தப்லீக் ஜமாஅத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tablighi Jamaat
تبلیغی جماعت
2009 Malaysian Tablighi Ijtema.jpg
2009 ஆண்டின் மலேசிய தப்லீக் ஜமாஅத் கூட்டம்
நிறுவனர்
முஹம்மது இல்யாஸ் (ரஹ்)
பின்பற்றுவோர் கணிசமாக உள்ள இடங்கள்
 வங்காளதேசம்
 இந்தியா[1]
 பாக்கித்தான்
 ஐக்கிய இராச்சியம்
 இந்தோனேசியா[2]
 மலேசியா
 தென்னாப்பிரிக்கா
 ஐக்கிய அமெரிக்கா
 இலங்கை
சமயங்கள்
சன்னி இசுலாம்
புனித நூல்கள்
குர் ஆன்
மொழிகள்
வழிபாடு: அரபு மொழி பிரச்சாரம்: பிராந்திய மொழிகள்

தப்லீக் ஜமாஅத் (உருது: تبلیغی , இந்தி: तबलीग़ी ), இது முஸ்லிம்களுக்கு மத்தியில் மட்டும் பிரச்சாரம் செய்யும் ஓர் இஸ்லாமிய இயக்கமாகும், இதனை மவுலனா முஹம்மது இல்யாஸ் (ரஹ்) அவர்கள் துவங்கினார்கள். ‌‌தப்லீக் ஜமாஅத் இறுதித் தூதர் முஹம்மது நபியின் காலத்தில் இருந்ததைப் போலவே முஸ்லிம்கள் இஸ்லாத்தை பின்பற்றுமாறு பிரச்சாரம் செய்கிறது. இது 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க இஸ்லாமிய மத இயக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் தலைமையகம் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த அமைப்பு இன்று 150 நாடுகளில் பரவியுள்ளது. இந்த ஜமாஅத் இந்தியா, பாகித்தான், வங்காளம் போன்ற நாடுகளை மையமாகக் கொண்டுள்ளது.

இந்திய சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவில் முஸ்லீம்களை விட இந்துக்கள் அதிகமாக இருக்கும் கால கட்டத்தில் முஸ்லீம்களிடத்தில் தொழுகையில்லாமல், இந்துக்களுடைய கலாசாரத்தை முஸ்லீம்கள் சிறிது சிறிதாக பின்பற்ற ஆரம்பித்தார்கள். இதனைக்கண்ட மௌலான இல்யாஸ் (ரஹ்) அவர்கள் கவலையினால் "முஸ்லீம்கள் முஸ்லீமாக வாழவேண்டும் ,அவர்களை பள்ளியின் பக்கம் ஒன்றிணைக்க இணைக்கவேண்டும்" என நினைத்துள்ளார்.

அதற்காக 1926- ல் தொடங்கப்பட்டது தான் இந்த தப்லீக் ஜமாத் . "தப்லீக் ஜமாத்" என்பதற்கு "நம்பிக்கையை வலுப்படுத்த வந்த சமுதாயம்" என்று பொருள் காணப்படுகிறது.1946- ல் அமெரிக்கா, ஆசியா, மலேசியா இதைப்போன்ற நாடுகளுக்கும் தப்லீக் ஜமாத் விரிவடைந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Khalid Hasan (2006-08-13). "Tableeghi Jamaat: all that you know and don’t". Daily Times. Archived from the original on 2012-12-21. https://archive.today/20121221120721/http://www.dailytimes.com.pk/default.asp?page=2006%5C08%5C13%5Cstory_13-8-2006_pg3_4. பார்த்த நாள்: 2010-01-21. 
  2. Rotar, Igor (June 23, 2007). "Pakistani Islamic Missionary Group Establishes a Strong Presence in Central Asia". EurasiaNet. 2009-01-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-11-20 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தப்லீக்_ஜமாஅத்&oldid=3557081" இருந்து மீள்விக்கப்பட்டது