்: [1]

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்த ஒலிக்கோப்பு பற்றி பலுக்கல் (பிறப்பு திசம்பர் 21, 1959 சென்னை, தமிழ்நாடு, இந்தியா) ஓர் சிறந்த தமிழக துடுப்பாட்ட வீரர். இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவராக பணியாற்றியுள்ள இவர் தற்போது இந்திய துடுப்பாட்ட அணி தேர்வுக் குழுவின் தலைவராக உள்ளார். ஸ்ரீகாந்த் சிறப்பு செயற்பாணியுள்ள துவக்க ஆட்டக்காரர் ஆகும். அவரது நுண்ணிய கண்பார்வையும் வேகமான செயற்திறனும் அவரை ஆற்றல்மிக்க, துல்லியமான, தாக்குகின்ற துடுப்பாட்டத்தை விளையாட வழி வகுத்தன. அவரது இந்த செயற்பாணி ஆட்டம் நளினமாக இல்லாது பலமுறை அவரது வெளியேற்றத்திற்கு காரணமாக அமைந்தாலும் ஓட்டப்புள்ளிகள் வேகமாக ஏறியமையால் பார்வையாளர்களின் மனம்கவர் வீரராகத் திகழ்ந்தார்.

ஆட்ட வரலாறு[தொகு]

  1. அவர் தமது 21ஆம் வயதில் முதல் ஒ.ப.து ஆட்டத்தை இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் 1981ஆம் ஆண்டு துவங்கினார். இருநாட்கள் கழித்து மும்பையில் அதே அணிக்கு எதிராக தமது முதல் தேர்வுத் துடுப்பாட்டத்தைத் துவக்கினார். அவரது ஆட்டத்துணைவராக சுனில் காவஸ்கர் களமிறங்கினார். இருவரின் செயற்பாணியும் முற்றிலும் மாறுபட்டிருந்தது. கவாஸ்கர் இலக்கணப்படி நுட்பத்துடன் ஆடுபவர்;ஸ்ரீகாந்த் பந்துவீச்சைத் தாக்கி சுறுசுறுப்பாக விளையாடுபவர்.கடும் எதிரணிகளிடையிலும் அவரது செயற்பாணியால் சிறந்த துவக்க ஆட்டத்தை வடித்துக் கொடுத்தார்.

இந்தியத் துடுப்பாட்ட அணியில் இடம்பிடித்த ஸ்ரீகாந்த் 1983 புருடென்சியல் உலகக் கோப்பை மற்றும் 1985 பென்சன் & எட்ஜஸ் உலக துடுப்பாட்ட சாதனையாளர் போட்டிகளை வென்ற அணியில் உறுப்பினராக இருந்தார். 1989ஆம் ஆண்டு இந்தியத் துடுப்பாட்ட அணித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிலாந்துடனான ஒ.ப.து போட்டியில் வெற்றி இலக்கு 260ஆக இருக்கும்போது இரண்டு விக்கெட்கள் சரிந்தநிலையில் பந்துவீச்சுக்காரர் சேதன் சர்மாவை வழக்கத்தைவிட முன்னரே விளையாட அனுப்பி வெற்றி கண்டார். பின்னர் பாகிஸ்தான் தொடருக்கும் அணித்தலைவராகச் சென்று நான்கு தேர்வுகளிலும் ஆட்டத்தை சமன் செய்து சாதனை நிகழ்த்தினார். ஆனால் அவரது துடுப்பாட்டம் போதுமான ஓட்டங்களைப் பெற்றுத்தராத நிலையில் தேர்வாளர்கள் சர்ச்சைக்குறிய முறையில் அவரை அணியிலிருந்து விலக்கினர். இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டுவந்தவர் அடுத்த அண்டு மீளவும் விலக்கப்பட்டார். தென்மண்டல அணிக்குக் கூட தேர்ந்தெடுக்காத நிலையில், தமது வயது காரணமாக செயற்திறனின் வேகம் குறைவதை உணர்ந்த ஸ்ரீகாந்த் 1993ஆம் ஆண்டு பன்னாட்டு துடுப்பாட்டங்களிலிருந்து ஓய்வு பெற்றார்.

ஓய்விற்கு பிறகு இந்திய 'ஏ' அணியை பயிற்றுவிக்கும் பொறுப்பை மேற்கொண்டு வெற்றி அடைந்தார்.பல விளையாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வல்லுனராக விமரிசனம் செய்து வருகிறார்.

செப்டம்பர் 27, 2008,அவர் இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[1]

கிருஷ் ஸ்ரீகாந்த் ஆட்டவரலாறு வரைபடம்.

ஸ்ரீகாந்தின் மகன் அனிருத்தும் தமிழ்நாடுத் துடுப்பாட்ட அணியில் விளையாடுகிறார். பெப்ரவரி 18,2008இல் ஸ்ரீகாந்த் இந்திய முதன்மை கூட்டிணைவின் சென்னை சூப்பர் கிங்ஸ் அமைப்பின் நட்சத்திர தூதுவராக அறிவிக்கப்படுள்ளார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mental strength as important as talent - Srikkanth | India Cricket News | கிரிக்இன்ஃபோ.com". Content-eap.cricinfo.com. பார்த்த நாள் 2009-09-23.
  2. "Sport / Cricket : It is Chennai Super Kings". The Hindu (2008-02-19). பார்த்த நாள் 2009-09-23.

புற இணைப்புகள்[தொகு]