இன்சமாம் உல் ஹக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இன்சமாம் உல் ஹக்(Inzamam-ul-Haq (;Punjabi, உருது: انضمام الحق; இந்த ஒலிக்கோப்பு பற்றி pronunciation (பி. மார்ச் 3, 1970) [1] முன்னாள் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் வீரர் மற்றும் தலைவர் ஆவார்[2][3]. இவர் 2003 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை பாக்கித்தான் அணிக்கு தலைவராக இருந்துள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டங்களில் அதிக ஓட்டங்கள் எடுத்துள்ள பாக்கித்தானிய வீரர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பாக்கித்தானிய வீரர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். ஒட்டுமொத்தமாக 10,000 ஓட்டங்களைக் கடந்துள்ள வீரர்களில் ஒருவர் ஆவார்.

1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரின் காலிறுதியில் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதன் மூலம் பரவலாக இவர் அறியப்படுகிறார். பத்தாண்டு காலங்களாக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டங்களில் அணியின் சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தோடு தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். 2007 ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச போட்ட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டத்தில் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனால் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பாக்கித்தான் வீரர்களில் அதிக ஓட்டங்கள் எடுத்த ஜாவெட் மியன்டாட் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பினை இழந்தார். ஓய்வு பெற்ற பிறகு இந்தியன் கிரிக்கெட் லீக் தொடரின் முதல்பருவத்தில் ஐதராபாத் ஹீரோஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின் இரண்டாவது ஆண்டில் லாஹூர் பாட்ஷா'ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த அணியில் முழுவதும் பாக்கித்தான் அணி வீரர்களே இருந்தனர்.

ஏப்ரல் 2016 ஆம் ஆண்டில் அணி வீரர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக இவரை பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் நியமனம் செய்தது.

சர்வதேச போட்டிகள்[தொகு]

1991 ஆம் ஆண்டில் பாக்கித்தானில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் 20 ஓட்டங்களும் இரண்டாவது போட்டியில் 60 ஓட்டங்களும் எடுத்து சிறப்பான துவக்கத்தை அளித்தார். பின் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது முதல் நூறினைப் பதிவு செய்தார். நான்கு போட்டிகள் கொண்ட அந்தத் தொடரில் 326 ஓட்டங்கள் எடுத்தார்.

இன்சமாம் உல் ஹக்கை ,அன்றைய துடுப்பாட்ட அணித் தலைவராக இருந்த இம்ரான் கான் 1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்திற்கு தேர்வு செய்தபோது இவரின் பெயர் பலரும் அறியாததாக இருந்தது. இவர் பல வரிசைகளில் விளையாடினாலும் ஒரு சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தவில்லை. ஆனால் ஓக்லாந்தில் ,நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான அரையிறுதியில் இவர் எழுச்சி கண்டார். நியுசிலாந்து அணி 262 ஓட்டங்களை இலக்காக நிர்ணயம் செய்திருந்தது. சிறப்பாக விளையாடிய இவர் 37 பந்துகளில் 60 ஓட்டங்கள் எடுத்து அணி இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு உதவினார்.[4][5] இந்தப் போட்டியானது சிறப்பான துடுப்பாட்டப் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[6]

மார்ச் 27, 1993 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியின் போது இறுதிவரை ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்கள் எடுத்து முதன்முதலாக தொடரை வெல்வதற்கு உதவினார்.[7]

சான்றுகள்[தொகு]

  1. "Inzamam-ul-Haq: Profile". Cricinfo.com. பார்த்த நாள் 18 July 2010.
  2. "Inzamam Ul-Haq – Pakistan's Greatest Ever Batsman? – Well Pitched – a cricket blog".
  3. "Legend Greatest Xi – Cricket World Cup 2015 – ICC Cricket – Official Website". www.icc-cricket.com. மூல முகவரியிலிருந்து 2 April 2015 அன்று பரணிடப்பட்டது.
  4. New Zealand v Pakistanகிரிக்இன்ஃபோ. Retrieved 23 August 2007
  5. Inzi announces his arrivalகிரிக்இன்ஃபோ. Retrieved 23 August 2007
  6. "A complete batsman". Sportstar. மூல முகவரியிலிருந்து 27 October 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 18 July 2010.
  7. "3rd ODI: West Indies v Pakistan at Port of Spain, Mar 27, 1993 | Cricket Scorecard". ESPN Cricinfo. பார்த்த நாள் 2 August 2013.

வெளியிணைப்புகள்[தொகு]

Dazzling, delicate; a reassuring presence – Cricinfoவார்ப்புரு:ஓரு நாள் கிரிக்கெட்டில் 10000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்சமாம்_உல்_ஹக்&oldid=2765853" இருந்து மீள்விக்கப்பட்டது