பைசலாபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பைசலாபாத்
فیصل آباد
லியால்பூர்
மாநகரம் & பைசலாபாத் மாவட்டத் தலைநகரம்
Clock Tower Faisalabad by Usman Nadeem.jpg
Faisalabad, the City of Textile.jpg Gurdwara-School inner front.JPG
நாடு, உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) பாக்கித்தான்
மண்டலம்பஞ்சாப் (பாக்கிஸ்தான்)
மாவட்டம்பைசலாபாத் மாவட்டம்
பழைய பெயர்லியால்பூர்
ஆட்சி மொழிஉருது
தாய்மொழிபஞ்சாபி மொழி
முதல் குடியிருப்பு1892
தோற்றுவித்தவர்சர். சார்லசு ஜேம்சு லியால்
அரசு[1]
 • வகைமாவட்ட நகரம்
 • நிர்வாகம்பைசலாபாத் மாவட்டம்
 • மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிநூர்-உல்-அமின் மெங்கல்
பரப்பளவு[2]
 • மாநகரம் & பைசலாபாத் மாவட்டத் தலைநகரம்1,300 km2 (490 sq mi)
 • நிலம்840 km2 (325 sq mi)
 • நீர்430 km2 (165 sq mi)
 • Metro5,860 km2 (2,261 sq mi)
ஏற்றம்[3]184 m (605 ft)
மக்கள்தொகை (2014)[4]7,480,765
 • தரவரிசைபாக்கித்தானில் மூன்றாவது இடம்
 • அடர்த்தி927/km2 (2,400/sq mi)
இனங்கள்பைசலாபாத்தினர்
நேர வலயம்பாக்கித்தான் நியமநேரம் (PST) (ஒசநே+5)
 • கோடை (பசேநே)பாக்கித்தான் நியமநேரம் (ஒசநே+4)
சிப் குறியீடு38000
தொலைபேசி குறியீடு041
வாகனப் பதிவுஆங்கில எழுத்து "எப்"-ல் ஆரம்பித்து மூன்று சீரற்ற எழுத்துகள் (உதாரணம் FDA 1234)
இணையதளம்www.faisalabad.gov.pk

பைசலாபாத் (Faisalabad) /fɑːɪsɑːlˌbɑːd/ (முன்பு லியால்பூர்) கராச்சி, லாகூர் ஆகிய மாநகரங்களுக்குப் பிறகு பாக்கித்தானில் உள்ள மூன்றாவது பெரிய மக்கள் தொகைக் கொண்ட பெருநகரமாகும்[5]. பைசலாபாத், பஞ்சாப் (பாக்கிஸ்தான்) மாகாணத்தில் லாகூர் நகரத்திற்கு பிறகு உள்ள இரண்டாவது பெரிய நகரமும், பெரும் தொழிற்சாலை மையமாகும்[6]. பைசலாபாத், பண்டையப் பிரிட்டானிய இந்தியாவில் முதலாவதாகத் திட்டமிடப்பட்ட நகரங்களுள் ஒன்றாகும்[7]. 2025 ஆம் ஆண்டு பைசலாபாத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 87 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது[8]. இந்நகரம் பாக்கித்தானின் மான்செசுடர் என்று அழைக்கப்படுகிறது[9]. பைசலாபாத், பாக்கித்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவிகிதத்திற்கும் மேலாகப் பங்களிக்கிறது[10].

வேளாண்மைப் பல்கலைக்கழகம், அரசு கல்லூரிப் பல்கலைக்கழகம், அயூப் வேளாண்மை ஆய்வு மையம், தேசிய துகிலியல் பல்கலைக்கழகம் ஆகிய உயர்க்கல்வி மையங்கள் பைசலாபாத்தில் உள்ளன[11]. இக்பால் விளையாட்டரங்கத்தில் பைசலாபாத் ஓநாய்கள் என்னும் பெயரில் தனிப்பட்ட துடுப்பாட்ட அணியினை பைசலாபாத் கொண்டுள்ளது[12]. மேலும், அனைத்துலக அளவில் போட்டியிடக்கூடிய தரத்தில் பலதரப்பட்ட விளையாட்டு (உதாரணமாக, வளைகோற் பந்தாட்டம், மேடைக் கோற்பந்தாட்டம்) குழுக்கள் பைசலாபாத்தில் உள்ளன[13][14].

