குஜ்ரன்வாலா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஜ்ரன்வாலா மாவட்டம்
گُوجرانٚوالا
மாவட்டம்
பஞ்சாப் மாகாணத்தில் குஜ்ரன்வாலா மாவட்டத்தின் அமைவிடம்
பஞ்சாப் மாகாணத்தில் குஜ்ரன்வாலா மாவட்டத்தின் அமைவிடம்
நாடுபாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப்
தலைமையிடம்குஜ்ரன்வாலா
அரசு
 • District Coordination OfficerMuhammad Aamir Jan
பரப்பளவு[1]
 • மொத்தம்3,622 km2 (1,398 sq mi)
மக்கள்தொகை (1998)[2]:23
 • மொத்தம்34,00,940
 • அடர்த்தி701/km2 (1,820/sq mi)
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
வருவாய் வட்டங்கள்5
மொழிகள் (1981)97.6% பஞ்சாபி[3]

குஜ்ரன்வாலா மாவட்டம் (Gujranwala District), பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 36 மாவட்டங்களில் ஒன்றாகும். 34,00,940 மக்கள் தொகையும், 3,622 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்ட இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் குஜ்ரன்வாலா நகரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

3622 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட குஜ்ரன்வாலா மாவட்டத்தின், 1998-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 34,00,940 ஆகும். அதில் ஆண்கள் 17,70,225 (52.05%) ; பெண்கள் 16,30,685 (47.95%) ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி (1981 - 98) 2.85% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 939 நபர்கள் வீதம் உள்ளணர். பாலின விகிதம் 108.6 ஆண்களுக்கு, 100 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 56.5% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 63.60 % ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 48.80 % ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயத்திற்குட்பட்டவர்கள் ஆக உள்ளனர். [4]

இம்மாவட்டத்தில் பஞ்சாபி மொழியை 97.3% மக்களும், உருது மொழியை 1.9% மக்களும், மற்றும் பிற மொழிகளை 0.8% மக்களும் பேசுகின்றனர்.[2]:27

மாவட்ட நிர்வாகம்[தொகு]

குஜ்ரன்வாலா மாவட்டம் ஐந்து மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்; குஜ்ரன்வாலா, குஜ்ரன்வாலா சதர், வசீராபாத், கமோங்கி மற்றும் நௌஷெரா வீர்கான் ஆகும்.

முக்கிய நகரங்கள்[தொகு]

குஜ்ஜரன்வாலா, அரூப், நந்திப்பூர், கியுலா திதர் சிங் நகரம், வசீராபாத் மற்றும் கமோங்கி முதலியன் இம்மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் ஆகும்.

போக்குவரத்து[தொகு]

பெசாவர்கராச்சியை இணைக்கும் முக்கிய இருப்புப் பாதை குஜ்ரன்வாலா மாவட்டத்தின் வழியாக செல்கிறது. சியால்கோட், ஹபீசாபாத், குஜராத் மாவட்டங்கள் தொடருந்து]]கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gujranwala | Punjab Portal". 22 ஆகஸ்ட் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 1998 District Census report of Gujranwala. Census publication. 37. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1999. 
  3. Stephen P. Cohen (2004). The Idea of Pakistan. Brookings Institution Press. பக். 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0815797613. https://archive.org/details/ideaofpakistan0000cohe. 
  4. "GUJRANWALA DISTRICT AT A GLANCE" (PDF). 2017-08-29 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-02-17 அன்று பார்க்கப்பட்டது.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2008-04-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-02-17 அன்று பார்க்கப்பட்டது.