செனாப் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செனாப் ஆறு
Chenab.png
செனாப் அமைவிடம் [1]
முடியுமிடம்சங்கமம் சத்லஜ் ஆறுடன் பஞ்சநாடு ஆறு தோற்றம்]]
29°20′57″N 71°1′41″E / 29.34917°N 71.02806°E / 29.34917; 71.02806ஆள்கூறுகள்: 29°20′57″N 71°1′41″E / 29.34917°N 71.02806°E / 29.34917; 71.02806
நீளம்960 km (600 mi)approx.
பஞ்சி பள்ளத்தாக்கில் சந்திரபாகா ஆறு

செனாப் ஆறு (Chenab River) இந்தியா மற்றும் பாக்கித்தான் நாடுகளில் ஓடுகின்ற ஒரு முக்கியமான ஆறாகும். பஞ்சாப் மண்டலத்தில் ஓடும் முக்கியமான ஐந்து ஆறுகளில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் லாகவுல் மற்றும் சிபிதி மாவட்டத்தில் இமயமலையின் மேற்புறத்தில் செனாப் ஆறு தொடங்குகிறது. சம்மு காசுமீர் மாநிலத்தின் சம்மு மண்டலம் வழியாகப் பாய்ந்து செனாப் ஆறு பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் சமவெளிகளில் நுழைகிறது. டிரிமு என்ற இடத்தில் செனாப்புடன் சீலம் ஆறு இணைகிறது. அகமதுபூர் சையல் என்னுமிடத்தில் ராவி ஆறும் இணைகிறது. பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்திற்கு தெற்கு பகுதியிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க உக்சு செரிப் நகருக்கு அருகில் செனாப் ஆறு சத்லச் ஆற்றுடன் இணைந்து பஞ்சநாட்டு (ஐந்து ஆறுகள்) ஆறாக பெயர் பெற்று சிந்து ஆற்றுடன் இணைகிறது. பியாசு ஆறானது சத்லச் ஆற்றுடன் இந்திய பஞ்சாபில் இணைகிறது. இதன் நீளம் 960 கிமீ ஆகும். இந்திய பாக்கித்தான் நாடுகளுக்கிடையில் கையெழுத்தான சிந்து நதிநீர் உடன்படிக்கையின் அடிப்படையில் செனாப் ஆற்றின் நீர் பாக்கித்தானுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது[1][2].

சந்திரா, பாகா என்ற இரண்டு நதிகளின் சங்கமத்தால் செனாப் ஆறு தோன்றுகிறது. இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் லாகவுல் மற்றும் சிபிதி மாவட்டத்தில் கீலாங்கு நகருக்கு தென்மேற்கில் எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தண்டியில் இவ்விரண்டு நதிகளும் சங்கமிக்கின்றன.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள மலைக் கணவாயான பாரா-லாச்சா கணவாய்க்கு கிழக்கே சில கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள சூர்யா தால் ஏரியிலிருந்து பாகா நதி உருவாகிறது. சந்திரா நதியும் அதே கணவாய்க்கு கிழக்கே பனிப்பாறைகளிலிருந்து உருவாகிறது. இவ்விரு நதிகளின் தண்ணீரை பிரிக்கும் செயல்பாட்டிலும் இக்கணவாய்க்குப் பங்கு உண்டு. சந்திரா நதி பாகா நதியுடன் சங்கமிப்பதற்கு முன்பாக 115 கிலோமீட்டர் அல்லது 71 மைல்கள் தொலைவை கடந்து செல்கிறது. பாகா நதியும் தண்டியில் சங்கமிப்பதற்கு முன்பு குறுகலான மலைகளுக்கிடையில் உள்ள வழிகளில் 60 கிலோமீட்டர் தொலைவு அல்லது 37 மைல்களை கடந்து வருகிறது.

பெயர்[தொகு]

ரிக்வேதத்தில் செனாப் நதி அசுக்கினி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது என கூறப்படுகிறது[3][4]. (VIII.20.25, X.75.5). இந்த பெயரின் பொருள் இந்நதியில் இருண்ட நிறத்தில் நீர் ஓடியாதாகக் கூறப்படுகிறது. கிருட்டிணா என்ற பெயரையும் அதர்வ வேதம் சுட்டிக்காட்டுகிறது.

மகாபாரதத்தில், இவ்விரு நதிகளும் பொதுவான சந்திரபாகா என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. ஆறு தொடங்கும் இடத்தில் இதை சந்திரபாகா என்றுதான் அழைக்கிறார்கள். ஏனெனில் சந்திரா மற்றும் பாகா நதிகளின் சங்கமத்திலிருந்து நதி உருவாகிறது. இந்தப் பெயரானது பண்டைய கிரேக்கர்களுக்கும் தெரிந்த பெயராக இருந்த்து. அவர்கள் தங்கள் நாகரீகத்திற்கு ஏற்ப சந்திரோபாகாசு, சந்தாபாகா, கேண்டாபிரா போன்ற பல்வேறுவகையான பெயர்களை பயன்படுத்தி அழைத்தனர்.