பைசலாபாத்தைச் சுற்றியுள்ள ஊரகத்தில் செனாப் ஆறினால் பாசனம்பெறும் பகுதிகளில் பருத்தி, கோதுமை, கரும்பு, காய்கறி, பழம் ஆகியனப் பயிரிடப்படுகின்றன. சீனி, மாவு, எண்ணெய் வித்துகளைப் பதப்படுத்தும் ஆலைகள், தொடருந்து பழுது பார்க்கும் முக்கியப் பணிமனைகள், பொறியியல் பணிநிலையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய தொழிற்சாலை மையமாக பைசலாபாத் திகழ்கிறது. சூப்பர் பாசுபேட்டுகள், பருத்தி மற்றும் பட்டு துணிகள், உள்ளாடைகள், சாயம், வேதித் தொழிற்துறை, குளிர் குடிமங்கள், பல்வேறு துணிவகைகள், காகிதம், அச்சுத் தொழில், வேளாண்மைக் கருவிகள், நெய் ஆகியவற்றை பெருமளவில் உற்பத்தி செய்யும் நகரமாக பைசலாபாத் விளங்குகிறது. இங்கு ஒரு உலர் துறைமுகமும்[15], பன்னாட்டு வானூர்தி நிலையமும் உள்ளன.

இடப்பெயராய்வியல்[தொகு]

இந்நகரத்திற்கு லியால்பூர் என்னும் பெயர் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில் வைக்கப்பட்டது. பஞ்சாபின் அப்போதைய துணைநிலை ஆளுநர் சர். சார்லசு ஜேம்சு லியால் அவர்களின் பெயர் இந்நகரத்திற்குப் பிரித்தானியர்களால் சூட்டப்பட்டது[16]. அவரின் குடும்பப் பெயரான "லியால் " என்பதையும், நகரம் என்பதற்கு இணையான சமசுகிருதச் சொல்லான "பூர்" என்பதையும்[17] இணைத்து உருவாக்கப்பட்டது. 1977 -ஆம் ஆண்டு[18] பாக்கித்தானிய அரசு லியால்பூர் நகரத்தை பாக்கித்தானுக்குப் பல வழிகளிலும் பொருளாதார உதவிகளைப் புரிந்த சவூதிஅரேபிய மன்னர் பைசல் அவர்களைக் கௌரவிக்கும் வண்ணமாகப் பைசலாபாத் என்று பெயர் மாற்றம் செய்தது[19].

தட்பவெப்ப நிலை[தொகு]

கோப்பென் காலநிலை வகைப்பாட்டின்படி பைசலாபாத் பாலைவனத்தின் காலநிலையைக் கொண்டுள்ளது[20]. இம்மாவட்டத்தின் தட்பவெப்பநிலை உச்ச அளவுகளுக்குச் செல்லும் வண்ணம் உள்ளது: கோடைக்காலத்தில் அதிகளவு (50°செ) வெப்பநிலையும், குளிர் காலத்தில் குறைந்த அளவு (-2°செ) வெப்பநிலையும் நிலவுகிறது. கோடைக்காலத்தில் பைசலாபாத்தில் சராசரியான அதிகளவு வெப்பநிலை 39°செ, குறைந்தளவு வெப்பநிலை 27°செ; குளிர் காலத்தில் சராசரியான அதிகளவு வெப்பநிலை 17°செ, குறைந்தளவு வெப்பநிலை 6°செ என உள்ளது.

