சாயிட் அன்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாயிட் அன்வர்
பிறப்பு6 செப்டம்பர் 1968 (age 51)
கராச்சி
படித்த இடங்கள்
  • NED University of Engineering and Technology

சாயிட் அன்வர் (Saeed Anwarஉருது: سعید انور, செப்டம்பர் 6, 1968) பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆரம்பத்துடுப்பாளர் மற்றும் தலைவர் ஆவார். அன்வர் ஓர் இடதுகைத் துடுப்பாளர். கராச்சி அணி சார்பாக முதற்தரப் போட்டிகளில் ஆடத்தொடங்கிய அன்வர் 1990 இல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக பைசலாபாத்தில் தன் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். இவர் 189 முதல் 2003 ஆம் ஆண்டுகள் வரை சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பாக்கித்தானிய வீரர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 20 நூறுகள் அடித்துள்ளார். இதன்மூலம் அப்போது அதிக நூறுகள் அடித்த பாக்கித்தானிய வீரர்களில் முதலிடம் பிடித்தார்.[1][2] இவர் 55 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாஅடி 4052ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 11 நூறுகள் அடங்கும்.இவரின் சராசரி 45.52 ஆகும். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் 8842 ஓட்டங்களை 39.21 எனும் சராசரியில் எடுத்தார்.

1990 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். பின் 1994 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான 3 ஆவது துடுப்பாட்டப் போட்டியில் இவர் 169 ஓட்டங்கள் எடுத்தார். பின் 1998 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதிவரை ஆட்டமிழக்கமல் 188* ஓட்டங்கள் சேர்த்தார். இதன்மூலம் தேர்வுப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்த பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார், 1993-1994 இல் சார்ஜா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். மே 22, 1997 இல் இந்தியாவுக்கெதிரான போட்டியில் 147 பந்துவீச்சுக்களை எதிர்கொண்டு 194 ஓட்டங்களைப் பெற்றமையே அச்சாதனையாகும். அப்போது இதுவே ஒருநாள் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் எடுக்கப்பட்ட அதிக அளவு ஓட்டங்களாக இருந்தது. அதன் பின்னர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் இச்சாதனையை முறியடித்தனர். ஒருநாள் போட்டிகளில் ஒரே போட்டியில் அதிக ஓட்டங்கள் சேர்த்தவர்களின் பட்டியலில் தற்போது இவர் ஆறாவது இடம் பிடித்துள்ளார்.[3][4].இவர் மூன்றுமுறை துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடர்களில் விளையாடியுள்ளார். இவர் 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 7 தேர்வுப் போட்டிகளுக்கு தலைமை தாங்கினார். ஆகஸ்டு 2003 இல் சர்வதேச போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார்.

ஒருநாள் போட்டிகள்[தொகு]

சனவரி 1989 இல் மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இவர் 3 ஓட்டங்களை எடுத்தார்.[5] டிசம்பர் 1989 இல் குஜ்ரன்வாலாவில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 32 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து பாக்கித்தான் அணி வெற்றி பெற உதவினார்.[6]

அன்வர் மொத்தம் 247 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் 8842 ஓட்டங்களை 39.21 எனும் சராசரியில் எடுத்தார்.[1] ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்த பாக்கித்தானிய வீரர்களில் இவர் மூன்றாமிடம் பிடித்துள்ளர். முதல் இரண்டு இடங்களில் இன்சமாம் உல் ஹக் மற்றும் முகம்மது யூசுப் ஆகியோர் உள்ளனர்.[7] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 20 நூறுகள் அடித்துள்ளார். இதன்மூலம் அப்போது அதிக நூறுகள் அடித்த பாக்கித்தானிய வீரர்களில் முதலிடம் பிடித்தார்.[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Players – Pakistan – Saeed Anwar". ESPNcricinfo. பார்த்த நாள் 29 May 2012.
  2. 2.0 2.1 "Cricket Records – Pakistan– One-Day Internationals – Most hundreds". ESPNcricinfo. பார்த்த நாள் 29 May 2012.
  3. "Sachin break Anwar's Record". Cricketworld4u.com. மூல முகவரியிலிருந்து 6 May 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 November 2010.
  4. PTI (24 February 2010). "Sachin becomes first batsman to score 200 in an ODI". The Times of India. பார்த்த நாள் 24 November 2010.
  5. "Benson & Hedges World Series – 6th match". ESPNcricinfo. பார்த்த நாள் 29 May 2012.
  6. "India in Pakistan ODI Series – 2nd ODI". ESPNcricinfo. பார்த்த நாள் 7 August 2012.
  7. "Records / Pakistan / One-Day Internationals / Most runs". ESPNcricinfo. பார்த்த நாள் 9 August 2012.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாயிட்_அன்வர்&oldid=2733435" இருந்து மீள்விக்கப்பட்டது