சிந்து நீர் ஒப்பந்தம்

சிந்து நீர் ஒப்பந்தம் (Indus Waters Treaty) சிந்து ஆற்று நீரை இந்தியாவும் பாக்கிஸ்தானும் பகிர்ந்து கொள்வதற்காக செப்டம்பர் 19, 1960-இல் ஏற்பட்டதாகும்.[1][2]அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவும் பாக்கிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் இதில் கையெழுத்திட்டார்கள். உலக வங்கி மூன்றாவது சாட்சியாக ஒப்பமிட்டது.[3]
இதன் படி சிந்து ஆறும் அதன் துணை ஆறுகளும் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டன. சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்றும் மேற்குப் பகுதி ஆறுகள் எனவும், பியாஸ், சத்லஜ், ராவி ஆகிய மூன்றும் கிழக்குப் பகுதி ஆறுகள் எனவும் பிரிக்கப்பட்டன. இதன்படி கிழக்குப் பகுதி ஆறுகளின் நீரை முழுக்க பயன்படுத்த இந்தியாவிற்கும் மேற்குப் பகுதி ஆறுகளின் நீரை முழுக்க பயன்படுத்த பாகிஸ்தானுக்கும் உரிமை வழங்கப்பட்டது. கிழக்குப் பகுதி ஆறுகளின் நீரை இழந்ததற்காகக் பாக்கிஸ்தானுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டது.
இவ்விரு நாடுகளும் இவ்வொப்பந்தம் தொடர்பான தரவுகளைப் பரிமாறிக் கொள்ளவும் ஒத்துழைக்கவும் நிரந்தரமான ஓர் ஆணையத்தை ஏற்படுத்தின. அது சிந்து ஆணையம் என அழைக்கப்பட்டது. இவ்விரு நாடுகள் சார்பிலும் ஓர் ஆணையர் அதற்கு நியமிக்கப்படுகின்றனர்.
சிந்து நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தம்
[தொகு]22 ஏப்ரல் 2025 அன்று பாக்கிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் ஒரு கிளையாக எதிர்ப்பு முன்னணி அமைப்பின் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பைசரன் பள்ளத்தாக்கில் இருந்த 26 சுற்றுலாப் பயணிகளைச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைக் கண்டித்து இந்திய அரசு பாக்கிஸ்தானுடன் செய்துகொண்ட சிந்து நீர் ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதுடன், சிந்து ஆற்றின் நீர் பாக்கிஸ்தானுக்குச் செல்ல முடியாதபடி தற்காலிகமாக தடுத்துள்ளது..[4][5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Why India and Pakistan signed the Indus Water Treaty in 1960". The Indian Express (in ஆங்கிலம்). 2024-09-20. Retrieved 2025-04-24.
- ↑ Indus Waters Treaty
- ↑ "Indus Waters Treaty | History, Provisions, & Facts | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). 2025-04-23. Retrieved 2025-04-24.
- ↑ "பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு! தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா?". Dinamalar.com. Retrieved 2025-04-24.
- ↑ "Govt suspends Indus treaty, expels Pak advisors, cancels visas, closes Attari". The Indian Express (in ஆங்கிலம்). 2025-04-24. Retrieved 2025-04-24.
- ↑ செய்திப்பிரிவு, இணையதள (2025-04-24). "சிந்து நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தம்... பாகிஸ்தானை எதிர்க்கும் ஆயுதமாவது எப்படி?". Dinamani. Retrieved 2025-04-30.
வெளி இணைப்புகள்
[தொகு]- Is the Indus Waters Treaty the latest India-Pakistan flashpoint?
- Bibliography Water Resources and International Law பரணிடப்பட்டது 2011-02-09 at the வந்தவழி இயந்திரம் See Indus River. Peace Palace Libray
- The Indus Waters Treaty: A History பரணிடப்பட்டது 2008-11-28 at the வந்தவழி இயந்திரம். Henry L. Stimson Center.
- Ministry of Water Resources, India பரணிடப்பட்டது 2005-12-20 at the வந்தவழி இயந்திரம்