கர்ட்லி அம்ப்ரோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Curtly ambrose2 crop.jpg

கர்ட்லி அம்ப்ரோஸ் என்றழைக்கப்படும் சர் கர்ட்லி எல்கான் லின்வால் அம்ப்ரோஸ் (ஆங்கிலம்:Sir Curtly Elconn Lynwall Ambrose பிறப்பு செப்டம்பர் 21, 1963) மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். வலதுகை வேகப்பந்தாளரான அம்ப்ரோஸ் அன்ரிகுவாவைச் சேர்ந்தவர். இவரும் கொட்னி வோல்ஷும் தொடக்கப் பந்தாளர்களாக இணைந்து விளையாடிய 49 ரெஸ்ற் போட்டிகளில் மொத்தமாக 421 இலக்குகளை வீழ்த்தியுள்ளனர். 98 ரெஸ்ற்களில் விளையாடிய அம்ப்ரோஸ் 405 இலக்குகளை 20.99 என்ற சராசரியுடன் வீழ்த்தினார். இந்தச் சராசரியை விடச் சிறந்த சராசரியை மேற்கிந்தியர்களான மல்கம் மார்ஷல் (20.94), ஜோல் கானர் (20.97) ஆகிய இருவரும் மட்டுமே கொண்டுள்ளனர்.[1][2]

சான்றுகள்[தொகு]

  1. Selvey, Mike (30 August 2000). "Two-metre terminators final act: Mike Selvey salutes the demolition man, Curtly Ambrose". The Guardian (London): p. 26. (ஆங்கில மொழியில்)
  2. "Statsguru: Test matches: Bowling records". ESPNCricinfo. பார்த்த நாள் 15 October 2012. (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ட்லி_அம்ப்ரோஸ்&oldid=2715636" இருந்து மீள்விக்கப்பட்டது