ஏப்பிரல் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை கோடைக்காலமாக உள்ளது: மே, சூன், சூலை ஆகிய மாதங்கள் மிகவும் வெப்பமான காலநிலை உள்ள மாதங்களாகும். நவம்பரிலிருந்து மார்ச் மாதம் வரை குளிர்க்காலமாக உள்ளது. திசம்பர், சனவரி, பிப்ரவரி மாதங்கள் மிகவும் குளிரான காலநிலை உள்ள மாதங்களாகும். பைசலாபாத்தில் சராசரியான ஆண்டு மழைப்பொழிவு 300 மி.மீ. அளவே உள்ளது. இதில் தோராயமாகப் பாதியளவு மழை சூலை, ஆகத்து மாதங்களில் பொழிகிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், பைசலாபாத்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 19.4
(66.9)
22.4
(72.3)
27.3
(81.1)
33.8
(92.8)
49.5
(121.1)
42.3
(108.1)
40.3
(104.5)
36
(97)
33.6
(92.5)
27.5
(81.5)
21.8
(71.2)
தினசரி சராசரி °C (°F) 11.9
(53.4)
14.9
(58.8)
19.9
(67.8)
25.9
(78.6)
34
(93)
32.3
(90.1)
31.6
(88.9)
30.1
(86.2)
25.6
(78.1)
18.9
(66)
13.7
(56.7)
தாழ் சராசரி °C (°F) 4.4
(39.9)
7.4
(45.3)
12.6
(54.7)
18.1
(64.6)
27.4
(81.3)
27.4
(81.3)
26.9
(80.4)
24.2
(75.6)
17.6
(63.7)
10.4
(50.7)
5.7
(42.3)
பொழிவு mm (inches) 14
(0.55)
15
(0.59)
21
(0.83)
14
(0.55)
26
(1.02)
102
(4.02)
91
(3.58)
33
(1.3)
6
(0.24)
3
(0.12)
8
(0.31)
ஆதாரம்: Climate-Data.org, altitude: 188 m[20]

மேற்கோள்கள்[தொகு]

 1. Correspondent (நவம்பர் 1, 2013). "Mengal Takes Charge". The Express Tribune. பார்த்த நாள் 2013-11-27.
 2. 2.0 2.1 "US Gazetteer files: 2010, 2000, and 1990". United States Census Bureau (2011-02-12). பார்த்த நாள் 2011-04-23.
 3. "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை (2007-10-25). பார்த்த நாள் 2008-01-31.
 4. http://phonebookoftheworld.com/faisalabad
 5. "The Faisalabad Serena Hotel". Serena Hotels. பார்த்த நாள் 2014-08-22.
 6. Faisalabad: Regional Profile by The Faisalabad Chamber of Commerce & Industries
 7. "The City Pakistan, Profile by Government College University". மூல முகவரியிலிருந்து 2015-04-24 அன்று பரணிடப்பட்டது.
 8. Faisalabad city: textile and environment
 9. Jaffrelot, Christophe (2002). Pakistan: Nationalism Without A Nation. Zed Books. பக். 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84277-117-4. http://books.google.co.uk/books?id=I2avL3aZzSEC&pg=PA57. 
 10. https://upload.wikimedia.org/wikipedia/commons/1/1d/Regional_Profile,Faisalabad.pdf
 11. The Faisalabad Regional Report, FCC1
 12. http://www.espncricinfo.com/pakistan/content/ground/58927.html Iqbal Stadium stats
 13. http://www.thenewstribe.com/2015/04/30/pakistani-cueist-hamza-akbar-wins-asian-snooker-championship/ Pakistani cueist Hamza Akbar wins Asian Snooker Championship
 14. http://www.pakistantoday.com.pk/2012/11/08/sports/punjab-international-sports-festival-begins/
 15. https://upload.wikimedia.org/wikipedia/commons/1/1d/Regional_Profile,Faisalabad.pdf Dry Port Trust: Regional Profile
 16. Integrated Slums Development Programme (ISDP) (மார்ச்சு 2001). Faisalabad City Profile and Selection of Wards. 
 17. http://spokensanskrit.de/index.php?tinput=pur&script=&direction=SE&link=yes Translation of the word, Pur
 18. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2015-11-07 அன்று பரணிடப்பட்டது.
 19. "A History of Faisalabad City". The Faisalabad Chamber of Commerce & Industry. பார்த்த நாள் 8 நவம்பர் 2015.
 20. 20.0 20.1 "Climate: Faisalabad – Climate graph, Temperature graph, Climate table". Climate-Data.org. பார்த்த நாள் 7 செப்டம்பர் 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசலாபாத்&oldid=3252498" இருந்து மீள்விக்கப்பட்டது