ராபின் உத்தப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராபின் உத்தப்பா
Robin Uthappa on the Show.jpg
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ராபின் வேனு உத்தப்பா
பட்டப்பெயர் ராபி
உயரம் 5 ft 7 in (1.70 m)
வகை மட்டையாளர், குச்சக் காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலது கை
பந்துவீச்சு நடை வலது கை
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 165) 15 ஏப்ரல், 2006: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி 14 சூலை, 2015:  எ சிம்பாப்வே
சட்டை இல. 37 (முன்னதாக17)
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2002/03–2016/17 கருநாடகம் துடுப்பாட்ட அணி
2008 மும்பை இந்தியன்ஸ்
2009–2010 பெங்களூர் ராயல்சேலஞ்சர்ஸ்
2011–2013 புனே வாரியர்ஸ்
2014–தற்போது வரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
2017-18 சௌராட்டிரா அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்பன்னாட்டு இருபது20முதல்தரத் துடுப்பாட்டம்அ பிரிவு
ஆட்டங்கள் 46 13 96 145
ஓட்டங்கள் 934 249 6,316 5,090
துடுப்பாட்ட சராசரி 25.94 24.9 40.48 39.15
100கள்/50கள் 0/5 0/1 14/37 2/0
அதிக ஓட்டங்கள் 86 50 162 20
பந்து வீச்சுகள்  –  – 673 5
இலக்குகள்  –  – 12 0
பந்துவீச்சு சராசரி  –  – 34.91 51.20
சுற்றில் 5 இலக்குகள்  –  – 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள்  –  – 0 0
சிறந்த பந்துவீச்சு  –  – 3/26 2/19
பிடிகள்/ஸ்டம்புகள் 15/- 1/- 86/1 68/-

5 சூன், 2014 தரவுப்படி மூலம்: ESPNCricinfo

ராபின் வேனு உத்தப்பா (Robin Venu Uthappa (About this soundpronunciation ; பிறப்பு: நவம்பர் 11, 1985) இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார். இவரது தந்தை வேணு உத்தப்பா ஒரு வளைதடிப் பந்தாட்ட நடுவர். இவர் கருநாடக அணிக்காகவும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் விளையாடிவருகிறார்.

ஏப்ரல் 2006 இல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து துடுப்பாட்ட அணி ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. இதில் ஏழாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார். துவக்கவீரராக களம் இறங்கிய இவர் 86 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இந்திய அறிமுக வீரர் ஒருவர் எடுக்கும் அதிகபட்ச ஓட்டங்கள் எனும் சாதனையைப் படைத்தார்.[1] இவர் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் முறையினால் தி வாக்கிங் அசாசின் எனும் புனைபெயர் கொண்டு அழைக்கப்படுகிறார். 2007 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் இந்தியத் துடுப்பாட்ட அணி வெற்றி பெற மிகமுக்கிய பங்காற்றினார். 2014-2015 ஆம் ஆண்டிகளுக்கான ரஞ்சிக் கோப்பையில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ராபின் உத்தப்பா நவம்பர் 11, 1985 இல் குடகு மாவட்டம், கருநாடகத்தில் பிறந்தார். இவர் பெங்களூர், ஸ்ரீ பகவான் மஹாவீர் ஜெயின் கல்லூரியில் கல்வி பயின்றார்.

இந்தியன் பிரீமியர் லீக்[தொகு]

2008 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். இந்தத்ன் தொடரில் சிறப்பான திறமையை வெளிபடுத்தினார். இவர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய முதல் போட்டியில் 38 பந்துகளில் 48 ஓட்டங்கள் எடுத்தார். இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடிய இவர் 36 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்தார். இதில் ஆறு 4 மற்றும் ஒரு 6 ஓட்டங்களும் அடங்கும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டுவைன் பிராவோவுடன் இணைந்து 123 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 21 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்து முக்கிய போட்டியில் அணியை வெற்றி பெறச் செய்தார்.

2009[தொகு]

2009 ஆம் ஆண்டின் இந்திய பிரீமியர் லீக் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரன போட்டியில் 42 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல்66 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற போட்டிகளில் நிலையான ஆட்டத் திறனை வெளிப்படுத்தத் தவறினார்.

2010[தொகு]

கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்கு எதிரான போட்டியில் 21 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்தார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இரண்டாவது அதிவேக 50 ஓட்டங்கள் இதுவாகும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 68 ஓட்டங்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதுபெற்றார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தார். இந்தத் தொடர் முழுவதும் 14 போட்டிகளில் விளையாடி 374 ஓட்டங்கள் எடுத்தார். 27 ஆறுகள் அடித்துள்ளார். இந்தத் தொடரில் அதிக ஆறுகள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

சான்றுகள்[தொகு]

  1. "Cricinfo – Records – India – One Day Internationals – High scores on debut". பார்த்த நாள் 2007-08-30.

வெளியிணைப்புகள்[தொகு]

கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: ராபின் உத்தப்பா

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபின்_உத்தப்பா&oldid=2720882" இருந்து மீள்விக்கப்பட்டது