பாரசீகர்களின் செல்வாக்கினால் சந்திராபாகா என்ற பெயர் செனாப் என்று எளிமைப்படுத்தியிருப்பது, இடைக்காலத்தின் ஆரம்ப காலங்களில் நிகழ்ந்திருக்கலாம், வரலாறு , வானவியல், சோதிடம் போன்ற துறைகளில் வல்லவராக இருந்த அல் பிருனியின் எழுத்துக்களிலும் இதற்கான சான்றுகள் காணப்படுகிறது.

== வரலாறு == .

செனாப் ஆறு வேத காலத்தில் இருந்தே இந்தியர்களுக்குத் தெரிந்திருக்கிறது[5][6][7]. கிமு 325 இல் மகா அலெக்சாண்டர் அலெக்சாண்ட்ரியா நகரத்தை சிந்துவின் (இன்றைய உக்சு செரீப் அல்லது மிதன்கோட் அல்லது பாக்கித்தானில் சச்சரன்) சங்கமத்தில் நிறுவியதாகக் கூறப்படுகிறது. சிந்து மற்றும் பஞ்சாப் நதிகளின் ஒருங்கிணைந்த நீரோடை தற்போது பஞ்சநாடு நதி என்று அழைக்கப்படுகிறது[8].

அணைகள்[தொகு]

இந்தியாவின் சம்மு காசுமீரில் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பழைய பாலம்
செனாப் ஆற்றுப் பாலம்,உலகின் மிக உயர்ந்த இரயில் பாலம்

செனாப் நதியில் இந்தியாவின் முக்கியமான மின் உற்பத்தி திறன் நிகழ்கிறது
. சலால் அணை - ரியாசிக்கு அருகிலுள்ள 690 மெகாவாட் நீர் மின் திட்டம்
பக்லிகார் அணை - தோடா மாவட்டத்தில் படோட் அருகே ஒரு நீர்மின்சார திட்டம்
துல் அசுத்தி நீர்மின் நிலையம் - கிசுட்டுவார் மாவட்டத்தில் 390 மெகாவாட் வகை மின் திட்டம்
பக்கல் துல் அணை - கிசுட்வார் மாவட்டத்தில் ஒரு துணை நதி மருசாதர் ஆற்றில் முன்மொழியப்பட்ட அணை
ராட்டில் நீர்மின் நிலையம் - கிசுட்வார் மாவட்டத்தில் டிராப்சல்லா அருகே கட்டுமானத்தில் உள்ள மின் நிலையம்
கிசுட்வார் மாவட்டத்தில் அமைந்துள்ள கிரு நீர் மின் திட்டம் (624 மெகாவாட் முன்மொழியப்பட்டது)
கிசுட்வார் மாவட்டத்தில் அமைந்துள்ள குவார் நீர் மின் திட்டம் (540 மெகாவாட் முன்மொழியப்பட்டது)

இவை அனைத்தும் 1960 இன் சிந்து நீர் ஒப்பந்தத்தின்படி "ஓடும் ஆற்று நீர் திட்டங்கள் ஆகும். இந்த ஒப்பந்தம் செனாப் நதியை பாக்கித்தானுக்கு நீர் ஒதுக்குமாறு கூறுகிறது. இந்தியா தனது தண்ணீரை உள்நாட்டு மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக அல்லது நீர் சக்தி போன்ற "நுகர்வு அல்லாத" பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம். குறிப்பிட்ட அளவு வரை தண்ணீரை சேமிக்க இந்தியாவுக்கு உரிமை உண்டு. சலால், பக்லிகார் மற்றும் துல் அசுத்தி போன்ற மூன்று நீர்மின் திட்டங்கள் இதுவரை முடிக்கப்பட்டுள்ளன. பாக்கித்தானுக்கும் செனாப் மீது மூன்று அணைகள் உள்ளன:

மராலா எட்வொர்க்சு - சியால்கோட் அருகே அமைந்துள்ளது காங்கி எட்வொர்க்சு - குச்ரான்வாலா மாவட்டத்தில் அமைந்துள்ளது டிரிம்யூ பேரேச்சு - யாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது

மேற்கோள்கள்[தொகு]

  1. "River Chenab". மூல முகவரியிலிருந்து 27 September 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 8 Dec 2016.
  2. "Indus Waters Treaty". The World Bank. பார்த்த நாள் 8 Dec 2016.
  3. Kapoor, Subodh (2002), Encyclopaedia of Ancient Indian Geography, Cosmo Publications, p. 80, ISBN 978-81-7755-298-0
  4. Kaul, Antiquities of the Chenāb Valley in Jammu 2001, பக். 1.
  5. "Hobson-Jobson: A glossary of Anglo-Indian colloquial words & phrases and of kindred terms".
  6. https://www.britannica.com/place/Chenab-River, Chenab River on Encyclopædia Britannica, Retrieved 8 Dec 2016
  7. Encyclopædia Britannica article on the Chenab
  8. Alexandria (Uch)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செனாப்_ஆறு&oldid=2868407" இருந்து மீள்விக்கப்பட்டது